வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய ‘டொராண்டோ ஸ்டார்’ ஆசிரியருக்கான கடிதம் பற்றி..

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதமும், 'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்')  மற்றும் A SQUIRREL AND I (ஓர் அணிலும் நானும்) ஆகிய ஆங்கிலக் கவிதைகளும்.அண்மையில் ‘டொராண்டோவி’ருந்து வெளிவரும் ‘டொராண்டோ ஸ்டார்’ தினசரியில் ஏப்ரல் 2, 2013இல் வெளியான ‘தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்’ பற்றி ‘டெப்ரா பிளாக்’ ((Debra Black) எழுதிய கட்டுரை பற்றி,  கனடிய பல்லின இலக்கியம், மற்றும் கனடிய இலக்கியம்’ பற்றிய எனது கருத்துகளைச் சிறியதொரு வாசகர் கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். அதனை ‘டொராண்டோ ஸ்டார்’ தனது ஏப்ரல் 4, 2013 பதிப்பிற்கான ஆசிரியர் கடிதத்தில் ‘Shedding light on ethnic literature’ என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. அக்கடிதத்தையும், அது கூறும் கருத்துகளையும், அத்துடன் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதையினையும் இம்முறை ஒரு பதிவுக்காகப் பதிவு செய்கின்றேன். மேற்படி கடிதம் சிறியதாகவிருந்தாலும் அது கூறும் விடயம் மிகவும் முக்கியமானது. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆனபடியால் கனடிய இலக்கியமென்றால் மேற்படி மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி மட்டுமே கொண்டதாகப் பலர் கருதிவிடுகின்றார்கள். ஆனால், கனடா பல்லின மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலொன்று. இங்கு வாழும் பல்லின மக்களால் அவர்களது மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகமான ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சு சமூகத்தவரோ அதிகமாக அறியமுடியாத நிலையே நிலவுகின்றது.

Continue Reading →