சென்னையில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘துயில்’ கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணன்சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.  நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

Continue Reading →

லண்டனில் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ விருதைப்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்!

இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ நவஜோதி ஜோகரட்னம்இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’  ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில்  லண்டன் The Orchard Theater  இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.

‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்தைக் குருவாகக் கொண்டு  சாகித்தியா இவ்வரங்கேற்றத்தை கடும் உழைப்பின் மத்தியில் சிறப்பிப்பது தன்னை மிகமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக கனடாவிலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த ‘நிருத்தியக் கலைமணி’ ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். புஷ்பாஞ்சலி,  கணபதி ஸ்துதி, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், பதம்,  கலிங்க நர்த்தனம், தில்லானா என்ற ஒழுங்கில் கவர்ச்சி, கச்சிதம், விறுவிறுப்பு நிறைந்த நடன உருப்படிகளால் சாகித்தியா  சபையோர்களைக் கட்டி வைத்திருந்தாள் என்று தனது பிரதம உரையில் குறிப்பிட்ட ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் இரு கண்களைப்போன்று நர்த்தகி சாகித்தியாவும் இசைக் கலைஞரான ஸ்ரீ.பாலகாட் ஸ்ரீராமும் பக்க வாத்தியக் கலைஞர்களான ‘மிருதங்க கலைமாமணி’ ஸ்ரீ.பத்மநாபன் ஜெயராமன், வயலின் வித்துவான் ‘சங்கமித்திரா’ ஸ்ரீ. கே.ரி.சிவகணஷ்,   புல்லாங்குழல் செல்வன்.அரவிந்தன் பகீரதன் போன்றவர்களோடு இணைந்து பரதத்தின் மதிப்பை, ஆளும் நேர்த்தியோடமைந்த பாவத்தை, கலையை உயிரோட்டமாக வெளிப்படுத்தி ரசிர்களை தக்க வைத்தார்; நர்த்தகி சாகித்தியா என்றும் பாராட்டியிருந்தார்.

Continue Reading →

பி.பி.சி: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

6 அக்டோபர், 2011 – தொழில்நுட்ப முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்
உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் , காலமானர். நீண்ட காலமாக , புற்று நோயால் அவதிப்பட்டுவந்த, ஜாப்ஸ், நேற்று இரவு காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 56. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஆகஸ்டு மாதம்தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் (76, 77 & 78)

நினைவுகளின் சுவட்டில் .. 76

வெங்கட் சாமிநாதன்மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனம் என்று தான் சொல்லவேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்றுகொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத்திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோவித்துக்கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆர்ம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.

Continue Reading →

ஊமையர் கண்ட கனவுகள்: கமலாதேவி அரவிந்தனின் “நுவல்”

கமலாதேவி அரவிந்தனின் கமலாதேவி அரவிந்தன்படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. கிறிஸ்துவ வேதத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய மாபெரும் கோபுரத்தைக் கட்டி விட்டு, பிறகு இறைவனால் சபிக்கப் பட்டு மொழி மாறினதால் ஒருமனம் மாறி ஒருவரை ஒருவர் மனதர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று வருகின்றது. அதுபோலத்தான் அண்ணாந்து பார்க்கக் கூடிய நாகரீகத்தைக் கட்டி விட்டு நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும். சமூகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கையிலே, படைப்பாளன் சொல்வதுமட்டும் எப்படி மாற்றுக் குறையாமல் வாசகனுக்குப் போய் சேரும்? படைப்பாளனை விட படைப்பு பெரியது. கம்பனை விட அவன் கதை பெரியதாய் இருப்பது போல. அதனால் எழுத்தாளரான திருமதி கமலாதேவி அரவிந்தனைப் போற்றிப் புகழ்வதை விட இந்த நேரத்தில் அவரது படைப்பை விமர்சனம் செய்யலாம். அவர் புகழ்வதற்குத் தகுதியானவர் இல்லை என்பதால் அல்ல, அந்தக் காரியத்தைச் செய்ய பல பேர் உண்டு என்பதால்.

Continue Reading →

கூர்ப்படையும் மனிதர்…

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளதுஉயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.

Continue Reading →

‘சுப்பர் சிங்கர் 3’: மீண்டுமொரு ‘திருவிளையாடல்’ !

அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தைபெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு  நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திர்ருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதேஅண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான ‘சுப்பர் சிங்கர் 3’ இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு  நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி ‘சுப்பர் சிங்கர் 3’ நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.

Continue Reading →

வங்கரி மாதாய் (Wangary Maathaai)! நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி! சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்!

நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் [ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற ‘வங்கரி மாதாய்’ அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான குறிப்பினை மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்] இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம்  மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார். 1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ருச் சாதனை புரிந்தார்.

Continue Reading →