முன்னுரை
வேலூர் மாவட்டத்தில் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. அவற்றின் அமைப்பும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் அவைகள் பெறும் இடத்தைக் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.
விரிஞ்சிபுர மார்க்கபந்தீசுவரர் கோயில்
கரன் என்னும் சுராசுரனுக்கு அருள்பாலித்த வரலாற்றையும் தென்கயிலாயக் கிரிப்பிரதட்சிண விழாவில் கரிகாற் சோழ பூபதிக்குத் துக்கம் காட்டிய வரலாற்றையும் இக்கோயில் உணர்த்துகின்றது.
“பாலிமாநதித் தெய்வநீராடிய பலத்தா
லாலமாயவ னேயமாயவன் புரத் தடைந்தான்
சாலுமப்பதி யடைந்திடு மரும்பெருந் தவத்தாற்
சூலபாணியாம் வழித்துணை மருந்தரைத் தொழுதான்”1
இதன் வழி, அரசன் தெய்வத் தன்மையுள்ள அப்பாலாற்றின் நீரில் மூழ்கிய பலத்தினால் அன்புடன் திருமால் பூசை செய்ததாகிய விண்டுபுரியிற் சேர்ந்தான். இவனைத் தொடர்ந்து கௌரி, பிரமதேவர், திருமால் ஆகியோரும் முனிவர்கள் பலரும் பாலாற்றில் மூழ்கி நீராடி மார்க்கபந்தீசுவரரைப் பூசித்து மலையை வலம் வந்தனர். இவ்வகையில் இவ்வழி துணையம்பதி தென் கயிலாயங்கிரி போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனையே,
“மன்னிய விமானந்தோன்று மிடமெல்லாம் வானோர்நாடா
மின்னிசை முரசங்கேட்டு மிடமெலா மயனா டென்பர்
சென்னியர் துதினோசை தெரிவிடந் திருமாலூரா
முன்னிய சிவன்வாழ் கோயி லுருத்திர னுலகமாமே”2
சிவலிங்க பெருமான் வீற்றிருக்கிற இடமெல்லாம் தேவருலகத்துக்குச் சமானம் என்றும் அங்கு முழங்கும் இனிதான ஓசையுள்ள முழவு கேட்குமிடமெல்லாம் திருமால் லோகமென்றும் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோயிலானது திருகண்டருத்திர லோகமாகிய கைலாசம் என்றும் அத்தலத்தின் முக்கியத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது. கரிகாற் சோழ பூபதிக்கு மார்க்கபந்தீசுவரர் கிரிப் பிரதட்சண விழாவின் போது அருள்புரியும் காட்சி, மாசி மாதம் அருணாசலேசுவரர் திருவண்ணாமலை பள்ளிக் கொண்டாப்பட்டில் வல்லாள மாமன்னர் காலமானதற்குத் திருக்கருமம் செய்வதைப் போல் இருந்தது. தென் கயிலாயகிரி முகப்பில் இடபம் இருந்து வருவதும் அங்குள்ள மலையாள அன்பர் இடபக்கொடி பறக்கவிட்டு அதில் வேட்டு வெடித்துத் தென் கயிலாயகிரி பிரதட்சிண விழாவில் மார்க்கபந்துவை வணங்கி, திருவிழா கொண்டாடுவதும் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிற சிறப்பாகும்.
இலக்கியத்தில் விரிஞ்சிபுரம் கோயில்
வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரிலுள்ள மார்க்கப்பந்தீசுவரர் திருக்கோயில் புராண மேன்மையும் வரலாற்றுச் சிறப்பும் கலையழகும் கொண்ட ஒரு பிரார்த்தனைத் தலம், பட்டினத்தடிகள், அருணகிரிநிõதர், அப்பய்ய தீட்சிதர் பாடிய தலம். அருணாசலத்தில் பிரம்மன், திருமால் இருவரது போட்டியில், நிம் அடியையும் முடியையும் காணாதவாறு அழலுருவாய் நன்றார் இறைவன். புறங்கூறி பிரம்மனுக்குச் சாபம் கொடுத்த புராணத்தின் பிற்பகுதி நகழ்ந்த தலம் விரிஞ்சிபுரம் (விரிஞ்சன் – பிரம்மன்) பிரம்மதேவன் சாப விமோசனம் பெறுவதற்காகத் தேர்ந்தெடுத்த தலம். பிரம்மதேவன் கோயில் சிவாச்சாரியார், சம்புசர்மா என்பவருடைய திருமகளாக அவதரித்தார். சிவசர்மன் என்ற பெயரில் வாழ்ந்த சம்புசர்மா இறைவன் திருவடியடைந்தார். சம்புசர்மனின் மகன் சிறுவனாக இருந்ததால், கோயில் பூசை உரிமையை அவரது தாயாதிகள் பறித்துக் கொண்டனர். சிவசர்மனது தாய் வறுமையில் உழன்றார். மார்க்கசகாயர் சிவசர்மனுக்கு வழிகாட்டத் திருவுளங் கொண்டு கார்த்திகைத் திங்கள் கடை சனிக்கிழமை இரவில், சிவசர்மனது தாயின் கனவில் தோன்றி அடுத்த நாள் காலை பிரம்ம தீர்த்தக் குளத்தில் சிவசர்மனுக்கு மங்கள நீராட்டிக் காத்திருக்கும்படியும் தாம் உரியனச் செய்வோம் எனக் கூறி மறைந்தருளினார். அடுத்த நாள் காலை அவ்வாறே அம்மையார் சிவசர்மனுக்கு நீராட்டிக் காத்திருக்கும்போது, ஈசன் ஒரு முதிய அந்தணர் உருவில் தோன்றி சிவசர்மனுக்கு உபநியனம் தீட்சை அனைத்தையும் செய்வித்து உடன் மறைந்தருளினார். முதல் நிõள் இரவில் இறைவன், குறுநல மன்னர்கள் கனவில் கூறியபடி அம்மன்னர்கள் பொற் சிவிகைக் கொணர்ந்து அதில் சிவசர்மனை உட்கார வைத்து வெளித் திருச்சுவற்றில் திருவீதி வலம் வந்து கோயிலின் திருமுன்பு நன்றனர். கோயில் அருச்சகர்கள் மன்னர்களைக் கண்டதும் பூட்டியிருந்த திருக்கதவங்களைத் திறந்தனர். மன்னர்கள், சிவசர்மன் சிவபெருமானுக்குப் பூசை நகழ்த்துவார் எனக்கூறி மற்ற சிவாச்சார்யார்களை ஒதுங்கியிருக்குமாறு பணித்தனர். ஆயினும் தாயாதிகளான மற்றவர்கள் அழுக்காறு கொண்டு மூன்றடி உயரமுள்ள சிவசர்மன் 18 மீட்டர் உயரங் கொண்ட சிவலிங்கத்திற்கு திருமுழுக்காட்டுச் செய்ய இயலாது. தங்களில் ஒருவரையே கூப்பிட நேரிடும் என்று காத்திருந்தனர். மேலும், பெரிய சிவலிங்க உருவின் முன் சிறிய பாலகனான சிவசர்மன் எவ்வாறு பூசை செய்யப் போகிறான் என இரங்கி நன்றாள். சிவபக்தியின் பெருமையை விளக்க வேண்டிய பிரம்மதேவனாகிய சிவசர்மனும் அழுக்காறு கொண்டு நன்றிருக்கும் உறவினர்களும் பெருவியப்பு எய்த இறைவர் தம் திருமேனியை சிவசர்மனுக்கு எட்டுமாறு சாய்ந்து நன்றருளினார். சிவசர்மன் என்ற அச்சிறுவனின் வழிபாட்டு ஆராதனைகளை ஏற்றுக் கொண்டார். இதனை,
