மிக நல்ல படங்களாக, தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்ரந்த் படங்களாக்க் கொடுக்கப்பட்டுள்ள பட்டிய்லில் பல படங்களை நான் பார்த்ததில்லை. பழ்சிலிருந்து சிலவும், புதியனவற்றில் பலவும் நான் பார்த்ததில்லை. அந்த நாள் படம் பார்த்திருக்கிறேன். அது ஒரு புதுமையான சோதனை முயற்சி என்றே எடுக்கப்பட்ட படம். அது சம்பிரதாயமான பாட்டு நடனம் போன்ற மசாலாக்களையும், நீண்ட கனல் கக்கும், அல்லது கத்திப் புலம்பி கண்ணீர் மல்கும் வசன்ங்களையும் தவிர்த்த ஒரு படம். கதை ஒரு துப்பறியும் கதை என்று ஞாபகம். அது சோதனை என்று பேசப்பட வாய்ப் பளிக்கும், இயக்குனருக்கு ஒரு வரி பெருமையாகப் பேச வாய்ப்பளித்த படம் என்பதற்கு மேல் அது தமிழ் சினிமாவில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் சமூகம் சாதிகக விடவில்லை. மசாலாக்கள் தான் வீர் தீர வசன்ங்கள் தான் வேணும் என்று சந்தைத் தீர்ப்பைத் தந்தது. அது ஒரு நீர்க்குமிழியாக தோன்றி அடுத்த க்ஷணம் மறைந்துவிட்டது. ஒரு சின்ன ஓடையாகக் கூட அது தன்னை ஸ்தாபித்துக்கொள்ளவில்லை.
அதைத் தொடர்ந்து பல படங்கள் வந்து ஒரு சிறிய சந்தையையாவது தோற்றுவித்திருந்தால் அது பெரிய விஷயம் தான். எடுக்கும் படங்கள் எல்லாம் சந்திரலேகாவாக வெற்றி பெற வேண்டும் மற்ற தெல்லாம் கையைச் சுட்டுக்கொள்ளும் விவ்காரம் என்ற் பாடத்தையே எல்லோரும் படித்தால், நமக்கு அவ்வப்போது வந்த் உடனேயே டப்பாக்குள் மறைந்து விட்ட் நீர்க்குமிழிகளையே தான் பார்க்க இயலும் அப்படித்தான் இன்று வரை நடந்துள்ளது. அந்த நாள் வீணை பால சந்தரின் படமா? அப்படி த் தான் நினைவு. சரி பார்த்துக்கொள்ள என்னிடம் இப்போது ஏதும் இல்லை. இதை அடுத்து அவர் பொம்மை என்று ஒரு படம் எடுத்ததாக அல்லது முயற்சி த்ததாக் படித்த நினைவு. அந்தப் படத்தில் பயன்படுத்த என்று ஒரு பொம்மை கூட எங்கோ ஜ்ப்பானிலிருந்தோ எங்கிருந்தோ ஸ்பெஷலாக வரவழைத்த தாகவும் படித்தி ருக்கிறேன். அந்த நாள் பேசப்பட அளவு கூட அது முக்கியத்வம் பெறவில்லை.
இது போக, வீணை பாலச்ந்தரே கொஞ்சம் அலட்டிக்கொள்கிற மனிதர்தான். ஒரு காலத்தில் அவர் வீணையில் என்னென்னவோ மாயங்கள் செய்வதாக வியந்து பேசப்பட்டது. அப்போது ஜானகிராமன் தான் எழுதியிருந்தார்.அதுவும் எழுத்து பத்திரிகையின் முதல் இதழிலோ இரண்டாம் இதழிலோ வந்திருந்தது. “ஏன்யா, வீணையை வச்சிண்டு ரம்பம் அறுக்கற மாதிரி வாசிக்கிறேன் பாரு”ன்னு ஒத்தன் சொன்னான்னா, அதை என்னன்னு சொல்றது. ரம்பம் அறுககறா மாதிரி ச்த்தம் வந்தா அது எப்படி சங்கீதம் ஆகும்? ரம்பம் அறுக்கறதுக்கு வீணை என்னத்துக்கு? ரம்பம் அறுக்கலாமே. வீணையிலேர்ந்து வீணையின் நாதம் தான், சங்கீதம் தான் வரணும். அதில்லாமே இதெல்லாம் ஒரு சோதனையா?
