பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு & நல்லதோர் வீணை செய்து – ஆர்வலகளுக்கான அழைப்பு

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது. பதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். இதில் பத்து நாடகக் கலைஞர்கள் பத்து நிமிடத்திற்குள் ஒரு சமூக பிரச்சனையை அல்லது விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வீதிகளில் கலைத்தன்மையோடு நடத்திக் காட்டுவர்.இதற்காக பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீதி நாடகம் தொடர்பாக சில மாதங்கள் பயிற்ச்சியளித்தப் பின் அவர்கள் வீதி நாடகங்களை அரங்கேற்றுவர். இதில் நீங்களும் பங்கேற்கலாம்.

இதற்கான நிபந்தனைகள்:

ஆர்வலர் அதிகமாக இலக்கிய அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அதிகம் இலக்கியத்தை படிக்கச் வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும்.

சமூகத்தின் பால் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்.

இதில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் கீழ்க் கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

9840698236, 9894422268

editor@thamizhstudio.com
http://thamizhstudio.com/others_pp.php


நல்லதோர் வீணை செய்து – ஆர்வலகளுக்கான அழைப்பு

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவில் உலகின் மிக சிறந்த இலக்கிய சிறுகதைகளை குறும்படங்களாக எடுப்பதற்கு நல்லதோர் வீணை செய்து என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக இலக்கியங்களில் வெளிவந்துள்ள (குறிப்பாக தமிழில்) சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதனை குறும்படமாக எடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சிறந்த சிறுகதை குறும்படமாக உருமாறும். திரைப்படத் துறை மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வமுள்ள பத்து ஆர்வலர்களை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து அவர்களுக்கு இது தொடர்பாக பயிற்சியளித்து விரைவில் இந்த திட்டத்தை தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உங்களுக்கு ஆர்வமிருப்பின் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது மின்னஞ்சல் செய்யவும்.

9840698236, 9894422268
editor@thamizhstudio.com

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_3.php

அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com