நாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல் 5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால் அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள். இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?
மலாய்க்காரர்கள் மட்டுமே இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்ற தீய எண்ணத்தில் திட்டமிட்டு இந்தியர்களை வளரவிடாமல் கருவறுத்தவர் மகாதீர்.இந்நாட்டுக்கு வந்தேரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் இன்றும் மலேசிய மக்கள் ஒற்றுமையாக வாழவிடாமல்,இனதுவேச நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மகாதீரை மக்கள் தண்டிக்க வேண்டும்.எதிர்காலத்தில் நாட்டுப்பிரதமர்களாகப் பொறுப்புக்கு வருபவர்கள் இனியாகிலும் இந்தியர்களின் வாழ்வோடு விளையாடிப் பார்க்காமல் இருப்பார்கள் அல்லவா?
இன்றுவரையில் கூட முன்னாள் பிரதமர் என்ற நிலையை மறந்து மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்.எதிர்கட்சியினரை வம்புக்கு இழுக்கிறார்.அவர் சொல்வதைதான் அனைத்து மலேசியர்களும் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.எதிர்கட்சியினரும் இந்நாட்டுப் பிரஜைகள்தான் என்ற உரிமையை ஏற்கமறுக்கிறார்.மகாதிருக்கு இருக்கும் அதே உரிமைதான் எதிரணியிலுள்ளவர்களுக்கும் இருக்கின்றன என்பதை வேண்டுமென்றே மறுத்துப்பேசுகிறார்.
இன்னும் சொல்வதென்றால்,ஆளுங்கட்சியினர் செய்கின்ற அநீதிகளைத் தட்டிக்கேட்கும் சகல உரிமைகளையும் கொண்டவர்கள் எதிர்கட்சியினர் எனும் உண்மையை மகாதீர் விடாப்பிடியாக மறுக்கிறார்.இந்நாட்டின் ஜனநாயகத்தைக்குழிதோண்டிப் புதைக்க எண்ணும் மகாதீரின் தீய எண்ணத்தை மக்கள் தடுக்க வேண்டும். நாட்டு நலனை முன்னிறுத்தி வாக்குச் சீட்டு மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களின் பலத்தைக்காட்டவேண்டும்.அநீதியை எதிர்க்க மலேசியர்கள் அனைவரும் குறிப்பாக இந்தியர்கள் அணி திரள வேண்டும்.
பல்லினம் வாழும் இந்நாட்டை அநீதியாளர்களிடமிருந்து காக்க வேண்டும்.மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் ஓட்டளிக்க வேண்டும்.தேர்தல் நாள் அன்று மறவாமல்,தவறாமல் நாட்டை நீதியான வழியில் வழி நடத்தவிருக்கும் மக்கள் தலைவர்களுக்கு தங்களின் பொன்னான வாக்கை செலுத்த வேண்டும்.
arunveloo@yahoo.com
1.5.2013