“மான்சாயச் செங்கை மழுவலம்
சாய வனைந்தகொன்றைத்
தேன்சாய நில்ல திருமேனி
சாய்த்த சிவக்கொழுந்தே”3
எனப் பட்டினத்தடிகளார் திருக்கயிலாயநிõதனைப் பாடுவது இதற்கும் பொருந்தும். திருப்பனந்தாளில், தடாகையின் பூசைக்காகத் தமது திருமேனியை வளைந்து கொடுத்த இறைவன், திருக்கடையூரில் வாழ்ந்த சிவனடியார் குங்கலிக் கலைய நிõயனாரின் பெருமையை உலகறியச் செய்வதற்கு அவரால் தமது சாய்ந்த முடி நமிரப் பாடினார். இங்குச் சிவசர்மனாக வந்த பிர்மதேவன் நகழ்த்திய வழிபாடுகளை என்றுமே நனைவில் இருக்கும் பொருட்டு, சாய்ந்த திருமுடியுடனேயே காட்சியளிக்கின்றார் என ஒப்புமைப்படுத்துவது ஆராயத்தக்கது. இப்பெருமானின் திருவடியைப் பெற வேண்டி அருணகிரி நிõதரும் தன்னுடைய திருப்புகழில்,
“நகரில் பஞ்சபூதமு நனையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு – மவிரோதம்
நகழ் தருமப்ர பாகர நரவயம்ப ராபர
நருபவங் குமாரவெ – ளென வேதம்
சதுர சங்க சாகரமென முழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர் – அறியாத
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீகம் – தருள்வாயே
திருவிரிஞ்சை மேவிய – பெருமாளே”4
என்று ஐம்பூதங்கள் நனைக்கின்ற நெஞ்சும், உயிரும் நெகிழும்படி கூட்டுவிக்கின்ற ஒளி உருவான திருவிரிஞ்சையில் வீற்றிருக்கும் பெருமானே எனப் போற்றிப் புகழ்கிறார். இவர் பாடிய திருப்புகழில் 15 பாடல்கள் திருவிரிஞ்சைத் தலத்துக்காகப் பாடியுள்ளார். குறிப்பாக, ‘விரிஞ்சை’ என மூன்று பாடல்களும், கரபுரம் என இரண்டும், கரபுரி எனப் பத்தும் பாடியுள்ளார். விரிஞ்சிபுரம் சிறப்பான வரலாறுகளைக் கொண்ட சிவன் தலம். உமாமகேசுவரன் வழிபாட்டில் இது ஒரு வைப்புத் தலம். வேலூர் மாவட்டக் கோயில்களில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். இக்கோயில் சைவச்சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களுக்குக் கயிலையாகவே காட்சி தரும். இங்கே ‘மார்க்கப்பந்து’ என்னும் திவ்ய நாமத்தோடு மரகதக் கொடியாக தமது வாம பாகத்தில் அம்மையை வைத்துக் கொண்டுள்ளார். கயிலைக் காட்சியின் பிரதிபலிப்பாக அழகிய மதில்களோடும் கூட கோபுரங்களோடும் மண்டபங்களோடும் தீர்த்தங்களோடும் பரிவார தேவதைகளோடும் விளங்கும் அழகான சூழலில் கண் நரம்ப காட்சி தந்து, போதும் என்னும் அளவுக்கு கருணை புரிகிறான். பொதுவாகக் கோயில்கள் எழுப்பப்படுவதற்குக் காரணங்கள் உண்டு. ஆனால், வழித்துணைநாதர் உருவாவதற்குப் பலவகையான சிறப்புகள் நிடைபெற்றுள்ளது என்று இப்புராண நூலிலுள்ள மார்க்கசகாயர் துதி கூறுகையில்,
“முளைத்தவரை முனையிடத்தின் முழுத்தவரை
மகிழ்ந்தவரை முருகன் வேலாற்
துளைத்தவரை யெனவெனது பழவினையை யலைத்
தவரைச் சுடர்க் குன்றாகக்
கிளைத்தவரை வளைத்தவரை யொருசிறுவன்
கிளையோடு கிளரச் சென்னி
வளைத்தவரை வணிகனுக்கு வழித்துணையாய்
நிடந்தவரை வழுத்துவோமே”5
இதன் வழி, இயல்பாக உண்டாகிய மலைகளின் உச்சியிலிருந்து, குறைவில்லாமல் தவம் செய்து திருமுடி வணங்கினவரை, ஒரு வர்த்தகனுக்கு வழித்துணையாக நிடந்தவரைத் துதி செய்வோம் என்று கூறுகின்றது. இத்தல நாயகனான மார்க்கபந்துவைத் தமிழன்பர்கள் வழித்துணைநாதர் என்று கொண்டாடுகிறார்கள். ‘துணையின்றி öநிடுவழி போக வேண்டாம்’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் வழித்துணைநாதன் கண் முன்பு தோன்றுவான். இந்த நெடுவழி என்பது நிமது இன்றைய இலக்கமிடப்பட்டுள்ள öநிடுஞ்சாலைகளைக் குறிக்காது. இவ்வழியைத் தான் சான்றோரும் ஆன்றோரும் நிமது வாழ்க்கை வழி நன்று எடுத்துக் காட்டுகின்றனர். ஆழ்ந்து யோசிப்போமானால் வாழ்க்கை என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு நீண்ட கரடு முரடான நெடுவழி என்பது புலனாகும். இவ்வழியில் செல்லுகையில் எத்தனையே இடையூறுகள் ஏற்படும். அத்தகைய இடையூறு ஏற்படும்போது இறைவன் மனிதனுக்கு மட்டும் ஆறறிவை அளித்துள்ளான். இந்த அறிவை நேர்வழியில் செலுத்தி, நாம் நின்மையடைய வழித்துணை நாதனாக வரும் இறைவனை வணங்கலாம். இப்பழம்பெரும் பதியான இது பொற்பனங்காடு, கரபுரம், கராபுரி, விரிஞ்சிபுரம், விரிஞ்சை, மூதூர் என்றெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வேலூர் மக்கள் போற்றி வணங்கி வழிபடுகின்றனர். திருவடிக் கல்வி கற்றுணர்ந்தவர் செல்வன் கழலேத்துந் செவ்வாய் செல்வம் பெற்ற சிவனடியார் ஆவர். திருவருளால் யாவர்கட்கும் நின்னெறி உய்க்கும் வழித்துணையாவார். மேலும், மருந்தாகவும் விளங்குகிறார். அத்தகைய திருவுடையார் முன்பு, மேலாகிய கல்வியைக் கற்றிலாதவர் கழித்தொதுக்கும் பழித்துணையாவர். சிவபெருமான் மனமடங்கச் செய்தருளுவன். ஆருயிரைக் காக்கும் துணையாவான். இதனையே திருமூலர் திருமந்திரத்தில்,
“வழித்துணை யாய்மருந் தாயிருந்தார்முன்
கழித்துணையாங்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாய்உம்ப ராய் உலகேழும்
வழித்துணை யாம் பெருந் தன்மை வல்லானே”6
விண்ணவர் முதலாகச் சொல்லப்படுகின்ற ஏழுலகத்தார்க்கும் மும்மை நிலமெய்த செம்மை வழித்துணையாயிருப்பவனாகிய சிவனைத் திருமூலர் இத்தலத்துக்கு வந்து பாடியமைப் புலனாகிறது.
