இணைய இதழ்கள்

இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள்.  அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.  சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன.  சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன.  இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து,  செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம்.  இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது.  இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின.  தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள்.  அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.  சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன.  சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன.  இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து,  செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம்.  இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது.  இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின.  தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.

வெளிவரும் முறை:
    
இணைய இதழ்கள் அச்சு இதழ்களைப் போன்றே நாள்தோறும் வெளிவரும் இதழ்கள், வாரந்தோறும் வெளிவரும் இதழ்கள்,  மாதமிருமுறை வெளிவரும் இதழ்கள் என இணையத்தில் வெளிவந்து இலவச சேவையைத் தருகின்றன.  தங்களுக்கு வரப்பெறும் படைப்புகளின் அளவைப் பொறுத்து இணைய இதழ்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.  அதிக அளவில் படைப்புகள் கிடைக்கப்பெறுவதானால் நாள்தோறும் புதிய புதிய படைப்புகள் வெளியிடப்படும்.

பிரபலமான இணைய இதழ்கள்:
    
அதிக வாசகர்களைக் கொண்டு இலங்கும் இணைய இதழ்களை பிரபலமானவை என்ற பட்டியலில் சேர்க்கலாம்.  அவ்வகையில் திண்ணை, பதிவுகள், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், வரலாறு.காம், முத்துக்கமலம், அம்பலம், திசைகள், ஊடறு, ஆறாம் திணை, மரத்தடி, வெப் உலகம், தமிழ்சிபி, தோழி.காம் என்பவை இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் வலம் வரும் இணையத் தமிழ் இதழ்களில் சில: அக்னி பெண்கள் மாத இதழ், ஆறாம் திணை, இந்நேரம், உங்கள் நூலகம், உண்மை, உன்னதம், காலச்சுவடு, கீற்று, கூட்டாஞ்சோறு, உயிரோசை, தமிழ்த்திணை, தமிழ்நெட் மலேசியா, தமிழ்வாணன், தமிழம், தமிழகம், திசைகள், திண்ணை, தீம்தரிகிட, தென்செய்தி, தேனி, பதிவுகள், புகலிடப்புத்தகம், புதியகாற்று, புதுவிசை, புரட்சிபெரியார் முழக்கம், பூங்கா, பெண்கள், பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான் மாத இதழ்), நிலாச்சாரல், நெல்லை தமிழ், முத்துக்கமலம், மனஓசை, மையம், விழிப்புணர்வு, விடுதலை, இ-சங்கமம், அநிச்ச, தமிழ அரங்கம், தங்கமீன், வல்லினம், சொல்வனம், புதியபனுவல், தமிழோவியம், கூகிள் தமிழ், ஈழநாதம், தட்ஸ்தமிழ், கூடல் திணை, தமிழினி

இணையச் சிற்றிதழ்கள்:
 
இணையத்தின் மற்றுமொரு செய்தி வெளிப்பாட்டுக் கூறாக அமையப்பெற்றது தான் இணையச் சிற்றிதழ்கள்.  இவற்றின் வருகை பெருமளவு குறைவு தான்.  இச்சிற்றிதழ்களைப் பின்பற்றுபவர்களும் குறைவுதான்.  பெருமளவு அயல்நாடுகளில் வசிக்கும் தமிழன்பர்களால் விரும்பப்படுகின்றன.  அவர்களாலும் நடத்தப்படுகின்றன.  பொதுவாகவே இணைய இதழ்களைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்று சொல்லப்படுகிறது.  இதற்குக் காரணம் கணிப்பொறியைப் பயன்படுத்தும் நுட்பம் பெருமளவு இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரிவதில்லை.  பெருமளவு கணினியைப் பயன்படுத்தும் நுட்பம் வாய்க்கப் பெற்றவர்களோ தமிழ் இணைய இதழ்களைத் திரும்பிப்பார்ப்பது கூட இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி. ஒவ்வொரு இணைய இதழும் ஆசிரியர்,  உதவி ஆசிரியர், ஆலோசகர், ஆசிரியர் குழு என்ற அளவில் பல பதவிகளில் எழுத்தாளர்களை நியமித்துவெளிவந்து கொண்டிருக்கின்றன.  இவை எண்ணற்ற எழுத்தாளர்களை ஆர்வப்படுத்தும் முகத்தான் பலவகையிலும் வாய்ப்பு தர வேண்டும்.  இளம் எழுத்தாளர்கள் பலர் தங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஏற்ற களத்தினை எதிர்நோக்கி இருக்கின்றனர்; பல துறைகளில் வெற்றி முகம் காட்டுகின்றனர்.  அவர்களை தமிழ் இணையப் பரப்பிற்குள்ளாக இழுத்துவிட்டால் தமிழ் இணைய இதழ் என்பது மட்டுமல்லாமல் தமிழ் இணையப் பரப்பும் பார்வையாளரும் தமிழ் தொடர்பான புதிய மென்பொருள் ஆக்கங்களும் அபரிமிதமாகப் பெருக வாய்ப்பு வரும்.   

