‘2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன. ஆனால் 15 ஆம் தேதியிலிருந்து களத்திலிருந்து எவ்வித தொடர்பும் இல்லை.புலத்திலிருந்து தொடர்பு இருந்ததே தவிர சரியான தகவல்கள் இல்லை.15,16,17 ஆகிய நாட்களில் என்ன நடைபெற்றது என்பதேரியவில்லை.தகவல்களும் இல்லை.ஒளிப்படங்களும் இல்லை. ஏதோ ஒரு கற்பனையில் “முள்ளிவாய்க்கால்” என்ற தலைப்பில் ஒரு ஓவியம் செய்தேன்.ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற “உயிர் உறைந்த நிறங்கள்”ஓவியக் காட்சியிலும் வைத்தேன்.அதன் பிறகு தப்பிவந்த போராளிகள். மக்கள் பலரிடம் 15,16,17 ஆகிய நாட்களில் நடைபெற்றவைக் குறித்து பலமாதங்கள் தகவல்கள் திரட்டினேன்.இரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.அவர்கள் கூறியவைகளை உள்வாங்கிக் கொண்டு 2௦10ல் 5அடி உயரமும்10அடி நீளமும் உள்ள இந்த ஓவியத்தை செய்தேன்.அது முள்ளிவாய்க்காலுக்கு சாட்சி