இத்துடன் ஞானம் 163 இதழையும் அனுப்பி வைத்துள்ளேன். ஞானம் குழுவினர் போர்க்கால இலக்கியம் என்ற 600 பக்க மலரை வெளியீடு செய்தது போல தற்பொழுது புலம் பெயர் இலக்கியம் ஒன்றை வெளியிட உள்ளனர். பல பல்கலைக் கழக மாணவர்கள் ஞானம் இதழை தங்கள் சிறப்பு பட்டத்துக்க ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புலம்பம் பெயர் வாழ்வினைப் பிரதிபலிக்க கூடிய தரமானதும் ஆழமானதுமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஞானம் குழுவினர் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள நற்றிணைப் பதிப்பகம் அகில உலக அளவில் நடாத்திய நாவல் போட்டியின் எனது கடவுச் சீட்டு என்ற நாவல் முதலாம் இடத்திற்கு தேர்வாகி இந்திய ரூபாய்கள் 50.000ஐயும் கையெழுத்துப் பிரதியாக இருந்த எனது நாவல் அவர்கள் மூலம் நூல் வடிவம் பெறுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். புலம்பெயர்வாழ் தமிழர்களின் எழுச்சிகளையும்; – வீழ்ச்சிகளையும் அதேவேளை வெற்றிகளையும் -தோல்விகளையும் காட்டும் வண்ணம் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற பலநாள் கனவு இந்த நாவல் மூலம் ஈடேறியுள்ளது. சுமார் 500 பக்கங்கள் வரை வளர்ந்துள்ள இந்த நாவல் புலம்பெயர்வாழ் தமிழரின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டு முகத்தை காட்டுகின்றது எனக் கொள்ளலாம். காரணம் இது உங்களினதும் எனதும் கதை!
கல் தோன்றா மண் தோன்றா காலத்தின் மூத்த குடி என பெருமை பேசி வாழ்ந்த ஒரு இனம் அகதி முகாம்களில் தட்டுகளை கையேந்த தள்ளப்பட்ட வாழ்வின் வலிகளைச் சொல்லுவதில் ஆரம்பித்து அடுத்த 25 ஆண்டுகள் அவர்களுடன் இந்த நாவல் பயணம் செய்திருக்கின்றது.
10-01-2014 தொடக்கம் 22-10-2014 வரை சென்னையில் நடைபெறவுள்ள 37வது சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டு 14-04-2013ல் பரிசளிப்பு நடைபெறவுள்ளது.
தகவல்: jeevakumaran5@gmail.com