புராண ஆதாரம்
கர்ண பரம்பரையாகவும் சிவபுராண ஆதாரங்களையும் கொண்டு பார்க்கும்போது மார்க்கபந்து நான்கு யுகங்களில் நிõன்கு இடங்களில் கோயில் கொண்டதாகக் கூறப்படுகிறது. முதல் யுகத்தில் இவ்வூருக்கு அருகில் உள்ள இறைவன் காடு என்னும் ஊரில் கோயில் கொண்டிருந்ததாகக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறினாலும், அவ்வூரிலும் அரசமரத்தடியில் மிகப் பெரிய சிவலிங்கமும் மேலும் சில ஆதாரங்களும் கிடைக்கின்றன. இரண்டாம் யுகத்தில் வேலூருக்குச் செல்லும் வழியில் செதுவாலைக்கு அருகில் இடிந்த செங்கல் கட்டிடத்தில் உள்ள சிவலிங்க மூர்த்தி பிரபல்யமாக இருந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. தற்போதும் அந்த இலிங்கம் கவனிப்பாரன்றி உள்ளது. அவ்விடம் ஏரிக்கரைக்கு அடுத்து இருந்ததாகவும் கல்வெட்டுச் செய்திகள் சில பகர்கின்றன. மூன்றாம் யுகத்தில் பாலாற்றின் வடகரையில் வயல்களுக்கு இடையில் முட்புதர்களும், புதர்களும் சூழ போற்றுவாரின்றி இருக்கும் பொற்பனை ஈசன், கரன் என்னும் அரக்கனை ஆட்கொண்டதால் ‘கரபுரம்’ என்று பெயர் பெற்றிருந்தது. அப்பொற்பனை ஈசன் கோயிலுக்கு வடக்கே பாய்ந்து கொண்டிருந்த பாலாறு காலப்போக்கில் தெற்கில் கால் கொண்டு பாய்ந்து விரிவு பெற்று கரபுரம் அழிந்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. ஓரிரு சிறுகோயில்கள் இன்றும் ஆற்றிற்கு இடையில் இருப்பது இதற்குச் சான்றாகும். இத்தலத்திற்கு அருகே ஓடும் நிதி மிகவும் புனிதம் வாய்ந்த நிதியாகத் திகழ்கிறது. இப்பாலி நிதியில் மூழ்கினால் பாவம் தீருமென திருவிரிஞ்சைப் புராணத்தில் உள்ள கரபுரி சருக்கம் கூறுகையில்,
“முக்தியைக் கொடுக்கும் பாலிநிதியிலே முழுகினார்க்குச்
சித்தியு மெளிதாமிம்மை மறுமையின் வினையுந் தீரு
மத்தகுநிதியினீரால் விளைந்த நெல் லமுதுண்டாருக்
குத்தமரல்லா ரில்லத் துண்ட தீவினையுந் தீரும்”7
முக்தியைத் தருவதாகிய பாலாற்றில் முழுகினவர்களுக்கு அஷ்டசித்திகளும் உண்டாகும். இப்பிறப்பிலும் முன் பிறப்பிலும் உண்டாகிய வினைகளும் தீரும், தகுதியுள்ள அந்நீரினால் விளைந்த öநில்லரிசி புசித்தவர்களுக்கு நேரிட்ட பாவமும் தீரும். இப்பழம்பெரும் பதியானது கௌரிபுரி, விண்டுபுரி, கரபுரி, விரிஞ்சைபுரி, மூதூர், கரபுரம் மற்றும் பொன் பனங்காடு என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. இத்தலத்தை அருணாசல புராணத்தில் ‘அரண் பூசை புரிந்த திருவிரிஞ்சை’ என்று சிறப்பிக்கப்படுகிறது. பெரிய தவம் செய்கின்ற வசிட்ட முனிவர் கரபுரியின் சிறப்பை விளக்கும்போது அதைப் பல முனிவர்கள் கேட்கின்றனர். பின்னர் அவர்கள் வசிட்டரை நோக்கி, இத்தலத்துக்கு இத்தனை பெயர்கள் எப்படி வந்தன என்று வினவ, வசிட்டரானவர், தம்முடைய தந்தையாகிய பிரமன் பெயரால் இவை வந்ததென இயம்புகிறார் என இத்தல புராணம் கூறுகிறது. இத்தலத்தின் வேறு பெயர்களையும் ஒட்டுமொத்த சிறப்பையும் பாயிரப் பாடல் ஒன்று கூறுகையில்,
“சத்திபுரி யானதுவும் விண்டுபுரி யானதுவுந் தலத்தினாம
மெத்து கரபுரியெனவும் விரிஞ்சைபுரியெனவு முன்னே விதித்தவாறும்
பக்திசெய்யும் வணிகனுக்கு வழித்துணையாய் நிடந்து மொரு பனவன்வேண்ட
முத்தி வழிகாட்டியதும் பாலகனுக் கிறங்கியது மொழிகுவேனே”8
இதன் வழி, சத்திபுரியானதும் விண்டுபுரியானதுமான இந்தத் தலத்தின் பெயர்கள் கரபுரி என்றும் திரிவிரிஞ்சைபுரி என்றும் ஆதியில் வழங்கியது. பக்தி செய்த ஒரு வர்த்தகனுக்கு வழித்துணையாய் அமைந்தது. மேலும், ஒரு பிராமணன் துதி செய்ய அவனுக்கு மோட்ச வழி காட்டியது என்று இப்பாயிரம் உரைப்பதால் அறியலாம்.
விரிஞ்சை மார்க்கபந்தீசுவரர் கோயில்
பிரமதேவர் இத்தலத்தின் மகனாக அவதரித்துச் சுவாமியை வழிபட்டதால், விரிஞ்சிபுரம் எனப் பெயர் பெற்றது. சாவித்திரனுக்குப் பெருமாள் காட்சியளித்த இடம், இப்போது கயிலாசநிõதர் கோயிலாக விளங்குகிறது. கார்த்திகைக் கடைசி ஞாயிறு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் வீற்றிருக்கும் பரமசிவத்தை வழிபடுவதினால் பெறக்கூடிய நின்மைகள் பற்றி இத்தல புராண நூலில் உள்ள பாயிரம் கடவுள் வணக்கமாகக் கூறுகையில்,
“தொன்மையுடன் புதுமையின்றிக் குணம் வேறின்றித்
தோற்றமுட னாசமின்றித் தொடர்ச்சியின்றி
நின்மையுடன் றீமையின்றி முதலீறின்றி
நிடுவுமின்றிப் பரவிந்து நிõதநீங்கி
யுன்மனையுங் கடந்துசுக வுருவாயெல்லா
வுயிர்க்குயிரா யொளியாகி வெளியாயோங்குஞ்
சின்மயனைக் கரபுரியி லமருங்கோவைச்
சிந்திப்போங் கரங்களினால் வந்திப்போமே”9
பழமையுடன் புதுமையில்லாமலும், யாதொரு குணமில்லாமலும், உருவமும் – உருவ நாசமுமில்லாமலும், பந்தமில்லாமலும் நின்மையுடன் தீமையில்லாமலும், ஆதி அந்தமில்லாமலும் பரவிந்து நிõதங்களையும் கடந்து உன் மனையையுங் கடந்து ஆனந்த வடிவமாய் எல்லாவுயிர்க்கு முயிராகியும் ஒளியாகியும், வெளியாகியும் ஓங்கிய ஞான சொரூபனாகிக் கரபுரியென்றுமொரு பெயருள்ள திருவிரிஞ்சைபுரத்தில் வாழ்கின்ற பரமசிவத்தைத் தியானம் செய்து கைகளால் வழிபடுவோம் என்று கூறியதோடு மட்டும் நல்லாமல், எல்லா சிவதலங்களை விடச் சிறந்த சைவ தலமென்று மற்றொரு பாடலில்,
“பதிகள் யாவினும் விளங்கிய விரிஞ்சையம் பதிபோ
னதிகள் யாவினும் விளங்கிய பாலிமா நிதிபோற்
றுதிகுலாவிய தாரகைக் கணத்துளே தோன்று
மதியமாமென விளங்கினார் மருவிலாவதிட்டர்”10
சிவதலங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய விரிஞ்சையும் பதி போலவும், நிதிகளெல்லாவற்றிலும் மேலானதாய் விளங்குகின்ற பாலி நிதி போலவும், யாவரும் துதிக்குந் துதி விளங்குகின்ற நிட்சத்திர கூட்டங்களுக்குள் விளங்குகின்ற சந்திரனைப் போலவும் குற்றமில்லாமல் இருக்கும் தலம் என்கிறது.
