கணினித்தமிழ்: (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் குறித்த செய்திகளை அறிய உதவும் நூல்)

கணினித்தமிழ்: (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் குறித்த செய்திகளை அறிய உதவும் நூல்) இந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.

கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது? அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா? என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

Continue Reading →

தமிழர்கள் பெருமைப்படத்தக்க ‘நூலகம்’!

எண்ணிம நூலகச் (Noolaham Digital Library)செயற்பாடுகளில் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்த நூலக நிறுவனமானது இன்று மேலும் பல துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தல் , ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல் துறைகளில்…

Continue Reading →

கலைக் களஞ்சியன்: இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)

ஆனந்த விகடன் சஞ்சிகையின் 2016 டாப் நபர்கள்; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள். நண்பர் மயூரநாதன் விக்கியபீடியா (தமிழ்) பிரிவுக்கு கடந்த பல…

Continue Reading →

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து இலங்கை (கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச பயிற்சிப்பட்டறை!

[அண்மையில் இலங்கையில் உத்தமம் அமைப்பு சார்பாக இலங்கையில் அதன் செயற்குழு உறுப்பினர் திரு.சரவணபவானந்தன் அவர்களின் முன்னெடுப்புகளால் இரண்டுநாள் பயிலரங்கம் 8,9-நவம்பர் 2016   நடைபெற்றது. அதன் நிகழ்வுகளைப் பற்றிய விபரங்களை முனைவர் துரை மணிகண்டன் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். – பதிவுகள் -]

8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில்  உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன்  வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.  மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில்  தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.

Continue Reading →

‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றி இவர்கள்: ‘பதிவுகளும் நானும்’ குரு அரவிந்தன்.

– ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். – பதிவுகள் –


குரு அரவிந்தன் பதிவுகள் என்ற இணையப் பத்திரிகையுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது. இலக்கியக் கூட்டங்களில் பதிவுகளின் ஆசிரியரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன் ஆனால் இவர்தான் அதன் ஆசிரியர் என்பதைத் தொடர்பு படுத்திப் பார்க்கவில்லை. ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டில் வெளிவந்த ஒரு இதழில் ‘பல்லிக்கூடம்’ என்ற சிறந்ததொரு கதையை வ.ந. கிரிதரன் என்பவர் எழுதிப் பணப்பரிசு பெற்றிருந்தார். அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுடன் உரையாடும் போது பதிவுகள் ஆசிரியர் தான் இவர் என்பதை அறிந்து கொண்டேன். எனவே அவருடன் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினேன். அவருடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது அவர் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அவரிடம் பாரபட்சமற்ற நிறையவே தேடல் இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

ஒரு முறை அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவர் என்னிடம் ‘விகடனுக்கான ஆக்கங்களைத் தபால் மூலமா அனுப்புகின்றீர்கள்’ என்று வினாவினார். நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் நண்பர் சசிதரனின் பாமினி எழுத்துருதான் என்னிடம் இருந்தது. தமிழ் ஆரம் ஒளிநாடாவையும் பயிற்சி நூலையும் நான் முதலில் வெளியிட்ட போது எனக்கு ஒரு தமிழ் எழுத்துரு தேவைப்பட்டதால், பாமினி எழுத்துருவையே சசியிடம் இருந்து வாங்கியிருந்தேன். அப்பொழுது எழுத்துரு மாற்றிகள் பாவனையில் இல்லாத படியால் பாமினி எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் விகடனுக்கு என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது ‘அஞ்சலி’ என்ற எழுத்துருவில் ஆக்கங்களை அனுப்ப முடியுமா என்று ஆசிரியர வீயெஸ்வி அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். அதன் பாவனை எனக்குத் தெரியாததால் நான் தொடர்ந்தும் தபால் மூலமே விகடனுக்கு ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். காலதாமதத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போது நண்பர் கிரிதரன் எனக்கொரு ஆலோசனை தந்தார். எழுத்துருவை யூனிக்கோட்டாக மற்றி அனுப்பலாம் என்ற ஆலோசனையை முதலில் தந்தது அவர்தான்.

Continue Reading →

‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றி இவர்கள்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்), எழுத்தாளர் சத்யானந்தன்!

‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். – பதிவுகள் –


பார் போற்றும் ‘பதிவுகள்’     -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. கனடாவிலிருந்து வெளிவரும் நாள் இதழான ‘பதிவுகள்’ ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சுற்றுச் சூழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணித் தமிழ், நூல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் ‘ஆய்வு’ என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்காகும். இவை என்றும் என் மனதைக் கவர்ந்தவையாகும். தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் செறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடுவன. மற்றவை மனதில் உறைவன. இவ்வாறானவற்றை மேலோட்டமாகப் படிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பேருக்குமேல் தெரிவு செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப் பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.

Continue Reading →

‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’

– 25.07.2015 அன்று ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற ‘கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்’  என்ற  நிகழ்வில் ‘இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற ‘ஒபரேட்டிங் சிஸ்டம்’ எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.

Continue Reading →

இணையத்தில் தமிழ்!

இணையத்தில் தமிழ்!தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

Continue Reading →

மீள்பிரசுரம் (குமரிநாடு.நெற்): தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி

மீள்பிரசுரம் (குமரிநாடு.நெற்): தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ?

கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?

Continue Reading →

கணித்தமிழ்: நான்கு கணித்தமிழ்: தமிழ் எழுத்துருக்கள் – வடிவமைப்பும் சிக்கல்களும்

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -முன்னுரை
         இன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது. கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றி கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.

குறியீட்டு முறையும் எழுத்துருவும்
         கணிப்பொறியானது நமக்குத் தேவையான கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில் நாம் சொல்வதைப் பொறியானது புரிதல் அவசியம். எந்தமொழியைப் பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி மொழியிலே செயல்படுகிறது. அதாவது 0,1 போன்ற பைனாp எண்களே கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே கணிப்பொறி என்பது கணிப்பான மட்டுமே பயன்படும் போது எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும். மேலும் சேகரித்த தகவல்களைத் திரையில் பார்க்க எண்களை எழுத்துக்களாக மாற்ற வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன. இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு எண்ணிற்கும் என்ன வடிவம் என தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு குறியீட்டு முறையைப்  பயன்படுத்தி பெற்ற தகவல்களை மற்றொரு குறியீட்டு முறை கொண்டு அறிய முடியாது. எனவே ஆங்கிலம் போல தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.

Continue Reading →