நீண்ட பெரும் முயற்சி, உழைப்பு, பணச்செலவு, நேர அர்ப்பணம் எனத் தன்னியல்பின் வழி நின்று அர்ப்பண சிந்தையோடு செயற்பட்டதன் விளைவாக எமது கைகளில் இன்று வன்னியபற்றிய தாக்கம் மிக்க ஆவணத்திரட்டு ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இந்த முயற்சியைச் செய்தவர் நோர்வேயில் வாழ்ந்துவரும் வவுனிக்குளத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம். வவுனிக்குளம் 2ம் படிவத்தைச் சேர்ந்தவர். அங்கு கிராமசேவையாளராகப் பணியாற்றியதோடு திடீர்மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நிதவானாகவும் கடமையாற்றிய பெரிய தந்தையாரின் மகன் கந்தையா பரமநாதனுக்கும் வவுனிக்குளத்தில் 1958ம் ஆண்டு குடியேறியதிலிருந்து அப்பிரதேச மக்களின் அனைத்து நலன்களிலும் அயராது உழைத்த தனது தாயார் திருமதி கந்தையா வள்ளியம்மைக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணையும் மக்களையும் ஆத்ம சுத்தியோடு நேசிக்கும் ஒருவராலேயே இத்தகைய ஒரு ஆக்கத்தைச் செய்த தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் கந்தையா சுந்தரலிங்கம். “நாம் வாழும் வன்னிமண் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னுள் புதைத்துக் கொண்டு அடுத்த சந்ததிகளையும் வாழவைப்பதற்காக பரந்து விரிந்கிடக்;கிற, புதைந்து கிடக்கும் அந்த மண்ணின் வரலாற்றையும் வாழவைப்பாதற்காக அடுத்த சந்ததிகளுக்காகச் சொல்லவேண்டிய கடமையுணர்வை ஏநோ நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம். ஒரு பெரம் நீண்ட வரலாற்றின் வாரிசுகள் கதைபேசி உறவாடிய வாழ்க்ககை ஒன்றும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இது ஐரோப்பய காலனிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வன்னியரின் போராட்டக்களம். விருந்து படைத்த மருதம், நெய்தல், முல்லை மண்கள் கூடிக்கலந்த பண்பாடு துளித்த தாய் மண்வன்னி” எனத்தனது பதிப்புரைக்கு முத்தாரம் இடும் அவர், “அநதத் தாய் மண்ணும் மரபும் ‘சார்ந்து நாம் முன்னோர்கள் சந்தித்த எழுச்சிகளும் வீழ்சசிகளுட், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு சிலிப்பபான புதிய அனுபவத்தைத் தரக்கூடும், வயல், காடு, குளம், கடல் பறவை, விலங்குகள் என எங்கள் முன்னோர்கள்சந்தித்த இயற்கைச் சூழல் நம்கண் மன்னே விடைபெறுகின்றது. மரபுகளிலும் சூழல்களிலும் நாம் கொண்டிருக்கும் உணர்ச்ியற்ற போக்கு எதிர்காலச் சந்ததியினரை மேலும் மண்ணில் இருந்து அந்நியப்படுத்திவுடும். வரலாறு கிழித்துப்போடப்பட்ட இந்நொரு ஓவியமாகவே இன்று வன்னியைப்ப ◌ார்க்கமுடிகிறது. வரலாற்றின் நிகழ்வகளையும் மரபுகளையும் மாத்திரமின்றிகூழலையும் சேர்த்து கோர்வைப்படுத்துவது ஒரு சமூக வழிப்புணர்வனை உருவாக்கும். அது ஒரு மிக அமைதியான, அறிவுபூர்வமான சந்ததிகளின் வளர்ச்சிக்கு உதவும்” எனக்குறிப்பிட்டுள்ள அவர்என தனது பதிப்புரையில் மண்ணின் பெருமையையும், அங்கு புதையுண்டுள்ள தொன்மை வரலாற்றையும் வெளியே கொண்டுவரவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் தன்னுள்ளத்துள் கொண்டதன் பயனாக பதிவாக்கப்பட்டதே இந்த ஏடு.