விரிஞ்சை மார்க்கபந்தீசுவரர் கோயில்
விரிஞ்சன் எனும் சொல் பிரமதேவனைக் குறிக்கும். பிரமதேவர் இத்தலத்தின் அர்ச்சகருக்கு மகனாக அவதரித்துச் சுவாமியை வழிபட்டதால் விரிஞ்சிபுரம் என்னும் பெயர் வழங்கி வருகிறது. மைசூர் குந்தளபுரியில் தனபாலன் என்னும் வணிகர் மிளகு வணிகம் செய்து வந்தார். இவர் ஒரு சிவபக்தர். ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் மிளகு வியாபாரம் செய்யும் பொருட்டு மிளகுப் பொதியை ஏற்றிக் கொண்டு வர, மாலைப் பொழுதானமையால், விரிஞ்சையம்பதியில் தங்க ÷நிரிட்டது. கள்வர்களின் செயல்களைக் கேட்டறிந்து இருந்த இவர் விரிஞ்சைப் பெருமான் சந்நதியையடைந்து ‘பரமமே நீ யெனக்கு வழித்துணையாக வந்து காப்பாய் எனில், உனக்கு யான் பத்து மிளகுப்பொதிகளைத் தருவேன் என்று வேண்டி, அன்றிரவு முழுதும் அங்கே அவர் தங்கியிருக்கவே, பெருமான் அவரது கனவில் தோன்றி நிõளை நனைக்கத்தக்க வழித்துணை அமையும்; நீ யாதொரு அச்சமுமன்றி மிளகுப் பொதிகளை ஏற்றிச் செல்வாய்’ என்று அருளினார்.
“வந்துதோன்றி யாம்வழித்துணை யாகவே வருவோம்
சிந்தைநீ களித்தெழுகென வுரைத்துமுன் சென்றா
னைந்துமாகதி யடவிலே நிடத்தினா னயந்த
புந்தியான்மகிழ் வணிகனும் பின்வழி போனான்”11
இவ்வாறு பரமசிவம் வந்து தோன்றி உனக்கு நிõம் வழித்துணையாகவே வருகிறோம் நீ மனமகிழ்ந்து புறப்படு என்று சொல்லியதை விரும்பிய மனத்தினால் மகிழ்ந்த அந்த வர்த்தகனும் அவர் பின்வழி நிடந்தான் என்று விரிஞ்சைத் தலபுராணம் கூறுகிறது.
திருவிரிஞ்சை கோபுரமும் மற்றும் விமானச் சிறப்பும்
வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சையில் உள்ள கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் உள்ள கோபுரங்களும் விமானங்களும் சிறப்பும் பெருமையும் வாய்ந்தவை. இக்கோபுரங்களைக் கோயிலின் அழகுக்காக மட்டுமின்றி, தன்னுடைய கருத்துகளைக் கல்வெட்டு வடிவிலே கோபுரத்துச் சுவர்களில் எழுதி வைக்கவும் பயன்படுத்தினர். விசய நிகர மன்னர் தேவராய மகாராயர் ஆட்சி செய்த கி.பி.1426 ஆம் ஆண்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “படைவீட்டு ராஜ்யத்து அசேஷ வித்ய மகா ஜனங்கள் பிரமாணப்பெருமக்கள் அனைவரும் கூடி விவாகத்தைக் கன்யாதானமாக செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அவ்விதமில்லாமல் பொன் கொடுத்தும் பொன் வாங்கியும் வரதட்சணை விவாகம் செய்பவர்கள் இராஜ துரோகத்திற்கு உட்பட்டு பிராமண்யத்திற்குப் புறம்பானவர் என்று தீர்மானிக்கப்பட்டார்கள் ”12 இவ்வாறு தங்கள் கருத்துகளை அக்காலத்திலேயே அதாவது விசய நிகர மன்னர் ஆண்டபோது நிடைபெற்ற சமூகச் சீர்திருத்த சாசனத்தின் விளக்கத்தைக் கோபுரத்தில் எழுதியமையை இன்றும் காண முடிகிறது. இக்கோபுரத்தின் விமானம் ‘கூட’ என்னும் அமைப்பினை உடைய பழமை வாய்ந்த கலைநியம் கொண்ட விமானமாகும். இக்கோயிலின் கோபுர சிறப்புப் பற்றி அக்கோயில் புராண நூல் கூறுகையில்,
“சீதமாயொளியுருவாஞ் சந்திரகாந்
தச்சிலையாஞ் சிகரந்தோறுஞ்
சோதிபாயுங் குமுதபதி”13
என்று ஒளிபாய்கின்ற சந்திரனுடைய அமுத கிரணங்கள் உடைய கோயில் என்று சிறப்பிக்கப்படுகிறது. மேலும்,
“கமனிய நெடுஞ்கோடி கலந்த வெண்சுதைத்
தமனிய மகுடமேற் றறித்த கோபுர
முமையவட வஞ்செயா தொழிக்க வேண்டுமென்
றிமகிரி தடுக்க வந்திருத்தல் போலுமே”14
ஆகாயத்தைப் பொருந்துகின்ற நெடிய கொடிகள் பொருந்தியதால் வெண்சுதைத் தீட்டப்பெற்றுப் பொற்கலம் வைத்திருக்குங் கோபுரம் பார்வதி தேவியாரின் முந்தவஞ் செய்யாமல் ஒழிக்க வேண்டுமென்று இமயகிரி தடுப்பதற்கு வந்திருத்தல் போலிருக்கின்றது எனவும் கூறுகின்றன.
