ஜெயந்தி சங்கரின் நூலுக்கு ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013!

ஜெயந்தி சங்கர்ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து  ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜின் ‘நரிக்கொம்பு’, ஏக்நாத் எழுதிய  கெடைக்காடு நாவல், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ ஆகிய நூல்களுக்கும் ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் 2013’ வழங்கப்படுகிறது. சிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமாவின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்: வெளியீடு: காவ்யா: பக்கம்: 980, விலை: ரூ 880

booklaunch@gmail.com