அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14: அறிஞர். அ.ந. கந்தசாமி

அறிஞர் அ.ந.கந்தசாமி

அந்தனி ஜீவா

– எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தனது நூலான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்என்னும் நூலில் எழுதிய ‘அறிஞர் அ.ந.கந்தசாமி’ என்னுமிக் கட்டுரையினை அவர் நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். மேற்படி நூலினை பூபாலசிங்கம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றார்கள். – பதிவுகள் –


கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா” ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.

நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன். நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற்றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன.

Continue Reading →

நிகழ்வுகள்: 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புத்தகவெளியீடுகள்:

சுப்ரபாரதிமணியன்14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின்  நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில் ”Sumangali “,* களவாடப்பட்ட குழந்தைப்பருவம் மற்றும் சுப்ரபாரதிமணியனின் நூல்கள் நெசவு ( தொகுப்பு நூல் ), முறிவு (நாவல் ), * குழந்தைகளுக்கான நூல்கள் “ The art of stry telling “,   “ The  baniyan tree “ –    Thought  provoking stories      for children     ஆகியவற்றை திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் IAS வெளியிட,சம்ஸ்துதிதீன் ஹீரா, நடேசன்,ஜோதி , பிஆர் நடராசன்,பாரதி புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன், சேவ் வேணுகோபால், தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் கு.ந.தங்கராசு, அனைத்திந்திய கலை இலக்கிய பெருமன்றம் நிர்வாகி ரத்தினவேல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

உலகமயச் சூழலில் வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்க முடியும் என்று திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் கூறினார்.14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:குழந்தைகளுக்கு இலக்கணம் சார்ந்த மொழியாக தமிழைத் திணித்ததால்தான் அவர்கள் அச்சப்பட்டு விலகி இருக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உளவியலுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழில் சிந்திக்கும் திறனைக் குழந்தைகளுக்குத் தர மறுத்துவிட்டோம்.தற்போது தமிழ்ப் படைப்புலகில் 1950க்கு முந்தைய புத்தகங்கள் மறுபதிப்புகளாக வருகின்றன. படைப்பிலக்கியங்கள் வருகின்றன. ஆனால் சிந்தனை இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக வருகின்றன. தமிழில் சிந்திப்பது, எழுதுவது குறைந்துவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிவந்திருக்கிறது. இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் பற்றி விமர்சனம் உள்ளது. ஆனால் நமக்கு தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. தலைவர்கள் வியாபாரிகளாக இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கத்தான் அரசியல் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சுயநலமும் இல்லாத தலைவர்கள் அரிதாகவே உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பக்கூடிய ஆதாரமாக புத்தகங்கள் திகழ்கின்றன. உலகமயச் சூழலில் எல்லாமே வர்த்தகமாகிப் போனது. சிந்தனையும், செயலுமே வர்த்தகமாகிவிட்டது. சேவையாகத் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிப் போனது. அரசுக்கே தவறான பார்வை உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் அரசாங்கம், நல்ல ஆசிரியர்கள், தரமான கல்வி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. சிந்தனையே வர்த்தகமாகிப் போன சூழலில் நமக்கு ஆதரவரளிக்கக் கூடியதாக புத்தகங்களே இருக்கின்றன.

Continue Reading →

கவிதை: இறுகியிருந்த பாறை மனதில், நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்!

இறுகியிருந்த பாறை மனதில்
நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்
உறைபனித்துகளின் ஆழத்திலிருந்து
கவிதைபாடிய ஈழக்கவிஞன்
போயே போய் விட்டான்
தாமதமாகத்தான் அறிந்தேன்
இவன் மறைவை

சினிமா வெளிச்சம் படாத
இந்தக் கவிஞனை
பணத்திமிரின் தாளத்துக்கு ஏற்றபடி
ஆடாத இவனை
ஏனோ யாரும் பெரிதாக
கணக்கிலெடுக்கவில்லை

Continue Reading →

பாரதி வருக எங்கள்! பாவலா வருக!

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - – ஆத்திசூடி  மக்கள் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழாவில் தோன்றிய பாரதியாரும் ஒரு பைந்தமிழ் நிருபரும்…! கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் பாரதியார் வேடமிட்டு நடந்த கலைநிகழ்வு அனைவரையும் கவரும் படியாக இருந்தது.  பாரதியார் தான் பாடிய பாடல்களை முன்மொழிந்து பாட, அவரைக் கேள்வி கேட்பதுபோல் தீவகம் வே. இராசலிங்கம் சுப்ரமணிய பாரதியாரை வரவேற்றுப் பாடிய பாடல் இதுவாகும். –

பாரதி வருக எங்கள்
பாவலா வருக பாட்டுச்
சாரதி வருக முந்தைச்
சந்ததி வருக தையின்
சூரனே வருக  சொல்லின்
செல்வனே வருக வாழும்
வீரனே வருக  என்றும்
வீழ்ந்திடாய் வருக வாராய்!

காந்தனே வருக வெற்புக்
கவிஞனே வருக எங்கள்
பூங்கவி வருக் வேகப்
புலவனே வருக தேனார்
மாங்கவி வருக்  பெண்ணை
மதிப்பவா வருக எங்கள் 
பூம்பனிக் கனடா நாட்டில்
பேரருங் கவியே வருக!

Continue Reading →

இணையவெளியில் படித்தவை: கவிதை திறனாய்வு – ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

சத்யானந்தன்

உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:

கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்

சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1

என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது

தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும்  பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2

என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.

Continue Reading →

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா 2017

11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் PRESTON  CITY HALL, GOWER STREET, PRESTON, VIC 3072கண்காட்சி –  கருத்தரங்கு – …

Continue Reading →

வயோதிபத்திலும் இலட்சிய வாழ்க்கை

-பேராசிரியர் கோபன் மகாதேவா -முன்னுரை
வயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம்.  இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம்.  சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளும் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர்.  உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.

மனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன?
இது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி.  இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்!

Continue Reading →