“மீனக்குலஞ்சேர் நெறிக டந்து
வெயிலோ னெறிக்கு மேலாகிக்
கூனற்பிறை வெண்மதி யிடையே
தவழும், பெரிய கோபுரத்தின்
றானத்திடையே பரம்பரையாத்
தழைத்த சிகரத்தலைப் பரப்பில்
வானத் துலவுஞ் சுரநிதிக்கு
மதகுபோல வழிவிடுமே”15
சூரியன் செல்லும் வழிக்கு மேலாகி, நிட்சத்திரங்கள் செல்வதற்கு வழிவிட்டிருக்கும் எனப் பெருமையுடன் உரைக்கிறார். இக்கோயிலுக்கு மூன்று வாயில்கள் அமைந்துள்ளன. இவ்வாயில்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு என அமைந்துள்ளன. தெற்கு புறம் வாயில் இல்லை. கிழக்குப் புறமாக அமைந்துள்ள இராச கோபுரம் வழியாகத்தான் இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இக்கோபுரத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய ன்று திசைகளிலும் மூன்று வாயில்கள் அமைந்துள்ளன. இந்த இராசகோபுரம்,
1. கீழ்க் கோபுர வாயில்
2. மேல் கோபுர வாயில்
3. திருமஞ்சன வாயில்
என முறையாக அமைந்துள்ளன. தென்புறம் மட்டும் வாயில் இல்லாமல் கோபுரம் மட்டும் அமைந்துள்ளது.
திருவிரிஞ்சை மண்டபங்கள்
இக்கோயிலில் நிந்தி மண்டபம், திருமண மண்டபம் முதலியன உள்ளன. இந்தத் திருமண மண்டபத்தை வசந்த மண்டபம் என்பர். இம்மண்டபங்களில் எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நூற்றுக்கால் மண்டபமும், சம்புவராயர் கோபுரவாயிலின் நேர் எதிரே மகா மண்டபமும், உள் மண்டபமும் உள்ளன. திருமண மண்டபத்தில் சிவசர்மனுக்குச் சிவபெருமான் தமது திருமுடியைச் சாய்த்தருளிய நகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. சிவராத்திரி மகிமை, சிவ துர்கை, நிடன மாதர், இராமாயண, கிருட்டிண அவதாரக் காட்சிகள், தவழும் விநிõயகர், நிடனக் காட்சிகள் எனப் பல சிற்பங்கள் திருமண மண்டபத்தில் உள்ளன.
திருவிரிஞ்சை கோயிலின் மதிலமைப்பு
இம்மாவட்டத்திலேயே உயரமான, மிகப் பிரம்மாண்டமான, அழகிய திருச்சுற்றைக் கொண்டுள்ளது திருவிரிஞ்சை கோயிலாகும். இக்கோயிலின் மதில்கள் உயரமும் அகலமும் கொண்டு வியக்கத்தக்க வகையில் உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்றில் நால்வர், விநாயகர், பஞ்சமுக லிங்கம், தனிச் சந்நதியில் வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் நாக தேவதைகள், வருணலிங்கர் சண்டிகேசுவரர் மற்றும் எண்ணிறந்த உலாத் திருமேனிகளும் உள்ளன. இக்கோயிலின் மதிலில் கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. இவை அன்றைய மன்னர்களின் செயல்பாட்டை நலைநறுத்துகின்றன. இம்மதில்களே அரண்மனைக்கும் இன்றைய கோயிலுக்கும் எழிலாக உள்ளன.
திருவிரிஞ்சையின் கருவறையமைப்பு
இக்கோயில் கருவறையில் உருத்திராக்கப் பந்தலின் கீழ் அன்னை மாணிக்கவல்லி நான்கு திருக்கரங்களுடன் நன்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து நிடராசர் சன்னதி, நிடராசர் சிவகாமியின் திருமேனி போன்றவை உள்ளன. இக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிறப்பையும் வழிபடுவதின் மேன்மையையும் தல புராணம் கூறுகையில்,
“நெற்றியி லிலங்குநீறு நலவெழு நிகையுங் கையிற்
பற்றிய மழுவுமானும் பணிப்புயந் தரித்தநூலுந்
சுற்றரைபுனைந்த தோலுந்தோலின் மேலிசைந்த பாம்புஞ்
சிற்றடிச்சிலம்பும் வெள்ளிச்சிலம்பினிற் சென்ற கண்டார்”16
என்று திருவிரிஞ்சையில் உள்ள பரமசிவனின் சிறப்புகளை இப்பாடலானது இயம்புகிறது.
திருவிரிஞ்சையும் சிற்பமும்
திருவிரிஞ்சை சிற்பத்துக்கும் மதில் சுவருக்கும் பெயர் போனது. குறிப்பாக இக்கோயிலின் உள்ளே இருக்கும் சிற்பங்கள் கலைநியம் கொண்டவை. காலம் காட்டும் கல், கால பைரவர், அப்பைய தீட்சிதர் ஆகியவை இக்கோயிலில் உள்ள சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை எனலாம். விசய நிகர கலைப்பாணியின் கைவண்ணத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் விசய நிகரப் பெருவேந்தர்களால் முக்கிய தலமாகக் கருதப்பட்டதோடு, கோட்டையை அடுத்து கலைநியம் மிக்க கோயிலாக இதனை உருவாக்கினர்.
வேலூர்க் கோட்டையும் விசய நகர ஆட்சியும்
விசயநகர மன்னன் கிருட்டிணதேவராயர் காலத்தில் (கி.பி.1509-29) தென்னிந்தியாவின் 8பெரும்பகுதி அவரது ஆட்சியின் கீழ் இருந்தது. வேலூர் விசய நகர மன்னர் காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. இவருக்குப் பின் இவர் உடன் பிறந்தார் அச்சுததேவராயரும் (கி.பி.1530-1542) அவருக்குப் பின் அவர் மகன் சதாசிவராயரும் ஆட்சிப் புரிந்தார்கள். முசுலிம் படையினர் தொடுத்த 1565ஆம் ஆண்டு தலைக்கோட்டைப் போரில் சதாசிவராயர் தோல்வியுற்றார். கி.பி.1569இல் விசய நிகர மன்னர் நாட்டைக் கைப்பற்றினார். இவர் ஓராண்டு ஆட்சி புரிந்தார் இவர் விசய நகர நாட்டை மூன்றாகப் பிரித்தார். இதில் ஒன்றான தமிழ் மண்டலத்திற்குச் சந்திரிகிரியைத் தலைநிகராக்கி, அதன் பொறுப்பைத் தம் கடைசி மகன் வேங்கடபதியிடம் ஒப்புவித்தார். இவ்வேங்கடபதி மன்னர் (கி.பி.1586-1614) விசய நகர ஆட்சியை நலைப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். சந்திரகிரியைத் தலைநிகராகக் கொண்டிருந்த சிலர் வேலூரை கி.பி.1606ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தலைநிகராகக் கொண்டார். ‘இந்த கி.பி.1606ஆம் ஆண்டுதான் இவர் வேலூர்க் கோட்டையை அமைத்தார். சூரிய குண்டம் என்னும் குளத்துநீர் இக்கோட்டையின் அகழிக்குப் பாய்ந்தது. இவ்வேங்கடபதி வேலூர் மன்னர் எனப் புகழ்ப் பெற்றார். அதே காலத்தில் வேலூர் கோட்டை, கோயிலின் வடிவமாகவும் ஏற்கப்பட்டது”17 என இத்தல வரலாறு கூறுகிறது. இவர் காலத்தில் பொம்மு நாயக்கர் என்னும் சிற்றரசர் சலகண்டேசுவரர் கோயிலை நிறுவினார். இக்கோயிலின் நுழைவு வாயிலில் பொம்மு நாயக்கர் மனைவியுடன் சிற்ப வடிவில் உள்ளார். இங்குள்ள கல்யாண மண்டபம் இன்றும் விசயநிகர பேரரசின் கலைப் பணியை நனைவு கூறுகிறது. தூண்கள், சிற்பங்கள் என ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. விசய நிகர மன்னன் வேங்கடபதி ஆட்சியில் பொம்மநாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலானது பல போர்களின் இடையிலும் பலதாக்குதலுக்கு இடையிலும் படைகள் தங்குவதற்கும் அரசின் மற்ற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இக்கோயிலின் சிறந்த கட்டடக் கலை அமைப்புகளும் அரிய கலைச் சிற்பங்களும் விசயநிகர அரசையே சாரும். இந்த விசய நிகர மன்னர்கள் இவ்வூருக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியூர் என்னும் ஊரில் இதே கலைநியத்துடன் சோதிசுவரர் கோயிலை எழுப்பியுள்ளனர். இச்செய்தியினை இங்குள்ள ஆறு அடி உயரக் கல்வெட்டின் வாயிலாக அறியலாம்.
