பாரம்பரிய உணவுத் திருவிழா – பூவுலகின் நண்பர்கள்..

நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்... நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே.பாரம்பரிய உணவு விருந்து..
நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்… நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே. இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?.. சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன? ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழாவில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது.

பூவுலகு குழுவினருடன் இணைந்து பாக்கம் ஜெகன் மற்றும் ராஜசேகர் குழுவினர், ரொம்பவே மெனக்கெட்டு, கரிசனத்துடன் கரண்டி பிடித்து, இந்த சிறுதானிய விருந்தை படைக்க உள்ளனர்.

பானகம், நவதானிய கொழுக்கட்டை, தினை இனிப்பு, தேனும் தினைமாவும், வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும், கம்பு – வல்லாரை தோசை, நிலக்கடலை சட்னி, இயற்கை காய்கறிகளால் சாம்பார், பொரியல், வரகரிசியில் கூட்டாஞ்சோறு, குதிரைவாலியில் தயிர்சாதம், முக்கனி பழத்துண்டுகள்….வேறு என்ன வேண்டும்?…

வாருங்கள்..29 ஞாயிறு மாலை ஐந்திணை விழா விருந்துக்கு..எங்களுடன் உண்டு மகிழ்ந்து, அதனதன் ரெசிபிகளையும், கேட்டறிந்து, இனி உங்கள் இல்லத்து சமையலறையை நலவாழ்விற்காக கூடுதல் கரிசனத்துடன் செதுக்கிடலாம்..

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. நபர் ஒருவருக்கு ரூ.100/- கொடுத்து முன்பதிவு மட்டுமே…விரைந்து பதிவீர்!..குறைவான இருக்கைகளே இன்னும் எஞ்சி உள்ளன…..

ஜூலை 29 —- லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்.

தொடர்புக்கு: 91765 33157

அன்புடன்
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com