இந்நூலின் சிறப்பிற்கு வன்னி மண்ணின் வரலாறும் அதன் பண்பாடும் மிக ஆழ அகலமான முறையிலே தகைசார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் துறைபோன கல்வியியலாளர்களின் பங்களிப்பைப் பெற்று அதனைத் தன்னகத்தே கொண்ட ஒரு புதையல்மிக்க வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கின்றது என்பதற்கு ஆதாரமாக அதனுள்ளே இடம்பெறும் கட்டுரைகள் சான்றாக அமைந்துள்ளன. இன்றைய யாழ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வரலாற்றுத்துறைப் பேராசிரியர், தொல்பொருள் ஆய்வாளர் சி.பத்மநாதன் அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை நல்கியிருப்பதோடு, மூன்று ஆய்வுக்கட்டுரைகளையும் உவந்தளித்துள்ளமை இந்நூலின் நம்பகத்தன்மையை வலியுறுத்தி நிற்பதனை வாசகர் மனங்கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றில் புலமைமிக்கவரான சி.பத்மநாதன் தனது முன்னுரையில் “இலங்கை வரலாற்றில் இலங்கைத் தமிழர் ஒர வங்சிக்கப்பட்ட சமூகம், என்பததை இந்நாட்களில் எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும் அவர்களைப் பொறுத்தவரையில் இருவிதமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்ள் புராதன காலம் முதலாக நாகரிக முன்னேற்றத்திலும் தொழில்நுட்பத்தைப் பெருக்குவதிலமு; பெரும் பங்குகொண்டிருந்தனர். ஆயுனும் இலங்கைப் பல்கலைக்கழகம் பெளியிட்ட இலங்கை வரலாறு அவர்களை ஓரங்கட்;டி விட்டது. அந்நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களிலும் ஈதேநிலைததான் காண்பபடுகிறது. கல்வித்திணைக்களம் வெளியிடும் பாடங்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இலங்கை வரலாற்றைக் காலம் பிரித்து நிதானமாக எழுதுவதனால் அவ்வகச் காலங்களிலர் நாட்டில் வாழ்ந்த சமூகங்கள் ஒப்பீட:டு அடிப்படையில் தேசத்து விவகாரங்களிலுர்ம் பாரம்பரியத்திலுங் கொண்டிருந்த இடத்தை விபரித்து எழுத வவ்ணடுமு;. அவ்வாறான ஒரு வரலாற்றைக் காண்பது பகற் கனவு போலாகிவிட்டது.” என்ற தனது மனதில் ஆழப்பதிந்துவிட்ட கருத்தினை முன்வைப்பதோடு, இந்நூலுருவாக்கம்பற்றி மனந்திறந்து பேசுகின்றார். “இந்த நூல் அடங்காப்பற்று வன்னி பற்றி இதுவரை வெளிவந்த நூல்களைவிட மிக விரிவானது. அவையாவற்றைக் காட்டிலும் மிகக் கூடிய அளவில் ஆதாரபு{ர்வமானது. பல பிரபலங்களான பேராசான்களும் பிற அறிஞர்களும் கட்டுரைகளை வழங்கிள்ளனர். வன்னி மாநிலத்தின் தொல்லியல், வரலாறு, இயற்கை வளம், குடித்தொகை தொழில்கள், மொழி வழக்கு இலக்கியமரபு, சமய, பண்பாட்டு நெறிகள் முதலான பிரதானமான விடயங்களைப் பற்றி கட்டுரைகள் இதில் அடங்கியுள்ள. வன்னிதொடர்பாக வேறெங்கும் காப்படாத பல விடயற்களை இதிலே கண்டுகொள்ளலராம்.” எனக்குறிப்பிட்டுள்ள அவர் “இந்நூல் நண்பர் கணபதிப்பிளளை சுந்தரலிங்கத்தின் விடாமுயற்சியின் பயனாகும். கட்டுரைகளைச் சேகரிப்பதிலம் நூல் தொடர்பாக அர்வ முகங்கொடுத்த பிரச்சினைகளைச் சமாளிப்பதிலும் அவருக்கேற்ட்ட சிரமங்கள் மிகவும் கடினமாவை. இந்த நூலை அவர் தனது சொந்தப்பணகொண்டு வெளியிடுவது இங்கு குறிப்பிடற்குரியதாகும். தனது மொயின் மீதும் தன்னைப் பெற்று வளர்த்த சமூகத்தின் மீதும் கொண்டுள்ள பாச உணர்வினாலும் இந்நூலை அவர் வெளியிடுவது எமது பாராட்டிற்குரியதாகும்” எனவும் குறிப்பிட்டள்ளமை நூலின உள்ளே இடம் பெறும் விடயங்களைப் பற்றிய முன்னோட்டமாக அமைந்துள்ளது.
