அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள எட்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்: ‘கணினித்தமிழும் தொல்காப்பியமும்’ – திரு. வல்லிபுரம் சுகந்தன்
நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 10, 2016
நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A – 5637, Finch Avenue East, Scarborough, M1B – 5K9
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பி.ப. 3: 00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.
உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை
tolcanada@gmail.com