பேசாமொழி 9 வது இதழ் வெளிவந்துவிட்டது – லெனின் விருது சிறப்பிதழ்!

பேசாமொழி 9 வது இதழ் வெளிவந்துவிட்டதுநண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன், தியடோர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், ராஜேஷ், தினேஷ், பிச்சைக்காரன், அருண் மோ.ஆகியோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக லெனின் இயக்கிய நாக்-அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது. ஊருக்கு நூறு பேர் திரைப்படம் பற்றிய தியடோர் பாஸ்கரன் கட்டுரையின் தமிழ் வடிவமும் வெளியாகியுள்ளது. தவிர வெங்கட் சாமிநாதனின் முக்கியமான கட்டுரை ஒன்றும், தமிழ் திரைப்படங்களில் அரசியல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் மிக முக்கியமான கட்டுரை. நண்பர் பிச்சைக்காரனின் ஒருத்தி திரைப்படம் பற்றிய கட்டுரையும், அம்ஷன் குமாரின் நேர்காணலும், பிச்சைக்காரன் சிலாகித்து எழுதி இருக்கும் ஊருக்கு நூறு பேர், நாக்-அவுட் படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தவிர தொடர்களான, மருதுவின் அனிமேசன் கலை பற்றிய கட்டுரையும், நண்பர் ராஜேஷின் ஒளிப்பதிவு பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் அவசியம் இந்த மாத பேசாமொழி முழு இதழையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://pesaamoli.com/index_content_9.html   – அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com