1-12 “வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு”, பேராசிரியர் சி.பத்மநாதனால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை முதலாவதாக இடம்பெறுவது இந்நூலின் நம்பகத்தன்மை, பெருமை, கனதியான உள்ளடக்கம் என்பனவற்றிற்கு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.
13 தொடக்கம் 38 வரையான கட்டுரையாக வைக்கப்பட்டுள்ளமை ‘வன்னியின் வரலாறும் பண்பாடும் – அண்மைக்காலத் தொல்லியற் கண்டுபிடிப்புகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு” என்னும் கட்டுரையாகும். வரலாற்றுத்துறை ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் தலைவராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியர் ப.புஸ்பரட்ணத்தின் நுண்மான நுளைபுலத்தை வெளிப்படுத்தும் கட்டுரையாகும். இதில் வன்னியின் பூர்வ குடிகள் பற்றியும் அவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்களோடு வன்னியில் நகராக்கம் பற்றியும் கலிங்க மாகனின் ஆட்சிபற்றியும் ஆய்ந்துள்ளதோடு இப்பிரதேசத்தில் காணப்படும் தொன்மைமிக்க ஆலயங்கள் பற்றியும் நிழற்படங்களோடு விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செட்டிகுளம் சந்திரசேகரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம், சங்குப்பிட்டி பூநகரி மண்ணித்தலைச் சிவன் ஆலயம், கௌதாரிமுனை விநாயர் ஆலயம், முருகண்டிப பிள்ளையார் ஆலயம், வற்றாப்பழை கண்ணகி அம்மன் ஆலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம், உருத்திரபுரம் சிவன் ஆலயம், குமாரபுரம் சித்திரவேலாயுதர் ஆலயம், வவுனிக்களம் சிவன் ஆலயம், பனங்காமம் சிவன் ஆலயம் போன்றவற்றின் வரலாற்றுக்குறிப்புக்களையும் தனது கட்டுரையில் உள்ளடக்கியுள்ளார்.
39 தொடக்கம் 44 வரை 3வது கட்டுரையாக அமைகின்றது. நோர்வேயில் வாழ்ந்துவரும் பொன்னம்பலம் ரகுபதி அவர்களின் “ஈழத்தில் வன்னி என்ற சொல்வழக்கு’ என்னும் ஆய்வுக்கட்டுரையை வன்னி என்ற சொல் பயன்படும் வழக்காற்றை அவற்றின் கருப்பொருட் செறிவினை ஆழ்ந்து நுணுகித் தேடித் துருவித் துருவி ஆய்ந்துள்ளார். சமஸ்கிருதம், தமிழ், சிங்களம் போன்ற மொழிகளில் வன்னியின் பொருளும் வன்னி மக்களின் சமூக அமைப்பும் பற்றிச் சல்லடை போட்டுள்ளார்.
45 தொடக்கம் 58 நான்காவதாக உள்ள கட்டுரை ‘வரலாற்றெழுத்தின் வரையறைகள்” என்னும் பொருளில் வராற்றியல பற்றி அலசித் தனது கருத்துக்களைச் சிலேகித்துள்ளார் ஜெயமோகன் அவர்கள். வரலாற்றை எழுதும்போது கவனிக்கப்படவேண்டியவற்றையும் இந்திய வரலாறு எழுத்தின் தோற்றம் பற்றியும் இலங்கைவரலாற்றின் தொடர்பு நிலைபற்றியும் ஆய்ந்துள்ளார். இந்தக் கட்டுரை ஈழத்து வன்னிவரலாற்றை அறிந்துகொள்வதற்கு எவ்வகையிலும் உதவுவதாக அமையவில்லை என்பதோடு இங்கு எழுதப்பட்டவை பற்றிய எந்தக் குறிப்பையும் அதனுள் அடக்கவில்லை. இந்தக் கட்டுரைக்கு எந்தவித ஆதாரங்களையும் சான்றாக்கவில்லை என்பதும், வன்னி வரலாற்றுப் பதிவுக்குப் பிறிதான ஒரு கட்டுரையாகவே அமைந்துள்ளது என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது.