நம்ப் தமிழ் சினிமாககாரன்லெம்மாம் செய்கிற வித்தியாசமான, சோதனையான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரி சினிமா சம்பந்தமே இல்லாத விஷயங்களாகத்தான் இருக்கும். உன் கதை மதுரைக் காரன் கதையா இருந்தா அந்த கிராமத்துப் பொண் வாடிப்பட்டிலேன்ன டான்ஸ் ஆடணும்? டோரண்டோ போய் என்னத்துக்கு ஆடணும். டோரண்டோ போய் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்திருக்கோம்னு ஒரு பெருமையா? இவங்கள்ளாம் இட்லி, தோசை வடைன்னு சாப்பிடறாங்களா, இல்லே ஊமத்தங்காய தின்னுட்டு இந்தக் கூத்து ஆடறாங்களா? செய்யற விஷயம் கொஞமாவது பொதுப்புத்திக்கு சரின்னு படவேண்டாமா?
திக்க்ற்ற பார்வ்தியைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். பார்த்த ஞாபகம் இருக்கிறது. இது மிக நேரான படம். ராஜாஜியின் கதையை ‘திக்கற்ற பார்வதி’ என்ற தலைப்பில் படமெடுத் திருந்தார்கள். நம் தமிழ்ப் பட சூழ்நிலையில் இது பார்த்த பின் நம்மை வேதனைப் படுத்தும் படமில்லை. . இந்த மாதிரி தமிழ்ப்பட சந்தர்ப்பத்தில் பேசுவதே வேடிக்கையும் பைத்தியக்காரந்தனமுமாக இருக்கிறது. நாம் ஒரு விஷயத்தை, பொருளை, மனிதனைச் சிறப்பாகச் சொல்வதென்றால் அது பற்றிய அசாதர்ரன, சிறப்பான குண்ங்களைச் சொல்லி அறிமுகப்படுத்துவொம். ஆனால் நாம் வித்தியாசமான படம், தரமான படம் என்று தனித்துச் சிறப்பிப்பது, ”இது யதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது, இயல்பாக மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள், பாட்டு கூத்து எல்லாம் இல்லை” என்று தான். அது யதார்த்தம் தானா, இயபான நடிப்பு தானா என்பது ஒரு புறம் இருக்க, இப்படிச் சொல்வது, “இந்த ஆள் தரமான ஆள் , பக்கத்திலே போனா நாறாது, கோண்வாயால் பேசமாட்டான், நேரா பேசுவான், பேசுவது புரியும், கண்ணு மாலைக்கண்ணு இல்லை, சப்பை மூக்கு இல்லே” என்றா சொல்லி ஒருவனது பெருமையைச் சொல்வோம். இப்படி தமிழ்ப் படம் பற்றிப் பேசும்போதே, நம்ம விவகாரங்களே ஒரு மாதிரித்தான் என்பது தெளிவாகவில்லையா?
திக்கற்ற பார்வதி பற்றிப் பேச வந்தோம். இந்தப் படமும் பட்டியலில் இல்லாது போனாலும், ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தார். இதைப்பற்றியும் அதிகம் எழுத இப்போது என் நினைவில் ஏதும் பதிந்திருக்கவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவன் (1965) பற்றிய எழுதிய கட்டுரையின் பின் குறிப்பாக 1974-75-ல் எழுதிய குறிப்பு ஒன்றை திரை உலகில் (காவ்யா பிரசுரம் – 2003) என்னும் என் சினிமா பற்றிய புத்தகத்திலிருந்து எடுத்துத் தரலாம் என்று நினைக்கிறேன்.
“திக்கற்ற பார்வதி”யில் லக்ஷமியின் நடிப்பு வெகுவாக சிலாகிக்கப் பட்டிருந்தது. தமிழ்த் திரைப்படச் சகதியில் சிக்கிப் பாழாகும் நல்ல திறனை உடைய நல்ல நடிகை அவர் என்பது என் அபிப்ராயம். நான் பார்த்த ஒரே படம் ஜீவனாம்சம். இருப்பினும் ”திக்கற்ற பார்வதி” அவர் நடிப்பு விளக்கம் எனக்கு உடன் பாடான ஒன்றல்ல. பின் ஏன் நிறைய பாராட்டு பெற்றது அவர் நடிப்பு? நம் நடிகர் திலகங்களின், நக்ஷத்திரங்களின் அங்க் சேஷ்டைகளைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன மனத்திற்கு லக்ஷமியின் அடங்கிய, குரல் எழுப்பாத நடிப்பு கவர்ச்சிகரமாகத் தோன்றியது தான். இது புரிகிறது. ஆனால் நடிப்பு என்பது ஒரு பாத்திரத்தின் பொதுத் தன்மைகளையும், தனிப்பட்ட குணச் சித்திரத்தையும் பெறும் வெளிப்பாடு பற்றி அபிப்ராய பேதங்கள் இருக்க்லாம் ஆனால் பொதுத்ன்மைகள் எந்த நடிகரும் கற்றுத் தெரியவேண்டிய தொழில் திறன். அது லக்ஷ்மியின் பார்வதியில் இல்லை.
