ஹருகி முரகாமியின் புதிய சிறுகதையான ‘பூனைகளின் நகரம்’ (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு ஜப்பான் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அவர்களின் வாடிக்கையாளரின் வீடுகளுக்குச் சென்று சேவைக்கான பணத்தை சேகரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீடுகளைத் தட்டி பணத்தை அறவிடுகின்றார். ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை இல்லாததாலும், சிறுவன் பிறந்த சில மாதங்களிலே தாய் இறந்துவிட்டதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்றபடியாலும், மகனையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வேலைக்குத் தகப்பன் கூட்டிச்செல்கின்றார்.
[October 29, 2011] Years after Sri Lanka’s bitter civil war ended in a bloodbath, we still don’t know the half of what went on in the final horrific days. According to the United Nations, “tens of thousands” died in 2008-2009 as government forces crushed a Tamil Tiger rebellion. The army “systematically” shelled UN facilities, areas where 330,000 civilians were huddled, hospitals and food lines, a UN panel found. The rebels, in turn, used civilians as shields. There are “credible allegations,” the UN said, of point-blank executions, torture, rape and other war crimes by both sides. Nor has President Mahinda Rajapaksa’s triumphalist government held a credible probe, or honoured promises to give Tamils “substantive” regional autonomy, stronger minority rights and a fair share of jobs in the civil service and military. A “deeply flawed” postwar reconciliation commission is a sham, the UN concluded.
தொல்காப்பியர்
தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார். தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும், இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார். இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும், ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.