59 தொடக்கம் 72வரை 5வது கட்டுரையாக “வரலாற்றிற்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு” என்னும் தலைப்பிலே Dr. தியாகராசா ஆய்வு செய்துள்ளார். மனித தோற்றத்தோடு வரலாற்றைக் காலவியல், நிலவியல், ஆதிகாலக்குடியிருப்புக்கள் பற்றியும் இன்று காடாகக் காட்சிதரும் ‘பொம்பரிப்பு” என்னும் மனித புதைகுளிகளைத் தாழிகளைப் பற்றியும் விய்பான ஆய்வுகளை அலசுகின்றார்.
73 தொடக்கம் 98 வரை அடுத்த கட்டுரையாக அமைவுற்றுள்ளது யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பேராசிரியர் செல்லையா கிருஸ்ணராசாவின் “போர்த்துக்கீச, ஒல்லாந்தகால யாழ்ப்பாணம், வன்னிவாணிபத் தெருக்கள்” வன்னியுட்பட யாழ்ப்பாணக் குடாநாட்டோடு தொடர்பான போக்குவரத்துக்கள் பற்றி ஆய்ந்துள்ளார். தொல்லியல் ஆய்வின் பயன்பாடு இவற்றிற்கு எவ்விதம் உதவியுள்ளது என்பதனைக் குறிப்பிட்டுள்ள அவர் வன்னியில் காணப்பட்ட தொல்லியல் மூலங்களினூடாக அறியப்படும் வன்னி மாநில்த்தின் பண்பாட்டுத்தோற்றம், வளர்ச்சி மற்றும் குடியிருப்புக்கள் பற்றி ஆய்ந்துள்ளார். கிளிநொச்சியின் பெயருக்கான காரண காரியங்களை ஆராய்ந்துள்ள அவர் அங்கு நிலைபெற்றிருக்கம் ஆலயங்கள் பற்றியும் அவற்றிற்கும் நாகர்களுக்குமான தொடர்புகள் பற்றியும் ஆய்ந்துள்ளார். யானை வியாபாரம், தென்னை ஓலை, தேங்காய் நெய் என்பன அரசிற்கு மக்கள் கொடுக்கவேண்டிய கட்டாயம் போன்ற தகவல்களை மிக நுணுக்கமாக ஆய்ந்துள்ளார்.
99 தொடக்கம் 118வரை “மாதோட்ட நகரம்” பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் இரண்டாவது கட்டுரையாக அமைகின்றது. இது 98 தொடக்கம் 118 பக்கங்களைக் கொண்டது. மாதோட்டமான ராஜராஜ புரத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்கூறும் மெய்கீர்த்திகள் பற்றியும், சோழப்படை யெடுப்புக்களும், உள்நாட்டு யுத்தங்கள் பற்றியும் ஆய்ந்துள்ளார்.
119 தொடக்கம் 127 வரை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் “வரலாற்றுக்காலத்திற்கு முந்திய வன்னி நாட்டின் தொல்லியற் சான்றுகள்’ கட்டுரை இடம்பெற்றுள்ளது. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் காணப்பட்ட தொல்லியல் சான்றாதாரங்களின் ஒப்பீட்டு நோக்கினைக் கொண்டு தனது ஆய்வினை நிறுவ முற்படுகின்றார். பாண்டிநாட்டுதத் தாழிக்காட்டையும் பொம்பரிப்புத் தாழிக்காட்டையும் ஒப்பு நோக்கிச் செல்கின்றார். பெருங்கற்காலத்திற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன எனவும் அவை கி.மு. 6ம் நூற்றாண்டிற்கு மேற்பட்டதாக இருக்கலாம் எனக்குறிப்பிடுகின்றார்.
128 தொடக்கம் 140 வரை அடுத்து இடம்பெறும் கட்டுரை இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் யாழ் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறையின் முன்னைநாள் விரிவுரையாளர், மு.நித்தியானந்தனால் எழுதப்பட்ட “ஜே.பி.லூயிஸ் வன்னியின் ஆவணச் சிப்பி” என்ற கட்டுரையாகும் The Manual Of Vanni Districts (Vavuniya and Mullitivu) of the Northern Province’ Ceylon என்ற தலைப்பில் அவர் எழுதிய நிருவாகப் அறிக்கையாக உள்ள நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. . வன்னிபற்றி அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களை ஆதாரமாக்கியுள்ளார்.
