16 வது அரங்காடல் மனவெளி கலையாற்றுக் குழு – கனடா

16 வது அரங்காடல் மனவெளி கலையாற்றுக் குழு - கனடாமனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல் , இவ்வருடம் ஒக்டோபர் மாதம் பதின்மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மதியம் 1:00 மணி,மாலை 6:00 மணி என இரண்டு காட்சிகளாக நடைபெறவுள்ளது. இந்த அரங்காடலில் கே .எஸ் . பாலச்சந்திரனின்நதியில் நனைந்த நாட்கள் ” , அதீதா வழங்கும் “ஆதி வர்ணம் கறுப்பு”, அ.புராந்தகன் நெறியாள்கையில் த.அகிலனின் “இருளிலும் தொடரும் நிழல்” , க. நவம் அவர்களின் நெறியாள்கையில் செழியனின் “கடலிலிருந்து கையளவு மேகம் ” ஆகிய நிகழ்வுகளுடன் மெலிஞ்சி முத்தனின் “மண்டைக…்கயிறு” என்ற நவீன தென்மோடிக்கூத்து ஒன்றும் மேடையேறுகின்றன.  இம்முறை நாடகங்கள் அனைத்திலுமே போரின் விளைவுகள் , போரிற்குப் பின்னான சமூகத்தின் அவலங்கள், மன உளைச்சல்கள் போன்றவையே பொதுப் பேசு பொருளாக இழையோடி இருப்பதை அவதானிக்க முடியும். பார்வையாளர்களின் வசதி கருதி வழமை போலவே இலவச குழந்தைகள் பராமரிப்பு ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கும். நன்றி!

– மனவெளி கலையாற்றுக் குழு / 647 449 1271 , 416 417 6933 ) –