அதிக வாசகர்களை வசப்படுத்தும் முறை:
    
இதழ்களுக்கு அதிக வாசகர்களின் வரவு இன்றியமையாததாகிறது.  இந்த வாசகர் வட்டத்தைத் தக்க வைப்பதும் அவ்விதழ்களின் பொறுப்பில் ஒன்றாகிறது.  வாசகர் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற இணைய இதழ்கள் வாசகர்களைக் கவரும் விதமாக பற்பல போட்டிகளை அறிவித்து ஊக்கப் பரிசுகளை வழங்கலாம்.  இதனால் வாசகர்களும் தொடர்ந்து குறிப்பிட்ட இதழின் அபிமானியாக மாறி நாள்தோறும் பின்பற்றத் தொடங்குவார்கள்.  சில இணைய இதழ்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என்னும் அறிவிப்பை வெளியிட்டு வாசகர்களின் படைப்புகளை அவர்களுடைய புகைப்படத்துடன் வெளியிட்டு வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்கின்றன.

இணையத்தில் செய்தி வழங்கும் நாளேடுகள்:
    
நம்முடைய இல்லத்திற்குக் காகிதம் மூலம் செய்திகளைக் கொண்டு வந்து தரும்  நாளேட்டு நிறுவனங்கள் இணையம் வழியாகவும் செய்திகளைத் தருகின்றன.  செய்திகள் உடனுக்குடன் இணையத்தின் வழியே வெளியிடப்பட்டு நம்மை பயனடையச் செய்கின்றன.
சில நாளேடுகள் செய்தித்தாள் அப்படியே காகிதத்தில் இல்லத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதைப்போன்ற வடிவில் இணையத்தில் செய்திகளைப் படிக்க ஏற்பாடு செய்திருக்கின்றன.  இவை பிடிஃப் எனப்படும் வார்ப்பில் நமக்குக் காட்சிக்குக் கொடுக்கப்படுகின்றன.  செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரிண்டரின் உதவியுடன் அச்சடித்து கையில் எடுத்து வைத்துப் படிக்கும் அளவிற்கு நாளேட்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன.  இவை இ-பேப்பர் என்ற பெயருடன் வழங்கப்படுகின்றன.  இந்த வசதியைப் பெறுவதற்கு செய்தி நிறுவனங்களின் இணைய தளத்தில் பயனர் கணக்கினைத் தொடங்க வேண்டும்.
    
இவ்வாறு செய்திகளை இலவயமாக வழங்கும் நாளேடுகளும் அவற்றின் இணைய தளங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.     

தினமலர் : தினமலர் நாளேடு தினசரி என்ற அளவிலிருந்து ஒருபடி மேலாக மின்னிதழாக வலம் வருகிறது.  செய்திகளை உடனுக்குடன் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிடுகிறது.  மேலும் தொலைக்காட்சிகளைப் போன்று செய்திகளையும் வழங்குகிறது.  மாலை 4 மணி செய்தி என்றும் இரவு எட்டு மணி செய்தி என்றும் தொலைக்காட்சி வடிவத்திலேயே இணையத்தில் செய்தியை வழங்கி வருகிறது.  பல செய்திகளை இணையத்தில் ஏற்றினாலும் சில செய்திகளுக்கு காட்சிப்படுத்துதலையும் மேற்கொள்கிறது.  இக்காட்சிப்படுத்தலில்  குரலும் பின்னணியில் இடம்பெறுகிறது.  மற்றபடி தன்னுடைய தினசரி செய்தித்தாளில் வெளிவரும் அத்தனை அம்சங்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.மேலும் சில செய்தித்தாள்கள்: தினமணி , மாலைமலர், தினகரன்,  தமிழ்முரசு, தினத்தந்தி , மக்கள் ஓசை , தினபூமி , முரசொலி 

நன்றி: http://silambukal.blogspot.ca/2012/09/blog-post_9.html ,