விசயநகர மன்னர்களின் உதவியுடன் பொம்மு நாயக்கர் வேலூரில் திறம்பட ஆட்சி செய்ததோடு, கோயில்களும் தனித்தன்மைப் பெற்று விளங்கின என்பதைத் ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் கே.கே.பிள்ளை கூறுகையில், “விசயநகர மன்னர்கள் வேலூர்க்கோட்டையை முழுவதுமாக கைப்பற்றி, சிற்பங்களையும், சிலைகளையும் அமைத்தனர். வழிபாடு மற்றும் பூசைகளும் சிறப்புற நிடைபெற்றன. இவர்களுடைய ஆட்சியில் அனைத்து செயல்பாடுகளும் சிறப்புடன் விளங்கியதோடு, தனித்தன்மை பெற்றுத் திகழ்ந்தது”18 இதற்கு மேல் சின்னபொம்முவின் புதல்வர் லிங்கம நிõயக்கர் என்பவர் பெயர் பெற்றவர். இவர் சைவ ஆர்வமுடையவர். ஆதலால் இக்கோயிலை சீரும் சிறப்புடனும் நிடத்திவந்தார். கோயிலில் உள்ள கலைகளை மக்கள் அறியச் செய்தவர். அது சார்ந்த வழிபாடு, விழா மற்றும் சொற்பொழிவுகளை நிடத்தினார். ஆனால், இது வெகுகாலம் நீடிக்கவில்லை. செஞ்சி நாயக்கரின் படைகளும் பேரரசர்களின் படைகளும் ஒன்று சேர்ந்து வேலூர்க் கோட்டையை 1606-இல் கைப்பற்றினார்கள். இதன் விளைவால் லிங்க நாயக்கர் பதவி இழந்தார். அத்துடன் வேலூர் நாயக்கருடைய வரலாறும் முடிவுற்றது.
இலக்கியத்தில் சலகண்டேசுவரர்
வேலூர் மாவட்டத்தில் இக்கோயில் சைவத்தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இவ்வூர் சங்க காலம் முதலே சிறந்த நிகரமாக விளங்கி வருகிறது. இத்தலத்தில் வீற்றிருப்பவர் சலகண்டேசுவரர். அம்பிகைக்கு அகிலாண்டேசுவரி என்று பெயர். இக்கோயில் உள்ள கோட்டையில்தான் சிப்பாய்க் கலகம் நிடைபெற்றது. தண்டபாணி சுவாமிகள் தாம் அருளிய வேலூர் பதிகத்தில் முருகனைப் பற்றிப் பாடியுள்ளர். மேலும் அருணகிரிநாதர் தாம் எழுதிய திருப்புகழில்,
“புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றி வேலூர் மேவிய தம்பிரானே”19
புகழ்பெற்ற காரணத்தால் கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில் அளகாபுரிபோல் பலவகையான வாழ்வால் மேம்பட்டு விளங்கிய பண்டிதர்கள் அல்லது தேவர்கள் போற்றிய வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே எனப் புகழ்கிறார். இவ்வூரைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ள காரணத்தால், இது ஐந்து நிலங்களில் ஒன்றான குறிஞ்சித் திணையென அழைக்கப்படுகிறது. இந்நிலத்திற்குத் தலைவன் முருகன் கடவுள் ஆவர். இங்குக் காணப்படும் கல்வெட்டுகள் யாவும் வேலூர்க் கோயிலில் குடி கொண்டுள்ள இறைவனின் பெயரை ‘ஜ்வரகண்டேசுவரர்’ என்றே குறிப்பிடுகின்றன. அதாவது ‘ஜூரத்தை அழிக்கும் ஈசன்’ எனப் பொருள் கொண்ட பெயராகும். ‘ஜூரகண்டேஸ்வரர்’ என்னும் பெயரே நாளடைவில் ‘ஜலகண்டேசுவரர்’ என மருவியதாகக் கூறுவர்.
சலகண்டேசுவரர் கோயில் வழிபாடு தொடங்கிய கால வரலாறு
இக்கோயில் வேலூர் நிகரிலுள்ள கோட்டையின் கிழக்குப் பகுதியை நோக்கியவாறு அமைந்துள்ளது. இக்கோயில் வரலாற்றிலும் புராணத்திலும் சிறப்புடன் இடம்பெற்றுள்ளது. 1928 முதல் இக்கோயில் கடவுளன்றி வழிபாடு இன்றி இருந்து வந்தது. 1980ஆம் ஆண்டுதான் வழிப் பிறந்தது. மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகள் அரும்பாடுபட்டு ஆகுதிகள் பல செய்து முறைப்படி வழிபாட்டினைப் புரிந்து, ஆடவல்லான் எனும் பெயர் கொண்ட சிவபெருமானை இக்கோயிலில் தோற்றுவிக்கச் செய்து வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். 1983 முதல் இக்கோயிலில் வழிபாடு தொடங்கியது. சப்தரிசிகளான வசிட்டர், அகத்தியர், கௌதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர், அத்திரி என்னும் ஏழு முனிவர்கள் இவ்வூரிலும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிவலிங்கங்களை அமைத்துச் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இதில் வசிட்ட முனிவர் ஆர்க்காட்டுக்கு மேற்கில் உள்ள வேப்பூர் என்னும் வேப்ப மரங்கள் நிறைந்த காட்டில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்.
சலகண்டேசுவரர் கோபுரங்களின் சிறப்புகள்
இக்கோபுரத்தின் பகுதிகள் முழுவதும் கற்களால் ஆனவை. கீழிருந்து ஒவ்வொரு நலையை அடைந்து, உச்சி வரையில் செல்ல உட்புறமாக மரத்தினால் ஆன படிகட்டுகளும் உள்ளன. கோபுரத்தின் வெளிப்புறத்தில் நான்கு பக்கங்களிலும் சிறந்த நாயக்கர் காலக் கலைப் பாணியில், கட்டடக் கலை நெஞ்சத்தை அள்ளுகின்றன. காலத்தால் புகழ்பெற்ற இக்கோயில் கோபுரங்கள் ஆகம விதிப்படி சிற்ப வேலைப்பாடுகள் முறையே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கோபுரம் கட்ட பொம்மி ரெட்டி, திம்மி ரெட்டி ஆகிய சகோதரர்கள் பெருமுயற்சி மேற்கொண்டனர். பின்னர் வந்த நிõயக்க மன்னர்கள் இருந்த சில குறைபாட்டையும் களைந்து கோபுரத்தை அழகுப்படுத்தியுள்ளனர். விசய நிகர நிõயக்க மன்னர்களுக்கே உரித்தான பாணியைக் கையாண்டு புதுப்பித்துள்ளனர். கோபுர அமைப்பு பிரம்மாண்டமான தன்மை இல்லையாயினும் கலைநியம் வாய்ந்தவையாகும். விசய நாயக்க மன்னர்களின் காலத்திற்குப் பிறகு வியக்கத்தக்க வகையில் கோபுர அமைப்பு சதாசிவ தேவமகாராயரால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எல்லா வகையான நிலைகளையுடைய சிற்பங்களும் இதிலுண்டு.