லக்ஷ்மி ஏற்று நடித்திருந்த பாத்திரம் ஒரு ஏழை கௌண்டர் குல ஏழை விவசாய் குடும்பப் பெண்ணினதாகும்.
பொதுவாகவே தமிழ்ர்களின் பேச்சும் நடையும் உரத்த தன்மையின அதிகம் படித்திராத ஏழைகளிடம் இது இன்னமும் அதிகம் ஒரு ஏழை கௌண்டர் ஜாதி விவசாயப் பெண்ணின் பேச்சு நடை பாவனைகளில் அடங்கிய குணம் (restrained-ஆக) இராது. தேவைக்கு மீறிய உரத்த அளவில் பேச்சும் நடை பாவனைகளும் இருக்கும்.( gesticulations will be loud and demonstrative).
லக்ஷ்மியின் நடிப்பில் ஒரு மத்தியதர பிராமண குடும்பத்தின் ப்டித்த பெண்ணைத் தான் காணமுடிந்தது. ராஜாஜியின் பார்வதி அப்படிப்பட்ட பெண்ணாக இருந்திருந்தால் லக்ஷ்மியின் நடிப்பு சிலாகிக்கத் தகுந்ததே.” (திரை உலகில் – பக்கம் 31-32)
மற்றபடி, அந்த நாள் பட்த்தைப் பற்றிச் சொன்னதெல்லாம் திக்கற்ற பார்வதிக்கும் பொருந்தும். திரும்பச் சொல்லவேண்டியதில்லை. இது எல்லா “வித்தியாசமான்,” யதார்த்தமான்,” “சோதனை பூர்வமான்,” “ந்ல்ல” என்றெல்லாம் அடைமொழிகள் கொடுக்கபபட்டு சிறப்பிக்கப்படும் அத்த்னை படங்களுக்கும் பொருந்தும். அவை வெற்று நீர்க்குமிழிகள். அடுத்த க்ஷணம் மறைந்து சுவடற்றுப் போய்விடுபவை. அவை ஒரு சின்ன ஓடையாகக் கூட பின் தொடரப்படுவதில்லை. சின்ன ஓடைகூட ஒரு ரசிகர் கூட்டத்தை, ச்ந்தையை, எவ்வளவு சிறிதானாலும், உருவாக்கிவிடவில்லை. அவ்வப்போது ஓவ்வொருத்தரும் தம் ஆசைக்கு, ஒரு சிலாகிப்புக் குறிப்பிற்கு வந்து போகிறவை.