141 தொடக்கம் 163அடுத்து யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் கலைத்துறைப் பீடாதிபதியாக விருந்த பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள் “THE ORIGIN OF TAMIL VANNI CHEFTAINCIES OF CEYLON” என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். இதில் சிங்கள அரசுகளின் வீழ்ச்சியோடு எழுச்சியுற்ற வன்னியையும் அதனை கைப்படுத்தி ஆட்சி செய்த வன்னியர்களையும் பற்றிய குறிப்பபுக்களை மிகத் தெளிவாக ஆராய்ந்துள்ளமை புலனாகின்றது.
164-174 “பிரித்தானியர்கால வன்னி இராச்சயம்” திருமதி ச.அனித்தா உதவி விரிவுரையாளரால் எழுதப்பட்ட கட்டுரை.
175- 194 பேராசிரியர் சி.பத்மநாதனின் அடங்காப்பற்று வன்னிபங்கள்”
195-206 பேராசிரியர் சி.பத்மநாதனின் அடங்காப்பற்று வன்னிபங்கள்- 2
207- பேராசிரியர் சி.பத்மநாதனின் அடங்காப்பற்று வன்னிபங்கள்” –ஒல்லாந்தர் கால உடன்படிக்கைகளும் நியமனப்பத்திரங்களும்”
219-243“பண்டாரம் + வன்னியனார் – ஓரு வரலாற்றாய்வு” அருணா செல்லத்துரை. இக்கட்டுரைக்கான ஆதரங்களாக உசாத்துணைகளை தந்துள்ள இவர், அவற்றை எவற்றிற்கு உரியது என்பதனை அடிக்குறிப்பாகக் கொடுத்திருந்தால் கட்டுரையின் நம்பகத்தன்மை உடையதாக அமைந்திருக்கும்.
244-254 “வன்னி பெருநிலப்பரப்பில் ஆய்வுக்குட்படுத்தவேண்டிய தொல்லியல் மையங்கள்” தி.திபாரன் ஊடகவியலாளரால் எழுதப்பட்ட கட்டுரை இடம் பெறுகின்றது. உசாத்துணைகளோ அடிப்குறிப்புக்களோ இல்லாத கட்டுரை
255-261“யாழ்ப்பாண இராசதானிக் காலத்தில் வன்னிமைகள்” செல்வி ஜெயரூபி, தொல்லியல் உதவி விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்” உசாத்துணைகளோ அடிப்குறிப்புக்களோ இல்லாத கட்டுரை உசாத்துணைகளோ அடிப்குறிப்புக்களோ இல்லாத கட்டுரை
262-273“பாலியாற்றங்கரைக் குடியிருப்பும் அதன் வளர்ச்சிப் போக்கும்” வரலாற்றுரீதியான பார்வை” அம்பலவாணர் மயூரன் ஊடகவியலாளர் உசாத்துணைகளோ அடிப்குறிப்புக்களோ இல்லாத கட்டுரை
பகுதி 2: சமூகமும் வாழ்வியலும்
BIRDS OF VANNI DISTRICT” Professor Sarath Wimalabandara Kotagama – University of Colombo
வன்னிப் பிரதேசத்தின் அண்மைக்கால மாற்றங்களும் மீள்குடியேற்றங்களும் – திருமதி இ.ஹேமலதா, பேராசிரியர் கே.குகபாலன் யாழ் பல்கலைக்கழகம்
யே.பி.லூயிஸ்- இலங்கையின் வன்னிமாட்டங்கள் ஒரு கையேடு என்ற நூல் பற்றிய அறிமுகம்” கந்தையா சண்முகலிங்கம் SLAS அவர்களால் செய்யப்பட்டுள்ளது. சண்முகலிங்கம் வன்னி மாவட்டத்தில் தனது பணிக்காலத்தில் பெரும்பாகத்தைச் செலவிட்டதோடு மட்டுமல்லாமல் வன்னி மாவட்டத்தையம் மக்களையும் இரக்கசிந்தையோடு அணுகித் தன்னாலான உதவிகளைச் செய்துவந்தவர் என்பது வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரிந்தவிடயமாகும்.
இலங்கையில் தமிழ் பாரம்பரிய பிரதேசங்களும் அரச குடியேற்றத்திட்டங்களும்” பேராசிரியர் சு.சத்தியசீலன், யாழ்.பல்கலைக்கழகம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசான்காளிடம் கற்றுக்கொண்டவர்.