விசய நகர மன்னர்களும் வேலூர் கோட்டை மண்டபமும்
விசய நிகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கோயில் நர்மானப் பணிகள் சோழர் காலத்தை விட புகழுக்குரியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக மண்டபங்கள் பெயர் பெற்றவை. விரிவாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட தூண்கள் மீது நுட்பமான வேலைப்பாடமைந்த மண்டபங்கள் அமையப் பெற்றுள்ளன. இவர்களது மண்டபங்களுள் சிறந்தவையாக விளங்குவது வேலூர் கோட்டையிலுள்ள மண்டபங்கள்.
கலைநியம் கொண்ட மண்டபம்
கல்யாண மண்டபத்தில் மொத்தம் 46 தூண்கள் அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் திறந்தவெளி மண்டபத்தின் வெளிப்புறத் தூண்கள் 12. இம்மண்டபத்தில் தாமரை மலர் விரிந்த நலையில் தலைகீழாக வைத்தது போன்று சிற்ப அமைப்போடு திகழ்கிறது. திறந்த மண்டபத்தின் மையப்பகுதியிலும் உள்ளே கூர்ம மேடையின் எதிரிலும், விதானத்தில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகளும் கலை நியம் கொண்டவை. மண்டபத் தூண்களில், கலையழகு கொண்ட சிற்பங்களும் கைகோர்த்தவாறு நடன மாந்தர்களின் சிலைகளும் இம்மண்டபத்திற்கு மேன்மேலும் மெருகு சேர்க்கின்றன. இக்கோயில் கலைக்குச் சிகரம் வைத்தாற் போல அமைந்துள்ள பகுதி கலை மண்டபப் பகுதியாகும், கோயிலின் வெளிப்புறத்தில் தென் மேற்குத் திசையில் முதல் கோபுரத்தின் மேற்கே மதிற்சுவரையொட்டி அமைக்கப்பட்டுள்ள கல்யாண மண்டபம். பிற்கால விசயநகரக் கலைப் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.“வெளிநாட்டு அறிஞர் ‘பெர்சி பிரவுண்’ என்பவர், இம்மண்டபம் ஒரு தனி அருங்காட்சியகம் என்றும், புதைப்பொருள் ஆய்வாளர் திரு.லர்ங்கர்ஸ்ட் என்பவர் மதுரையிலும் விசய நகரத்திலும் உள்ள மண்டபங்களை விட அழகு வாய்ந்தது என்றும் தென்னிந்தியாவிலேயே உள்ள மிகுந்த கலையழகு வாய்ந்த மண்டபம்”20 என்று செயராசு குறிப்பிடுகிறார்.
கல்மண்டப அமைப்பு
ஒய்சாளர்கள் காலத்தில் அமைந்த நுணுக்கமான கலையம்சத்துடன் கூடிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் மண்டப வடிவங்களும் கருங்கற்களால் ஆனவை.
வேலூர்க்கோட்டை
இக்கோட்டையில் அமைந்த கோயிலின் சுவர் அழகிய கலைநியம் கொண்டதோடு, பாதுகாப்பானது. கோட்டையின் வடபுறச் சுவரின் உள் வாயில், படிகட்டுகள் கட்டி, அகழிநீர் வரை செல்வதற்கு ஏற்றவாறு அமைக்கப் பட்டுள்ளன. 67 மீட்டர் அகலத்தில் உள்ள அகழியை ஒட்டிக் கோட்டையின் வெளிப்புறச் சுவர் சுமார் ஒன்பது மீட்டர் உயரம் கொண்டது. முழுவதும் கற்களால் கட்டப்பட்ட இச்சுவர் கீழிருந்து மேல் நோக்கிச் சற்று உட்புறமாகச் சாய்ந்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. இச்சுவரின் உட்புற அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டமை பொறியியல் நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
கல்துளை அமைப்பு
இச்சுவரின் மேல் வரிசையில் அரை வட்ட வடிவிலான கற்கள் சிறு சிறு இடைவெளியுடன் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரை வட்டக் கல்லின் அடிப்பகுதியிலும் எறிவதற்கும் துப்பாக்கியினால் சுடுவதற்குப் பயன்படுமாறு நிடுவேயுள்ள துளை நேராகவும் இருபக்கங்களிலும் உள்ளவை பக்கவாட்டை நோக்கியும் அமைந்துள்ளன. இக்கற்களின் பின்புறம் மறைந்திருந்து எதிரிகளின் மீது கணைகளைத் தொடுக்கவும் துப்பாக்கியினால் சுடவும் இத்துளைகள் ஏதுவாக அமைந்துள்ளன. இக்கற்களின் இடையே அமைக்கப்பட்டுள்ள பொந்துகள் போன்ற சிறிய இடைவெளியின் வழியே கூட அம்புகளை எறியலாம். உட்புறமாகச் சுவரையொட்டியுள்ள தாழ்ந்த நலப்பகுதி ஒன்பதரை மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது. பாதை போன்று சுற்றிலும் அமைந்துள்ள இப்பகுதி, காவலர் தங்கும் வசதிகள் கொண்ட அறைகளுடன் காட்சியளிக்கின்றன. சுவர்களின் படிமேல் ஏறி கோட்டையின் உட்பகுதியைச் சுற்றிவர முடியும். அதையொட்டி மற்றொரு கனமான உட்சுவர் ஆறு மீட்டர் உயரத்தில் வெளிச்சுவரைப் போன்று அமைந்துள்ளது. இப்பகுதி, காவலர் தங்கும் வசதிகள் கொண்ட அறைகளுடன் காட்சியளிக்கின்றன. சுவர்களின் படி மேல் கோட்டையின் உட்பகுதியில் சுற்றிவர முடியும். அதையொட்டி மற்றொரு கனமான உட்சுவர் 6 மீட்டர் உயரத்தில் வெளிச்சுவரைப் போன்றே வளைந்தும் ஆங்காங்கே அரைவட்டச் சதுர வடிவங்களுடனும் அமைந்துள்ளது.
வேலூர்கோட்டை ஓவியங்கள்
நாயக்கர் கால ஓவியங்கள் பல இடங்களில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இக்கோயிலில் இரண்டு கோபுரங்களில் கூரையின் அடிப்பகுதியில் (விதானம்) ஓவியங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. முதல் கோபுரத்தில் எண்திசைக் கடவுளர்கள் ராகு, கேது, நிடனமாந்தர் ஆகியோரது புடைப்புச் சிற்பங்கள் மீதும் பிற இடங்களிலும் ஓவியங்கள் தீட்டி வைத்துள்ளனர். இரண்டாவது கோபுரத்தின் கூரையின் அடியிலும் (விதானம்) அவ்வாறே ஓவியங்கள் அமைந்துள்ளன. ராகு, கேது. சூரியன், சந்திரன் ஆகிய ஓவிய உருவங்கள் இப்போதும் காணப்படுகின்றன. இவ்வோவியங்களுக்கிடையில் தெலுங்கு எழுத்துகள் உள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் சிதிலமடைந்த நலையிலேயே உள்ளன.
