வாசிப்பும்,, யோசிப்பும் 329: கலை , இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவாக மின்னஞ்சல்கள் சில..

வெங்கட் சாமிநாதன்‘பதிவுகள்’ இணைய இதழ் எனக்குப்பல நன்மைகளைச் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்தது. அவர்களில் முக்கியமானவர்களிலொருவர் அமரர் கலை, இலக்கிய விமர்சகரான திரு.வெங்கட் சாமிநாதன்.’ பதிவுகள்’ இணைய இதழில் மதிப்பும், என் மேல் அன்பும் வைத்திருந்தார். அவரைப்போன்றவர்களுடனெல்லாம் தொடர்புகளை இணையம் , குறிப்பாக ‘பதிவுகள்’ இணைய இதழ் ஏற்படுத்தித்தந்தது என் அதிருஷ்ட்டமே.

அவர் பல வருடங்களாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத்  தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். உண்மையில் அவர் இறக்கும் வரையில் அனுப்பிக்கொண்டேயிருந்தார் என்பேன். அக்டோபர் 20 2015 அவர் மறைந்தார். மறைவதற்கு முன் அக்டோபர் 18, 2015 அன்றும் அவர் பதிவுகள் இணைய இதழுக்குத் தன் கட்டுரையை அனுப்பியிருந்தார். அத்துடன் அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்தான் கீழுள்ளது:

– Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Oct. 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும்  உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக அனுப்பியிருக்கிறேன் . நீ​​ங்கள் இந்த மூன்றையும்  இணைத்து ஒன்றாக்கிக்கிக் கொள்ளுங்கள்.

அன்புடன்
வெசா –


பல வருடங்களாக அவரைப்போன்ற பலர் எழுதிய மின்னஞ்சல்கள் பல பல்வேறு கணினிகளில் புதையுண்டு கிடக்கின்றன. அவ்வப்போது கணினிகளை மாற்றுவதால் ஏற்பட்ட விளைவு. மீண்டுமொருமுறை அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டும். அமரர் வெ.சா அவ்வப்போது எனக்கனுப்பிய மின்னஞ்சல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். மின்னஞ்சல்கள் குறுகியவையாக இருந்தாலும் அவை என்னைப்பொருத்தவரை முக்கியமானவை. பதிவுகள் மீதான அவரது மதிப்பினையும், என் மீதான அவரது அன்பினையும் வெளிப்படுத்துபவை.

Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Apr. 23, 2009 at 8:14 a.m.
thank you. I see you are flush with such abundance of contributions that you are not able to cope with it, an enviable position of course.  I wish you the same success throughout.  Yesterday evening I met a friend from Singapore who said that he has been closely following what I write in Pathivukal.  It was then I thought, I must remind you of the position.

thank you,
swaminathan


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Sep. 14, 2014 at 9:47 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, தங்களிடமிருந்து வரும் கடிதங்கள், விசாரணைக்ள் எப்போதும் மகிழ்ச்சி தருவன. கொஞ்சம் மனச் சங்கடங்கள்.  என்னென்னவோ வெல்லாம் சுற்றி நடக்கின்றன. எதிர்பாராது, என்ன செய்வது என்று  எனக்குப் புரிவதில்லை. இவை போக, ……… சரி,  இந்த விளக்கங்கள், சமாதானங்கள் எல்லாம் எதற்கு?  எழுதுவதெல்லாம் தொடராகி விட்டது. சரி, இதையும் விடுங்கள்.  ஒரு தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன். அது முழுதும் எழுதிய பிறகு அனுப்புவதா, இல்லை எழுத, எழுத அனுப்பி வைப்பதா என்று தெரியவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து விடுகிறேன்.

அன்புடன்,
வெ.சா.


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com,baladevakanthan@gmail.com
Jun. 2, 2015 at 5:43 a.m.
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, இதோ நீங்கள் முன்னர் கொடுத்த முகவரிக்கு அனுப்பினேன். அது டெலிவரி ஆகாமல் திரும்பி விட்டது. நான் அனுப்பியதன் நகல் இதோ:

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, நான் சென்னைய்லிருந்து பஙகளூரு வந்துவிட்டேன். சென்னையிலிருந்த பொழுது படுக்கையிலிருந்து கீழே இரவு தூக்கத்தில் விழுந்து விட்ட காரணமாக, மறுபடியும்  இடுப்பு எலும்பில் ஒரு பிளவு.  வாக்கர் வைத்துக்கொண்டு நடக்கிறேன். செனனை டாக்டர் சர்ஜரி தேவை என்றார்.  பங்களூர் டாகடர் அதெல்லாம் தேவையில்லை. it is only a slight hairline crack. it will unite by it self in due course.என்று சொன்னது நிம்மதியாக இருந்தது.
உங்கள் புதிய இ/மெயில் முகவரிக்கே அனுப்புகிறேன். வந்த சேர்ந்தது பற்றி எழுதினால், மறுபடியும் spam-ல் அகப்பட்டுக்கொண்டதோ இல்லை உங்களுக்குக் கிடைத்ததோ என்பது நிச்சயமாகும்.உடன் பதில் வந்தால் சேர்ந்துவிட்டது உங்களை என்றும்,,

பதில் வராவிட்டால் spam -ல் போய் சிக்கிக்கொண்டுவிட்டது மறுபடியும் அனுப்பவேண்டும் என்றும் புரிந்து கொள்வேன்.

தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றி.
அன்புடன்,
வெ.சா.

அது  திரும்பி விட்டதால், பழைய முகவரிக்கும் தேவகாந்தனுக்குமாக அனுப்புகிறேன்.  மற்படியும் ஸ்பாமில் போய் விழுந்தால், தேவகாந்தனாவது  உங்களிடம் இதைச் சேர்ப்பார் அல்லவா. இந்த வினையான விளையாட்டு எவ்வளவு தரம் திரும்பத் திரும்ப நடக்குமோ, தெரியவில்லை.

அன்புடன்,
வெசா.
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Jul. 12, 2015 at 10:17 a.m.

அன்புள்ள ஆசிரியரும் நண்பருமான கிரிதரன் அவர்களுக்கு, கணிணியில் சில தேய்ந்து சரிவர வேலை செய்யவில்லை. சரி செய்யக் கொடுத்தால் நான் எங்கே எதை வைத்திருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவும் தொலைந்ததா என்பதும் தெரியவிலலை. சிரமம் தான் இத்துடன் தெருக்கூத்து கட்டுரையின் கடைசிப் பகுதியை அனுப்பியிருக்கிறேன். இடையில் திரும்ப கற்றுப் பழகிக்கொளள வேண்டும். என் மகனுக்கும் தமிழ் தெரியாது  மருமகளுக்கும் அவ்வளவாகக்த் தெரியாது. கஷ்டம் தான்.

அன்புடன்,
வெ.சா.


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Jul. 15, 2015 at 2:45 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, 

தஙக்ள் அக்கறைக்கும் கவலைகளுக்கும், எங்கிருந்தோ பல வேலைகளுக்கும் இடையே என் சிரமங்களுக்கு தீர்வு காண முனையும் அன்புக்கும் எப்படி நன்றி சொல்வது?  வலது கை விரல்கள் சரிவர ஒத்துழைப்பதில்லை. பாரலிஸிஸின் தொடக்கமோ என்னவோ தெரியவில்லை. இதற்கிடையில் லாப் டாப்பில் சில பாகங்கள் வேலை செய்ய மறுக்கவோ, சரி செய்யக் கூப்பிட்ட ஆள் என்னன்னவோ புதிய சௌகரிங்களையும், புதிய சிரமங்களையும் உருவாக்கிக் கொடுத்துச் சென்றுவிட்டான். நான் வெளியே நடமாட முடியாத் மூட்டு வலி. எப்படியோ மருமகளின் உதவியோடு சமாளித்து வருகிறேன்.  கொஞ்சம் அதிகம் தொந்திரவு செய்ய வேண்டுமென்றால், பங்களூரிலேயே இருக்கும் அன்பர் டெலிகாமில் வேலை செய்து இப்போது ஒய்வில் இருப்பவர், கொஞ்சம் தூரத்தில் இருப்பவர், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவர் கூப்பிட்டால் சிரமம் பாராது வருவார், உதவி செய்வார். ஆகவே நீங்கள் கவலைப் படவேண்டாம்.  மேலும் இதில் நான் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் எப்படி அதன் தொழில் நுட்ப பாஷையில் சொல்வது. நண்பர் வந்தால் பார்த்துப் புரிந்து கொண்டு ஆவன செய்வார்.

தெருக்கூத்து தொடரின் கடைசிப் பகுதி ஏன் பிரசுரமாகவில்லை. மேலே பார்த்தால் அந்த அட்டாச்மெண்ட் சரியாகத் தானே வந்திருக்கிறது.  சரி மறுபடியும் பழைய தகராரோறோ என்று நினைத்தேன். தங்கள் மெயில் இதோ வந்ததும் அந்த கவலை தீர்ந்தது. மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லை

 

 

 


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:amuttu@gmail.com,amuthu@rogers.com,ngiri2704@rogers.com
Oct. 2, 2015 at 2:08 a.m.

அன்புள்ள நண்பர்களுக்கு,
இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அனபர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை
எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார்.

மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகிய மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது
;பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.

எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் e/mail  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.

உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா? அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.


Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Oct. 4, 2015 at 3:23 a.m.

நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் அக்ண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன் செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வை;;போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது.

அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள்…….. அதிர்ச்சியும் வேதனையும் தான்…

 


வெ.சா அவர்களின் இறுதிக்கடிதம். மறைவதற்கு இரு நாட்களின் முன்பு எழுதியது.

Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Oct. 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு

இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும்  உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக் அனுப்பியிருக்கீறேன் . நீ​​ங்கள் இந்த மூன்றையும்  இணைத்து ஒன்றாக்கிக் கௌள்ளுங்கள்.

அன்புடன்
வெசா


 

ngiri2704@rogers.com