ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) – நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமை

ஜெய் பீம் காம்ரேட் - திரையிடல் (தமிழில்) - நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமைஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல்
திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.
நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது.
டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன்
பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன்
திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன்

மற்றும்

‘தலித் முரசு’ புனித பாண்டியன், ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண்
தமிழ் மொழியாக்கம் செய்தவர்கள்: மகிழ்நன், வி.ஏ. சூர்யா, தம்பி மில்லர், ஆர். ஆர். சீனிவாசன்,
நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமை
இடம் : MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்..கோடம்பாக்கம்.
நேரம்: மிகச்சரியாக மாலை ஐந்து மணிக்கு (5 PM)..

‘ஜெய் பீம் காம்ரேட்’ இது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தலித் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றியது. குறிப்பாக, 1997ல் மும்பையில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூடு பற்றியது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரே என்னும் பாடகர் தற்கொலை செய்துகொண்டார்.

தலித் மக்கள் எப்படி இசையைத் தங்களுடைய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது. படத்தை எடுத்து முடிக்க ஆனந்த் பட்வர்த்தனுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன.

2000 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் தீண்டாமையின் பெயரால் தலித்துகள் கல்வி மறுக்கப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர். 1923ல் இக்கொடுமையைத் தகர்த்த அண்ணல் அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி தனது மக்கள் மேம்பாட்டிற்காகப் போராடத் துவங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை வரைந்தார். இந்து மதத்தைப் புறக்கணித்து பெளத்ததைத் தழுவ தனது மக்களுக்கு வழிகாட்டினார். காலத்தை வென்று நிற்கும் அவரது போராட்டங்கள் மக்களிடையே பாடல்களாகவும், கவிதைகளாகவும் இன்றும் இசைக்கப்படுகின்றன.

1997இல் மும்பையில் ஒரு தலித் காலனியில் டாக்டர். அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டபோது, மக்கள் திரண்டெழுந்தனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பத்து பேர் இறந்தனர். “விலாஸ் கோக்ரே” என்னும் இடது சாரிக் கவிஞர் போராட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

“ஜெய் பீம் காம்ரேட்” 14 வருடங்களுக்கும் மேலாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் போரட்டத்தில் முன் நின்ற கவிஞர் விலாஸ் கோக்ரேயின் இசையைப் பின் தொடர்ந்து அவரின் தியாகத்தையும், அறநெறியின் நீண்டதொரு மரபையும் நமக்கு வலியுறுத்துகிறது.

இந்த படம் ஞாயிறு அன்று திரையிடப்படுவதோடு அதன் தமிழ் வடிவம் (தமிழ் சப் டைட்டிலோடு) டி.வி.டியாக வெளியிடப்படுகிறது.

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்..

டி.வி.டி. பிரதிகள் பெற, ‘தலித் முரசு’ புனித பாண்டியன் 9444452877, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் 9840698236 ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

விலை: ரூ. 150/=

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ, காஞ்சனை திரைப்பட இயக்கம் & தலித் முரசு.

அன்புடன்
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com