மீள்பிரசுரம்: யாழ் – மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள் யாழ் – மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள்

 இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. – சனிக்கிழமை 01, டிசம்பர் 2012 – இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு மாத்திரமே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடரப்போவதாக மாணவர் தலைமை  அறிவித்துள்து.

இந்நிலையில், யாழ்ப்பாண மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும், இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,  தமிழ் மாணவர்களின்   ஜனநாயக  உரிமையை முன்னிறுத்தியும், தென்னிலைங்கை சகோதர இன மாணவர்கள் பாரிய ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர் .

இது பற்றி முன்நிலை சோஷலிச கட்சி உறுப்பினரும், இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான சஞ்ஜீவ பண்டார ஊடகங்களுக்கு கூறுகையில்: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டார – மற்றும் முன்னிலை சோஷலிச கட்சின் மாணவர் அமைப்பின் முன்னெடுப்பில் , மாத்தறை  ருகுணு பல்கலை கழகத்திலும், கண்டி பெரதேனியா பல்கலைகழகத்திலும், வரலாற்றில் முதல் தடவையாக  தமிழ் மக்களின் – மாணவர்களின் உரிமைகளை வலியுறுத்தி 29.11.2012 அன்று உணர்வு பூர்வமான பாரிய ஆர்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

அத்துடன், நாளை (02.12.2012 ) முன்னிலை சோஷலிச கட்சி, தமிழ் மக்களின் மாவீரர் தினம் கொண்டாடும் உரிமையை வலியுறுத்தி , ஊடக பிரச்சாரத்தை முன்னெடுக்க  போவதாக, கட்சின் பிரசார செயளாலர் புபுது ஜெயகொட கூறியுள்ளார் .
http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/220-2012/1563-2012-12-01-12-49-04