தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை. / தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு

லீனா மணிமேகலைஉதிரிப்பூக்கள்.நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.

லெனின் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும், படத்தொகுப்பாளர் லெனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு லெனின் விருது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பைன்ட் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது. முக்கிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்விற்காக நண்பர்கள் இப்போதே தங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள்.

லீனா மணிமேகலையின் மின்னஞ்சலில் உங்கள் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்: leenamanimekalai@gmail.com


 

தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)
நேரம்: இரவு 9 மணிக்கு.
இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே)
திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள்.

உதிரிப்பூக்கள்.

நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்ச்சி இடம் இல்லாத காரணத்தால் சில இடையில் தடைபட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்குகிறோம். திரையிடலில் நிலாச்சோறும் வழங்கப்படும். நிலாச்சோற்றோடு தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான மகேந்திரனின் “உதிரிப்பூக்களை” பார்த்து மகிழுங்கள். திரையிடல் முடிந்ததும், இரவு முழுக்க முழுக்க இந்த படம் குறித்து நண்பர்கள் உரையாடலாம். அல்லது அங்கேயே படுத்து உறங்கலாம். அல்லது படம் முடிந்ததும், நீங்கள் வீட்டிற்கும் செல்லலாம்.

அனுமதி இலவசம். ஒரு அருமையான ராத்திரியை, அதன் ஏகாந்தத்தை உணர, சென்னை மாநகரின் வரங்களில் ஒன்றான பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்று கூடுங்கள்.

தொடர்புக்கு: 9840698236
கொஞ்சும் நிலவு… கொஞ்சம் வெளிச்சம்… அகன்று விரிந்த கடல், காட்சிகளால் கண்களுக்கு விருந்தளிக்கும் திரைப்படம், ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோடு உரையாடல், இரவு ஒரு மணிக்கு இதமான ஒரு தேநீர்…

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
thamizhstudio@gmail.com