பதிவுகள் வாசகர்களே! நண்பர்களே! உறவினர்களே! உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
மின்னஞ்சலைத் திறந்து கொண்டதும் முதலில் File ‘மெனு’வை அழுத்தி, அதன்பின்னர் ‘Properties’ஐ அழுத்திப் பின்னர் ‘Details’ஐ அழுத்தவும். இவ்விதம் அழுத்தும்போது details இம்மின்னஞ்சலை அனுப்பியவர் பற்றிய விபரங்களைத் தரும். உதாரணமாக இவ்விதமாக எனக்கு என் மின்னஞ்சலிலிருந்து வந்த மின்னஞ்சலை ஆராய்ந்தபோது கிடைத்த விபரங்கள் வருமாறு:
**************************************************************************************************
X-Apparently-To: ngiri2704@rogers.com via 206.190.37.208; Sat, 23 Apr 2011 18:39:04 -0700
X-YahooFilteredBulk: 186.81.163.62
Received-SPF: none (mta1006.rog.mail.bf1.yahoo.com: domain of ngiri2704@rogers.com does not designate permitted sender hosts)
X-YMailISG: 0xsHmkccZAq8nwSzHJ2IYE0jyyNtODt.9VDx1osJKK.yMgRL
w_pNv_wMbyuvKZlPMPNs1zJjnmiOFCTMMlVRmkuWt3VOw_VsVNrinlANS8ll
eCt9M9OFBcfqQ_dDEVfyBNM2qTkuf.3UFImnSD.rAhPMKsGGKD3RQE7i.2M4
cf9cQKpmoPaZu89Vq5.TeNt9FS0hd7LsjNyDnwCCWaiJ4Nnkn_Mm4xAAT9S2
GE096D1NH.DUEM57XbedaoTN7GtA8nYvirjnvJTbNtP3ZQc4sAGPPo0V6kI9
AstgnwVv2pcZpgDsYz5.slNNbVwmnXwUwntlnJnBOoc07cIrIuX.i6vLWmiD
aM65KcNppXki3Qc_SlwzA7tTbDK0.AwGD1FjfOv5vG6CuPQ70_uY_kfPgsUs
9ezq9RqVp0Iq4BxQ4fenIZ9kxfBpbBR0sGI0UtRLPcxh85cSkuHY8LNm9SWT
DhI_8ctKGxpnRNDVpkoI6Rd3esbxT9V9t3vgb.tid_uRbwzH0O1rF7kK6R4W
_Jtqm4r_JId2P3fuRpTmFlPFq3XeWHRfttE-
X-Originating-IP: [186.81.163.62]
Authentication-Results: mta1006.rog.mail.bf1.yahoo.com from=rogers.com; domainkeys=neutral (no sig); from=rogers.com; dkim=neutral (no sig)
Received: from 127.0.0.1 (HELO desktop) (186.81.163.62)
by mta1006.rog.mail.bf1.yahoo.com with SMTP; Sat, 23 Apr 2011 18:39:04 -0700
Message-Id: <6e8701cc01f6$7e1268a0$3ea351ba@desktop>
From: ngiri2704@rogers.com
To: ngiri2704@rogers.com
Subject: [Bulk] ngiri2704@rogers.com
MIME-Version: 1.0
Content-Type: text/html; charset=”ISO-8859-1″
Content-Transfer-Encoding: 7bit
*************************************************
மேலுள்ள தகவல்களிலிருந்து மேற்படி மின்னஞ்சல் 186.81.163.62 என்னும் IP முகவரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்பதை அறிந்து கொள்ளலாம். – ஆசிரியர், பதிவுகள் –