துபாய் : துபாயில் கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஷார்ஜா பள்ளி மாணவர் ஹுமைத் அபுபக்கர் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ ஜீனத் தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்வில் தொழிலாளர் முகாமில் உள்ள தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும் இளம் வயதில் சமூக சேவையாற்ற வேண்டும் என்ற அக்கறையில் செயல்பட்ட மாணவர்களை பாராட்டினர். ஹுமைத் அபுபக்கர் சுற்றுச்ச்சுழல் விழிப்புணர்வின் அவசியம் குறித்து விவரித்தார். ஈடிஏ நலத்துறை அலுவலர் அஹமது சுலைமான் ஷேக் ஹம்தார் விருது பெற்ற ஹுமைத் அபுபக்கரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். இஃப்தார் நிகழ்வினைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு புத்தாடைகளும் பரிசளிக்கப்பட்டன. நிகழ்விற்கான ஏற்பாடுகளில் அஹமத் சுலைமான், முஸ்தபா, தமீம் அன்சாரி, அபுபக்கர், ரஹ்மத்துல்லா, ஃபைசல் உள்ளிட்டோர் உதவி புரிந்தனர். மாணவரின் மின்னஞ்சல் தொடர்பு முகவரி : maula77@gmail.com
முதுவை ஹிதாயத், துபை – ஐக்கிய அரபு அமீரகம்
www.mudukulathur.com | muduvaihidayath@gmail.com