பிராந்திய கால்நடை அபிவிருத்திப் பயிற்சி நிலைய மண்டபம் (மத்திய வங்கியின் பிராந்திய நிலையத்துக்கு அருகில்), அறிவியல் நகர், கிளிநொச்சி
2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை
முன்வைப்புகளும் உரையாடலும்
1. வன்னி – நிலம், நீர், சமூகம்
2. வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி?
3. வன்னிக் காடு – வாழ்வும் அரசியலும்
(பிரதிகளில் உள்ளடக்கப்பட்டவையும் உள்ளடக்கப்படாதவையும்)
5. முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும்
6. அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர் மற்றும் போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை)
7. இலக்கிய அரசியல்: உண்மையும் விடுபடலும்
8. பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் (வரலாற்றுச் சித்திரிப்பும் புதிய உணர்தல்களின் அவசியமும்)
9.போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம்: கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள்
10. போரின் பின்னான பத்திரிகைகள்: அறிக்கையிடலின் உளவியல்
11. ஈழ அகதிகள்: தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும்
12. போருக்குப் பின்னரான சிறுகதைப் பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும்
13. தெய்வம் – சடங்கு – மரபு: வன்னி நிலமும் கையளிப்புகளும்
14. வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும்
15. மரபும் நவீனமும்: மன்னார்ப்பண்பாட்டு இடையசைவுகள்
16. திரையும் நிஜமும்
பங்கேற்பாளர்கள் அனைவரையும் உரையாடலில் இணைப்பதற்கமைவாக ஒவ்வொரு முன்வைப்புகளையும் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கேள்விகள், மாற்றுக் கருத்துகள், மேலதிக விரிப்புகளை நோக்கியதாக உரையாடல்கள் நிகழும். புத்தகக் காட்சி மற்றும் விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறும்படங்கள், ஆவணப்படங்கள், விவரணப்படங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்ய விரும்புவோர் எடுத்து வரலாம். அதற்குரியவர்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு கேட்கிறோம். ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சிகளும் உண்டு. ஒருங்கிணைப்பு – சதீஸ்ராஜா, மு.தமிழ்ச்செல்வன்.
இலக்கியச் சந்திப்பில் பங்கு பற்ற விரும்புவோர் கீழுள்ள மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்க.
litmeetvanni@gmail.com
தொலைபேசி எண்கள்
0770871681, 0777577932