வேலூர் கோட்டையும் சிற்பங்களும்
கோட்டையில் உள்ள கோயிலின் தெற்கிலும் வடக்கிலும் ஒவ்வொரு நலைக்கும் ஏற்றவாறு வாயிற்படி அமைந்துள்ளது. மாடங்களின் இருபுறமும் அழகிய துவார பாலகர்களின் சிற்பங்கள் சுதை வடிவில் உள்ளன. கோபுரத்து உச்சியின் கழுத்துப் பகுதியில் நான்கு மூலைகளிலும் கோபுரம் தாங்கிப் பொம்மைகளும் சிவபெருமான், பார்வதி, முருகன், கணபதி மற்றும் முனிவர்கள் ஆகியோரின் சுதைச் சிற்பங்களும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோபுர வாயிலில் இரண்டு பெரிய படிக்கட்டுகளை அமைத்து மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படிகளின் இருபுறமும் வாயில் நலைகளில் பின்னிய கால்களுடன் நற்கும் கொடி மங்கையரின் அழகிய உருவம் அமைந்துள்ளது. கோபுர வாயிலின் இருபகுதியிலும், வெளிப்புறமும் உள்புறமும் அழகிய பல புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவபெருமான், கணபதி, மகிசாசுரமர்த்தினி, உமா மகேசுவரர் போன்ற கடவுள்களின் சிற்பங்கள் தவிர, குறத்தி, குறவன் போன்ற சிற்பங்களும் இப்பகுதியை அழகுபடுத்துகின்றன.
இருவர் சிலைகள்
இக்கோயிலில் இருந்த நாயக்க மன்னர்கள் பல சிற்பங்களைச் செய்துள்ளனர். உதாரணமாக, கோயிலின் வலதுபுறம் அதாவது மேற்குப் புறமாக உள்ள முதல்நலைத் தூணில் அமைந்துள்ள புடைப்புச் சிற்பங்கள் பொம்மி ரெட்டியும், திம்மி ரெட்டியும் கரம் கூப்பி வணங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு உருவங்களில் உள்ளோர் சதாசிவ மகாராயரும் சின்னபொம்மு நாயக்கரும் ஆவர்.
கோட்டையின் சிற்ப அமைப்பு
தெற்கிலும் வடக்கிலும் ஒவ்வொரு நலைக்கும் வாயிற்படி உண்டு. அதன் இருபுறமும் துவார பாலகர்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளனர். இது மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடியது. இக்கோயிலின் கோபுர வாயில் இரண்டு பெரிய படிகட்டுக்களை அமைத்து மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படிகளின் இருபுறமும் வாயில் நலையில் பின்னிய கால்களுடன் நற்கும் கொடி மங்கையின் அழகிய சிற்பங்கள் உள்ளன.
சைவ – வைணவச் சிற்பங்கள்
இராமன், கிருட்டிணன், வரதராசப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், நிரசிம்மர், அனுமன் ஆகியேரது சுதைச் சிற்பங்களும், சிவபெருமான், நிடராசர், பைரவர், வீரபத்திரர், இலக்குமி, உமையம்மை சிற்பங்களும் உள்ளன. இதோடு மட்டுமின்றி சமூக வாழ்வியலைச் சுட்டிக்காட்டும் சிற்பங்கள் கூட அமைந்துள்ளன. அவற்றில் குறவன், குறத்தி, வேடுவச்சி ஆகியோரது சிற்பங்களும் உள்ளன. மேலும், குழந்தையுடன் கொஞ்சும் தாய் மிக நோர்த்தியாகச் சிற்ப வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இயற்கைக் காட்சிகள், கலை சிறப்புமிக்க புராணக் காட்சிகள், விந்தையான சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, ஒரே தலையும் உடலமைப்பும் கொண்ட யானையும், காளையும் சேர்ந்து அமைந்த அரிய உருவம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
இவ்வாறாக வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. இதன்வழி வேலூர் மாவட்டத்தில் சிறந்த வழிபாட்டுத் தலமாகவும் சிறந்த சுற்றுலா தலமாகவும் இவ்வாலயங்கள் திகழ்கின்றன என்பதனை அறியலாம்.
அடிகுறிப்பு
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை புராணம், ப.68.
மேற்படி,,பக்.68-69.
அ.மாணிக்கனார், பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் உரையும்) ப.404.
தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் உரை, பாகம்-4, பக்.50-51.
சைவ எல்லப்ப நிõவலர், திரிவிரிஞ்சை புராணம் (மூலம்), ப.2.
ப.இராமநாதபிள்ளை, திருமந்திரம் உரை (பாகம்-1), ப.124,
சைவ எல்லப்ப நாவலர், திரிவிரிஞ்சை புராணம் (மூலம்), ப.68.
மேற்படி, ப.6.
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை புராணம், கடவுள் வாழ்த்து.
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை புராணம், பா.7
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை புராணம், ப.80.
தேவராயர் ஆட்சி, கி.பி.1426ம் ஆம் ஆண்டு கல்வெட்டு – மொழி பெயர்த்தவர்:பீ.பெரியசாமி (ஆய்வாளர்), இடம்: திருவிரிஞ்சை, வேலூர், நாள் 10.9.2019
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை தல புராணம், ப.15
மேற்படி, ப.15.
மேற்படி, ப.14.
மேற்படி, ப.25.
ஜலகண்டேஸ்வரர் தருமஸ்தாபனம், ஜலகண்டேசுவரர் கோயில் வரலாறு, ப.40.
கே.கே.பிள்ளை, தென்னிந்திய வரலாறு, ப.30.
தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் தெளிவுரை, ப.42.20)
V.Jayaraj, Let us Preserve our Art and Culture, (North Arcot) P.27.
துணைநூற்பட்டியல்
இராமநாதப்பிள்ளை, (ப.ஆ) திருமந்திரம் உரை, சென்னை: கழக வெளியீடு, 1942.
சலகண்டேசுவரர் தருமஸ்தாபனம், சலகண்டேசுவரர் கோயில் வரலாறு, வேலூர்: சலகண்டேசுவரர் கோயில் தரும ஸ்தாபன வெளியீடு, 1985.
செங்கல்வராயன்பிள்ளை , தணிகைமணி (உ.ஆ) திருப்புகழ் உரை (பாகம் 2, 3) சென்னை: கழக வெளியீடு, 1999.
சைவ எல்லப்ப நாவலர், திருவிரிஞ்சை புராணம், சென்னை: டால்டன் அச்சுக்கூடம், 1950.
பிள்ளை, கே.கே., தென்னிந்திய வரலாறு, சென்னை: பழனியப்பா பிரதர்ஸ், 1984.
மாணிக்கனார், அ., (உ.ஆ) பட்டினத்தார் பாடல்கள், சென்னை: வர்த்தமானன் பதிப்பகம், 1991.
Jayaraj. V., Let us Preserve our Art and Cuture, Vellore: N.S.S.Units, D.K.M. College, 1993.
periyaswamydeva@gmail.com