ஊமையர் கண்ட கனவுகள்: கமலாதேவி அரவிந்தனின் “நுவல்”

கமலாதேவி அரவிந்தனின் கமலாதேவி அரவிந்தன்படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. கிறிஸ்துவ வேதத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய மாபெரும் கோபுரத்தைக் கட்டி விட்டு, பிறகு இறைவனால் சபிக்கப் பட்டு மொழி மாறினதால் ஒருமனம் மாறி ஒருவரை ஒருவர் மனதர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று வருகின்றது. அதுபோலத்தான் அண்ணாந்து பார்க்கக் கூடிய நாகரீகத்தைக் கட்டி விட்டு நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும். சமூகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கையிலே, படைப்பாளன் சொல்வதுமட்டும் எப்படி மாற்றுக் குறையாமல் வாசகனுக்குப் போய் சேரும்? படைப்பாளனை விட படைப்பு பெரியது. கம்பனை விட அவன் கதை பெரியதாய் இருப்பது போல. அதனால் எழுத்தாளரான திருமதி கமலாதேவி அரவிந்தனைப் போற்றிப் புகழ்வதை விட இந்த நேரத்தில் அவரது படைப்பை விமர்சனம் செய்யலாம். அவர் புகழ்வதற்குத் தகுதியானவர் இல்லை என்பதால் அல்ல, அந்தக் காரியத்தைச் செய்ய பல பேர் உண்டு என்பதால்.

Continue Reading →

கூர்ப்படையும் மனிதர்…

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளதுஉயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.

Continue Reading →

‘சுப்பர் சிங்கர் 3’: மீண்டுமொரு ‘திருவிளையாடல்’ !

அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தைபெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு  நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திர்ருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதேஅண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான ‘சுப்பர் சிங்கர் 3’ இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு  நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி ‘சுப்பர் சிங்கர் 3’ நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.

Continue Reading →