‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழ் மதிப்பாய்வு

‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழ் மதிப்பாய்வுஅவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக இயங்கியவாறு வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 12 ஆவது ஒன்றுகூடலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி சிறப்பிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் போர் நெருக்கடி முடிவுக்கு வந்தபின்னர் தமிழ்ப்பிரதேசமான யாழ். மண்ணிலிருந்து இப்படியான  வெளிநாட்டுக்கென , புகலிடத்தமிழருக்கென ஒரு சிறப்பிதழ் வெளியாவது மிக முக்கியமான தகவல். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏற்கனவே நடத்தியிருக்கும் எழுத்தாளர் விழாக்களில் காலத்துக்குக்காலம் நூல், மலர் வெளியீடுகள் ஈழத்துச்சிறப்பிதழ் அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வெளியாகும் மல்லிகை மாத இதழின் அவுஸ்திரேலிய சிறப்பிதழ் 2001 ஆம் ஆண்டும், கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் மாத இதழ் 2004 ஆம் ஆண்டும் அவுஸ்திரேலியா சிறப்பிதழ்களை வெளியிட்டு இங்கு வாழும் படைப்பிலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஊக்கத்தை வழங்கியிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரி என்றும் சொல்லலாம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: கே. எஸ். சிவகுமாரன் ‘ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)

நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்;சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

Continue Reading →

நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம்

நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம் இஸ்லாமிக் புக் ஹவுஸின் நேர்த்தியான புத்தக அடுக்குகளுக்குள்ளிருந்த இந்நூலினைக் கையிலெடுத்ததுமே , வானவில் சுமந்த அட்டையில் தூவானம் எனும் பெயரினைக் கண்டதும் இதுவொரு கவிதைத் தொகுதியாக இருக்குமோ என்று எண்ணித்தான் நூலைப் புரட்டினேன். ஆனாலும்அதன் முதல் பக்கத்தைப் புரட்டியதுமே இது சகோதரி ஷாறாவின் சிந்தனைக் கட்டுரைத்தொகுதி என்பதை அறிந்து கொண்டதும், இந்நூல் தொடர்பான ஆர்வம் பன்மடங்கு அதிகமானதை இங்கு கூறித்தானாக வேண்டும். கலைப்பட்டதாரியும் ஆசிரியப்பணியில் அனுபவமுள்ளவருமான சகோதரி ஷாறா    அவர்களின் எழுத்தை எனக்குப் பரிச்சயமாக்கியது அல்ஹசனாத், எங்கள்தேசம் ஆகியவைகள்தான். கவிதை, கட்டுரை, சிறுகதைகளென இடைவெளியின்றி எழுதிவரும் இவரின் முதல்நாவலான பீனிக்ஸ் பறவைகள் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டதோடு மூன்று பதிப்புகளையும் [3000 பிரதிகள்] கண்டது குறிப்பிடத் தக்கது. ஈமானிய உறுதியுள்ள பெண்ணின் தளராத முயற்சியால் சமூக அமைப்பையே மாற்றியமைக்கலாம் என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது பீனிக்ஸ் பறவைகள் நாவல்.   

Continue Reading →

நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’

நூல் அறிமுகம்: 'என் ஏதேன் தோட்டம்'பிச்சினிக்காடு இளங்கோஎல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள் அனைத்தும் வரமாக வந்தவை. ஓர் ஆழ்நிலைப்பயணத்தில் விளைந்தவை. ஓர் அகத்தேடலில் கிடைத்தவை. அவை ஒவ்வொன்றும் மின்கடத்திகள்; மின்னல் உற்பத்திமையங்கள். அதனால்தான் ஒரு நத்தைநகர்தலைப்போல் என் பார்வை நகரும் சிந்தை சிறகுகள் கட்டிக்கொள்ளும். திடீர் மவுனம் சிறைபிடிக்கும் ஒரு வேள்வியாகவே வாசிப்பு அனுபவம் நிகழும். அதை மிக நேர்த்தியாய் என்னுள் நிகழ்த்தியநூல் ’என் ஏதேன் தோட்டம்’

Continue Reading →

முகங்கள் தொகுப்புக்கான (சிறுகதைகள்) இரசனைக் குறிப்பு

புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள். விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள். விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார். ‘ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம், மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம், இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம். இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது. இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. … இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான்’ என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

Continue Reading →

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார்மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும்; பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

Continue Reading →

ஊமையர் கண்ட கனவுகள்: கமலாதேவி அரவிந்தனின் “நுவல்”

கமலாதேவி அரவிந்தனின் கமலாதேவி அரவிந்தன்படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. கிறிஸ்துவ வேதத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய மாபெரும் கோபுரத்தைக் கட்டி விட்டு, பிறகு இறைவனால் சபிக்கப் பட்டு மொழி மாறினதால் ஒருமனம் மாறி ஒருவரை ஒருவர் மனதர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று வருகின்றது. அதுபோலத்தான் அண்ணாந்து பார்க்கக் கூடிய நாகரீகத்தைக் கட்டி விட்டு நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும். சமூகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கையிலே, படைப்பாளன் சொல்வதுமட்டும் எப்படி மாற்றுக் குறையாமல் வாசகனுக்குப் போய் சேரும்? படைப்பாளனை விட படைப்பு பெரியது. கம்பனை விட அவன் கதை பெரியதாய் இருப்பது போல. அதனால் எழுத்தாளரான திருமதி கமலாதேவி அரவிந்தனைப் போற்றிப் புகழ்வதை விட இந்த நேரத்தில் அவரது படைப்பை விமர்சனம் செய்யலாம். அவர் புகழ்வதற்குத் தகுதியானவர் இல்லை என்பதால் அல்ல, அந்தக் காரியத்தைச் செய்ய பல பேர் உண்டு என்பதால்.

Continue Reading →

நூல் மதிப்புரை: இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்புடென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ”விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.

“இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

Continue Reading →

மு.பொ வின் ‘திறனாய்வின் புதிய திசைகள்’

மு.பொன்னம்பலத்தின் 'திறனாய்வின் புதிய திசைகள்'மு.பொன்னம்பலம்மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசைகள் என்ற சிறந்த வார இதழின் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவற்றைவிட சிறப்பாக இவரது சிந்தனை ஆற்றலைக் கூறலாம். மற்றவர்கள் சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பவர் இவரல்ல. இரவல் வாங்காத சுயசிந்தனைதான் அவரது பெரு முதல். நான் அவரது ரசிகன். அவரது பல கவிதைகளை மிகவும் ரசித்தவன். ஆதேபோல அவரது சிறுகதைகளும், நாவலும் கூட எனக்குப் பிடித்தமானதே. எனவே இந்த கட்டுரையானது அவரது விமர்சன நூல் பற்றிய விமர்சனமாக இருக்கும் என நான் நம்பவில்லை. பெரும்பாலும் நான் ரசித்தவையாகவே இருக்கும்.

 விமர்சனம் என்றால் என்ன?

இந்த நூலைப் படித்தபோது விமர்சனம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் என்னளவில் முகிழ்வு கொண்டன. அவை பற்றி சில கூறிவிட்டு முழமையாக நூலுக்குள் நுழையலாம் என எண்ணுகிறேன். இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படித்தல், ஆய்வு செய்தல், அதன் இலக்கியத்தன்மையை மதிப்பீடு செய்தல், படைப்புப் பற்றிய இலக்கிய விளக்கம், அப் படைப்பின் நோக்கம், அது வாசகனிடத்தும் பரந்தளவில் சமூக நிலையிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை ஆராய்தல் என பல நிலைகளைக் கொண்டது எனலாம்.

Continue Reading →