“வன்னிப் பிரதேச மீன்பிடித்தொழில்” சூசை ஆனந்தன், சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்.
வன்னிப் பிரதேசம் விவசாய அபிவிருத்தியும் நீர்வளப்பயன்பாடும்” பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழகம்
“வேரோடுபிடுங்குதலும் மீள்நடுதலும்” வன்னிக்குடும்பங்களின சமூகநிலை”- பேராசிரியர் நா.சண்முகலிங்கன், யாழ்.பல்கலைக்கழகமம்
“இலங்கையின் வன்னிப்பிரதேச சட்டசபைப்பிரதிநிதித்துவம்” கலாநிதி த. கிருஷ்ணமோகன் சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதாரப் பிர்சசினைகள் – திருமதி சுபாஜினி உதயராசா, சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம். முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கீழ்மட்ட மக்களின் வாழ்வாதராத்தை அனுபவபூர்வமாகப் பெற்றுக்கொண்டவர். கொம்பறை மலரிலும் அவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலை” கலாநிதி எஸ். உதயகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர், செல்வி ஞா.சீத்தாவினி உதவி விரிவுமைரயாளர், யாழ் பல்கலைக்கழகம்.
குடியேற்றத்திற்குப் பின்னரான அபிவரு;திக்குரிய சமூகநிலை” – க.கிருஷ்ணராஜா. விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்.
‘வன்னி ஆன்மா” வைத்தியக் கலாநிதி எஸ். சிவதாஸ்
வளங்கொண்ட வன்னிப்பிரதேசத்தின் வாழ்வியல் அனுபவங்கள்” – ஜோசெப் பாலா. உள சமூக சீராளர்.
“மனிதம் மலரட்டும்” அருட்தந்தை வின்சன்ற் பற்றிக்
வன்னி மாவட்ட வனம்” – சிவாசினி சிவசங்கர்
வன்னி மாவட்ட வளர்ச்சிப் படிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்” கவிஞர் திருமதி சி.தமயந்தி
பகுதி 3: சமய நெறிகளும் பண்பாடும்
வன்னிப் பிரதேச திழ் இலக்கியம் – கலாநிதி நா.சுப்பிரமணியன்,
வன்னியின் பெண்மையின் பக்கங்கள் – முனைவர் பார்வதி கந்தசாமி
“மொழியால் அமைந்த நிலம்” கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டதாரியான இவர். கனடாவில் சமூகவியல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு வின்சர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் இவர் சிறந்த கவிஞரும் ஆய்வாளருமாவார்.
“வன்னிப்பிரதேசம் தனித்துவமும் பண்பாடும்” – த.சிவபாலு B.Ed. Hons, M.A. முன்னைக் கொத்தணி அதிபர், யோகபுரம். கொம்பறை மலர், சங்கப்பொழில் போன்ற மலர்களில் கட்டுரை எழுதிவரும் இவர் பல்வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகின்றார்.
“வன்னிப்பிரதேச நாவல்கள்” போராசிரியர் ம.இரகுநாதன், தமிழ்த்துறை யாழ். பல்கலைக்கழகம்.
“வன்னி நாட்டார் இலக்கியம்” கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம். ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும், கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் பண்டார வன்னியன் நாடகத்தின்மூலம் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை
‘வன்னிச் சிறுதெய்வ வழிபாடு” நா.யோகேந்திரநாதன்
“திருக்கேதீஸ்வரம்” இ.அனுஜா, சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
“வற்றாப்பளை கண்ணகித் தெய்வம்” ச.இராசேஸ்வரன், பிரதம ஆசிரியர் கொம்பறை
“தூயமடுமாதா திருத்தல வரலாறு” அருட்தந்தை ம.க. அருள்பிரகாசம் B.Th. (Rome), M.A.Sociology
“வன்னியில் சமயநிலை, செல்வி எஸ்.கஜானா, உதவி விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்
“ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்” என்னும் கவிதைத் தொகுதியினை நூலின் ஈற்றில் பதிவாக்கி கவிஞர் வ.ஜ. ச.ஜெயபாலன் அவர்கள் வன்னிமண்ணில் தவழந்த செய்தியினையும் அந்த வன்னி மண்ணின் மாந்தர்கள் பட்டுள்ள துன்பங்கள்.
avan.siva55@gmail.com