நெதர்லாந்தில் நடைபெற்ற 34ஆவது பெண்கள் சந்திப்பு

நெதர்லாந்தில் நடைபெற்ற 34ஆவது பெண்கள் சந்திப்பு

பெண்கள் சந்திப்பின் 34 ஆவது நிகழ்வு நெதர்லாந்தின் சோஸ்ட் என்னுமிடத்தில் திருமதி.திரேசிற்றா அந்தோனியின் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்றது. இச்சந்திப்பில் இந்தியா. கனடா. ஜேர்மனி. பிரான்ஸ். இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் தமது பெண்ணியக் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். சுய அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப் பெண்கள் சந்திப்பை திரேசிற்றா அந்தனி தனது வரவேற்புரையை வழங்கிச் சிறப்பித்திருந்தார்.

ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த தர்சனாவின் அறிமுகத்துடன் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த வழக்கறிஞர் கிருபா முனியப்பா பேசும்போது: ‘இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் சாதி அடக்குமுறைகளினால் தலித்தியப் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக எடுத்துப் பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த வன்முறைகளை எதிர்கொண்ட பல பிரச்சனைகளை எடுத்துக்கூறிப் பேசியிருந்தார். இன்று இந்த சட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நியாயமன்றத்தில் நியாயம் கூறும் ஒரு துணிச்சலான செயற்பாடுகளை கிருபாவின் உரையில் உணர முடிந்தது’

‘மலையக இளம்பெண்களின் இன்றைய நிலை கவலைக்கிடமாகக் காணப்படுகின்றது. இன்னும் மலையகப் பகுதிகளில் பாடசாலை வசதிகளோ மற்றும் கல்வியில் முன்னேறுவதற்கான பொருளாதார வசதிகளின்றி மிகவும் துன்ப நிலையிலேயே காணப்படுகின்றனர். நெதர்லாந்திலிருந்து சில அமைப்புக்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும். அத்துடன் அங்;குள்ள இளம் பெண்களுக்கு கருக்கலைப்பு – கருவறை அகற்றப்படல் போன்ற விடயங்களை  கட்டாயப்படுத்தி செய்து வருவதையும் மிக உருக்கத்தோடு ஒழுங்கமைப்பாளர் திரேசிற்றா அந்தோனி தெரிவித்திருந்தார்’ இவர் மலையக மக்கள் குறித்து அக்கறையோடு அயராது உழைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சிலிருந்து வருகை தந்திருந்தவர்களான விஜியின் அறிமுகத்துடன் வனஜா குணரட்னராஜா உரையாற்றும்போது : ‘இந்தியா. சிசிலி. கனடா ஆகிய மூன்று கண்டங்களைச் சேர்ந்த பெண்மணிகள் வித்தியாசமான சூழல்களில் கலாச்சாரங்களைக் கடந்து தாங்கள் வளர்ந்த பின்னணிகளைத் தாண்டி எல்லைகள் கடந்து எவ்வாறு ஒரு சடைப்பின்னலில் இணைக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரான லெற்றிசியா கொலம்பானியா நாவலாசிரியரின்  ‘சடைப்பின்னல்’  என்ற நாவல் மிகப் பிரபலம் பெற்ற அண்மைக்கால நாவலாகும் என்று வனஜா நெதர்லாந்தில் நடைபெற்ற 34 ஆவது பெண்கள் சந்திப்பில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மித்தா என்ற மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட பெண்ணின் போராட்டத்தையும். சிசிலியில் செயற்கைத் தலைமுடியைத் தயாரிக்கும் யூலியா என்ற பெண் தங்களது மரபிற்குள் நடத்தும் போராட்டத்தையும். சாரா என்ற மொன்றியலில் ஒரு சட்ட நிறுவனத்தை நடத்தும் ஒரு பெண் புற்றுநோயோடு நடத்தும் போராட்டத்தையும் ஒன்றிணைத்து மூன்று இழைகளில் ஒரு சடைப்பின்னலை உருவாக்கியுள்ளார் லெற்றிசியா கொலம்பானியா. பிரெஞ்சுத் தொலைக்காட்சி நடிகையாகவும், குறும்படத் தயாரிப்பாளராகவும், சினிமா நடிகையுமான லெற்றிசியா கொலம்பானியாவின் இந்த நூல் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் இந்நூலின் பிரதிகள் விற்றுத்  தீர்த்ததாகவும், 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுவது பொருந்தும். கொலம்பானியாவின் இந்த நாவலின் கதையினை விபரித்து பெண்கள் இத்தகைய கலாச்சார சூழல்களில் வீட்டிலும் பொது வெளியிலும் எவ்வாறு துணிச்சலோடு சவால்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை வனஜா தனது உரையில் தெளிவாக விளக்கினார். பிரெஞ்சில் எழுதப்பட்ட  இந்த நாவலை பெண்கள் சந்திப்பில் முதற் தடவையாக அறிமுகம் செய்து பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நல்லதொரு செயற்பாடாகவும் வனஜாவின் உரை அமைந்திருந்தது.

ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த உமா பரராஜசிங்கம் நெறிப்படுத்திப் பேசும்போது பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்தியிருந்தாh.; கனடாவிலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ ரஞ்சனி விஜேந்திரா பேசும்போது: ‘ஆண் தலைமைத்துவக் கலாச்சாரமும.; காலனித்துவம் எங்களின் மேல் திணித்த வரைமுறைகளும் பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்திருக்கின்றன. ஆண்மை என்கின்ற கருத்தாக்கம் பிழையான வழியில் விதைக்கப்படுகிறது. ஆண் என்பவன் பலம் வாய்ந்தவன். அவன் அழக்கூடாது, சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை. உதவி கேட்பது அவனுக்கு அவமானம். பெண்ணைவிட அவன் மேலானவன். அவன் ஆண்தானே – எனவே அவன் என்னவும் செய்யலாம் என்ற நிலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தக் கருத்துக்களை தங்கள் மகன்மாருக்குக் கடத்துவதற்கு பெரும்பாலான அம்மாமாரும் தவறுவதில்லை. அதனால் ஆண் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சிகரமான அம்பலங்களை, மனநலப்பாதிப்புக்களை எப்படிக் கையாள்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனைத் தன் அதிகாரமாகப் பெண்ணில் காட்ட விழைகிறான். இந்த அண்மைத்துவக் கருத்து நிலை நச்சு விளைவுகளையே ஆண், பெண் என்ற இருபாலாரிலும் விளைவிக்கின்றது ‘ என்று தனது உரையில் தெரிவித்தார். 

லண்டனிலிருந்து வருகை தந்திருந்த நவஜோதி ஜோகரட்னம் பேசும்போது: ‘பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆசிய நாடுகளில் முன்பு என்றுமில்லாத அளவிற்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆசியாவில் ஒரு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகின்றாள்.  உடல் ரீதியாக இந்த ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள்.

ஆசிய இனத்தவரிடையே சமூகக் கட்டமைப்புக்களினூடாக சமூகத்தினால் உருவாக்கப்படும்; கட்டுப்பாடுகளால் பெண்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தால் ஆணின் குற்றம் முற்றாக மறைக்கப்படுகின்றது என்றே கூறலாம். ஆனால் பெண்ணை நீ ஏன் அந்த நேரத்தில் வெளியில் சென்றாய் என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. இலங்கையில் பாலியல் ரீதியில் பெண்சார்ந்து  நடைமுறையில் காணப்படும் பாலியல் வன்முறைகள் மிகவும் சிறுபகுதியே புகார் செய்யப்படுகின்றன.  இதில் அதாவது பேசாப்போருள் தான் அதிகமாகக் காணப்படுவதாக மிக அண்மையில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றது.

நெதர்லாந்தில் நடைபெற்ற 34ஆவது பெண்கள் சந்திப்பு

யுநெஉனழவயட நுஎனைநnஉந என்று சொல்லுகின்ற ஆதாரங்களோடு ஊர்க்கதைகள் மக்கள் மத்தியல் இவ்வித செயல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.  ஊடக அறிக்கை கூட உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றது. வீட்டு வன்முறைகள்  பாலியல் வன்முறைகள் –  அதாவது வயது வந்தவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது – குழுக்களாக பாலியல் வன்செயலில் ஈடுபடுத்துவது – வயது வந்தவர்கள் வயதில் குறைந்தவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். பாலியல் புகார்கள பொதுவெளியில் ஏன்  கொண்டு செல்லப்படுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது. நீதித் துறையில் பாலியல் வன்முறை குறித்த உணர்வுபூர்வமான தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர்  கொழும்பு உயர் நீதி மன்றத்தில் தன் கணவரை  பிணையில் அதாவது (டீயடை)  எடுப்பதற்காக மனைவி ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றார். குறிப்பிட்ட அந்த நீதிபதியே அந்த நீதி மன்ற வளாகத்துக்கு உள்ளேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். இத்தகைய ஒரு நீதிபதி ஒருவரே அந்த அவலைப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை  ‘ராவய’ என்ற சிங்களப்பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் அவர்கள் அந்த நிகழ்வைத்; எழுதி அந்த நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு துணிச்சலாக முன்னெடுத்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும். இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற மகளிர் அமைப்புக்கள் இத்தகைய அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு உணர்வு பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது நமது கடமையாகும்’ என்றும் நவஜோதி தெரிவித்திருந்தார்.

வேணி விஜயராஜா , றஞ்சனி குமரகுருநாதன். கிருபா. விஜி போன்றோர் காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களை முன்வைத்திருந்தனர்.

பிரான்சிலிருந்து வந்த தர்மினியின் நெறிப்படுத்தலில் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் ‘உதிர்தலில்லை இனி’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆனந்தி பாலசூரியன் – கறுப்பி சுமதியின் ‘உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும்’ என்ற தொகுப்பை மாதவி சிவலீலன். நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்;’ என்ற நூலை சாந்தா பாலகிருஷ்ணன். நிரூபாவின் ‘இடாவேணி’ என்ற நூலை பவானி தம்பிராஜா. ஸர்மிளா ஸெய்யத்தின் ‘பனிக்கர் பேத்தி’ என்ற நூலை தேவாவும் விமர்சனம் செய்திருந்தனர். விஜியின் நன்றியுரையுடனும் எதிர்காலச் செயற்பாடுகளுடனும்; 34 ஆவது பெண்கள் சந்திப்பு நிறைவு கண்டமை மிகச்சிறப்பாக இருந்தது.

navajothybaylon@hotmail.co.uk
25. 4. 2019