மணி ரத்னம் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். வித்தியாசமான விளம்பரமும் சர்ச்சைகளும் புகழாரங்களும் அவர் படத்துக்குக் கிடைத்து வருகின்றன. அகில இந்திய தொலைக்காட்சியின் ஆங்கில சானல்களில் அவர் மேதை என்றே புகழ்ப் படுகிறார். சினிமா நக்ஷத்திரம் என்ற அறிமுகத்தோடு கூடும் கூட்டத்தில் நிற்கும் ஒரு கிராமத்தான், அந்த நக்ஷத்திரத்தை அறிந்திராவிட்டாலும், “என்ன அம்சமா இருக்காரையா, சும்மாவா சொல்வாங்க” என்று பரவசமடைவதைப் போலத் தான் மணிரத்தனத்தின் மேதை புகழும், அவரது வித்தியாசமான சினிமா படைப்புகளும். ஒன்று அடிப்படையான விஷயம். மற்றவர்களை விட இவரது டம்பம் அதிகம். Tomb Raiders படப்பிடிப்பிற்கு கம்போடியாவின் அங்கோர் வத் சிதைவுகளில் இருக்கும் ராணியின் புதைவிடத்தைத் தேர்ந்தெடுப்பதன் உண்மை, நேர்மை, நியாயம், கலைத் தாகம், நம்க்குப் புரிகிறது. ராவணன் சீதையை கவர்ந்து செல்ல ஒரு மலை உச்சியும் அதன் பின்னணியில் ஒர் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியும் தேவையாயிருக்கிறது மணி ரத்தினத்திற்கு. இதற்கும், கமலஹாசனும், சங்கரும், குஞ்மேனோனும், நடனக் காட்சிகளைப் படம் பிடிக்க விக்டோரியா, சிங்கப்பூர், டோரண்டோ, ச்விட்சர்லாந்து என்று அலைந்து வருவதற்கும் என்ன வித்தியாசம். இரண்டு பேரின் மன நிலையும் சம்பந்த மில்லாத் பின்னணியில் காட்சியமைத்து, “பார் பார் பட்டணம் பார்” பாடும் கதைதானே. இதில் மணி ரத்தினம் மாத்திரம் எப்படி மேதையாகிறார்? இவர் எடுக்கும் எந்த சரித்திர சம்பவத்தின் உண்மை மனிதர்கள் உண்மை நிக்ழ்வுகள் பதிவாகியிருக்கின்றன? இருவர்? பாம்பே, உயிரே? எல்லாம் உண்மையைச் சந்திக்க பயந்து செய்துள்ள சமரசங்கள், தீட்டியுள்ள பொய்கள் எத்தனை? கூட்டமாக, ஆடி பாடி ஓடி, நீர்வீழ்ச்சியில் நனையும் காட்சிகள் தானே மணிரத்தினத்தினதும். அது இல்லாமல் ஒரு படம் கூட அவரால் எடுக்க முடியவில்லையே. அநாவசியமாக, அழகாகப் படம் பிடிக்கவேண்டும் என்பதற்காகவே, பாத்திரங்களுக்கும், சம்பவத்துக்கும் எள்ளளவு கூட சம்பட்ந்தமில்லாத காட்சியமைப்புகளின் தொகுப்பாகத் தானே அவர் சினிமா இருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்னர் போட்டோ ஸ்டுடியோவில், நீர் வீழ்ச்சி, பங்களா, தாஜ் மஹல் போன்று திரைத் துணிக்ளின் பின்னணியில் தான் கிராமத்துக் காதலர்கள் படம் பிடித்துக்கொள்வார்கள். இந்த மனோபாவனையிலிருந்து, இந்தத் தரத்திலிருந்து எவ்விதத்தில் மணி ரத்தினம் என்னும் மேதை வித்தியாசமானவர்? சங்கரின் அர்த்தமே இல்லாத பிரம்மாண்டமான் செட்டுகள் வெற்று டம்பம் போல, கமலஹாஸனின் படத்துக்குப் படம் புதுப் புது வேஷங்கள் வெற்று டம்பம் போல, அதுவும் ஹாலிவுட் மேக்கப் மானாக்கும் செய்தது என்பது ஒரு கூடுதல் டம்பம். இதற்கேற்பவே கதை தயாரிப்பு. இவர்கள் சந்தைக்காக புதுசு புதுசாக என்ன செய்யலாம் என்று நினைக்கிறார்களே தவிர, இவர்களுக்கென்று ஒரு சமூக அக்கறை, ஒரு பார்வை, ஒரு தரிசனம், மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஒரு தீவிரம்,என எதையாவது இவர்கள் தொடக்கத்திலிருந்து இன்று வரைய செயல்பாட்டில்? எதைக் கொண்டு இவர்கள் படங்களை சினிமா என்று சொல்வது? சமீபத்தில் பகல் கனவு என்று ஒரு படம். கதை திரைகதை, வசனம், இயக்கம் என்று ஒரு படத்தைப் பார்த்தேன். அந்தக் கண்றாவியை என்னவென்று சொல்வது? இது தான் மணிரத்தினம் என்னும் மேதையின் ஆரம்பமா? எல்லா தமிழ் பட கண்றாவிகளையும் போல இதுவும் ஒன்று. டம்பம் ஏதும் இல்லாத கண்றாவி. டம்பங்களும், மசாலாக்களும் சேர்த்த கண்ராவிகள் பின்னர் தான் வந்து மணிரத்தினம் என்ற மேதை முத்திரை தாங்கி வர இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்
(தொடரும்)
Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>