வெற்றிமணி மாணவர் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்.

பரிசளிப்பு நிகழ்வு
 
காலம்: 21-09-2012.  (மாலை 3:30)

இடம்: நாவலர் கலாச்சார மண்டபம். நல்லூர். யாழ்ப்பாணம்.
போட்டியில் பரிசு பெற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வெற்றிமணி மாணவர் சிறுகதைப் போட்டி பற்றி…

வணக்கம்.  மாணவர்களுக்கான இந்தச் சிறுகதைப் போட்டியில் பொதுவாகப் பங்குபற்றிய எல்லா மாணவர்களுமே நன்றாக எழுதியிருக்கின்றார்கள். ஆனாலும் போட்டி என்று வரும்போது குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே நடுவர்களால் தெரிவு செய்ய வேண்டி வந்தது. மாணவர்களின் வயதிற் கேற்ற முதிர்ச்சி கதைகளில் காணப்படுகின்றது. எடுத்துக் கொண்ட கருப்பொருளைத் தெளிவாகச் சொல்ல வந்தாலும் கதையின் ஓட்டம் ஆங்காங்கே சில இடங்களில் தடைப்படுகின்றது. ஒரு வாசகன் சிறுகதையை வாசிக்கத் தொடங்கினால் அதை மூச்சு விடாமல் வாசித்துவிடவேண்டும். அப்படியான கதைகளே வாசகர் மனதில் பதிந்துவிடும். அதற்கு நல்ல கருப்பொருள் மட்டுமல்ல, எழுத்து நடையும் எதிர்பாராத திருப்பங்களும் கதையில் இடம்பெற வேண்டும். வேண்டாத வர்ணனைகளைத் தவிர்த்து, கதையைச் சுருங்கச் சொல்லி வாசகர்களைக் கவரும் திறமை வேண்டும்.
 
தொடக்கத்தில் நல்ல கதையோ இல்லையோ தயங்காமல் வாசியுங்கள். அந்தக் கதையின் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பாருங்கள். நிறைய வாசிப்பீர்களேயானால் உங்கள் எழுத்தில் உங்களை அறியாமலே மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கென்று ஒரு நடையைப் பின்பற்றுவீர்களேயானால் நாளைய இலக்கிய உலகில் நீங்களும் பிரகாசிப்பீர்கள். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற நியதியை மனதிற் கொண்டு உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள். எதிர் காலத்தில் உங்கள் எழுத்துப் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன்.
 
http://tamilaram.blogspot.com/

சிறுகதைப் போட்டி முடிவுகள்:

1வது பரிசு: மிருகம்
செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன்
யா. மகாஜனாக் கல்லூரி
தெல்லிப்பழை
 
2வது பரிசு: அரசமரத்தடிப் பிள்ளையார்
செல்வி. சோபிதா இளங்கோ
யா. வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாழ்ப்பாணம்.
 
3வது பரிசு: மருந்துச் சிட்டை
செல்வி. ம. பிரதாயினி
யா. சிதம்பரக்கல்லூரி
வல்வெட்டித்துறை.
 
ஆறுதல் பரிசுகள்:

துயரத்தின் பிடியில்
செல்வி தர்ஷனா முருகமூர்த்தி
யா. மகாஜனாக்கல்லூரி
தெல்லிப்பழை.
 
விழியோரக் கனவுகள்
செல்வி. எஸ். கிறிஸ்ரின் யுடிற்றா சுப்பிரமணியம்
இளவாலை திருக்கன்னியர் மகாவித்தியாலயம்
இளவாலை.
 
kuruaravinthan@hotmail.com