நாள்: சனிக்கிழமை (09-07-2011); இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது; நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்) ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம். முதல் பகுதி (3 மணி) : கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்; இரண்டாம் பகுதி (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில திரைப்பட இயக்குனர் திரு. சிம்புதேவன் அவர்கள் பங்கேற்று இயக்கம் தொடர்பான நுட்பங்கள் தொடர்பாக பேசவிருக்கிறார். குறும்படங்களில், இயக்கத்திற்கான நுட்பங்கள் குறித்தும், ஒரு இயக்குனருக்கான ஆளுமைகள் குறித்தும் பேசவிருக்கிறார்.
சிம்புதேவன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அரை எண் 305 இல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களின் இயக்குனர் ஆவார். மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. ஒரு கண் ஒரு பார்வை என்கிற இவரது குறும்படம் பரவலான விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாகும். தமிழின் முக்கிய குறும்படங்களில் ஒன்று.
குறும்படத்தின் பெயர்: ஒரு கண் ஒரு பார்வை
இயக்குனர் பெயர் : ஞான ராஜ சேகரன்
கால அளவு : 29 மணி / 33 நிமிடங்கள்
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஞான ராஜ சேகரன் IAS சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268