பதிவுகளில் அன்று: நா.முத்து நிலவன் கவிதைகள்!

– பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து  வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை  ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். – பதிவுகள் –


நா.முத்து நிலவன்

பதிவுகள் ஆகஸ்ட் 2004 இதழ் 56
1. எங்கள் தேசம் இந்திய தேசம்!

(NCERTவெளியிட்டுள்ள ‘ஜிந்த் தேஷ்கீ நிவாஜி’ எனும் இந்திப்  பாடலின் ‘இசைபெயர்ப்பு’ )

பல்லவி
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
எல்லாரும் சகோதரர்கள்!

சரணங்கள்
வேறு வேறு வண்ணப் பூக்கள்
சேர்ந்த வாச மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறென் றாலும்
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! (எங்கள் தேசம்…

சிந்து கங்கை பிரம்ம புத்ரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்! (எங்கள் தேசம்…

Continue Reading →

பதிவுகளில் அன்று: ப.வி.ஶ்ரீரங்கன் கவிதைகள் மூன்று: அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…, தொப்புள் கொடி & ஆவீன மழைபொழிய இல்லம் வீழ… (சின்னக் கதை)

-பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து  வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை  ஆவணப்படுத்த வேண்டுயது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். – பதிவுகள் –


ப.வி.ஶ்ரீரங்கன்
1. பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63
அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…

அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,

கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

Continue Reading →

அ.ந.க.வின் கவிதைகள், நாவல் மனக்கண் மின்னூல்களாக…

அ.ந.க.வின் மனக்கண் மின்னூலாக

இதுவரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் இரண்டு நூல்கள் அச்சு வடிவில் வெளியாகியுள்ளன. ஒன்று தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளியான ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது தேசிய கலை இலக்கியப் பேரவையூடாக வெளியான ‘மதமாற்றம்’ நாடகம், தற்போது பதிவுகள்.காம் வெளியீடுகளாக அவரது கவிதைகள் தொகுப்பு மற்றும் ‘மனக்கண்’ நாவல் ஆகியவை வ.ந.கிரிதரனின் விரிவான முன்னுரைகளுடன் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. அவற்றை நூலகம் இணையத்தளத்தின் நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
‘எண்ணிம எழுத்தாவணங்கள்’ பிரிவில் வாசிக்கலாம்.

நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
‘எண்ணிம எழுத்தாவணங்கள்’ பிரிவு உண்மையில் மிகுந்த பயனுள்ள பிரிவு. மின்னூல்களை இன்றைய வடிவங்களாக அங்கீகரித்து உருவாக்கப்பட்ட பிரிவு. இதுவரை அச்சேறாத தம் படைப்புகளை எழுத்தாளர்கள் மின்னூல்களாக்கி ஆவணப்படுத்த வழியேற்படுத்தியுள்ளது. இதனை எழுத்தாளர்கள் முறையாக, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆக்கங்களைத் தொகுத்து அவற்றைப் பிடிஃப் கோப்புகளாக்கி நூலகம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: noolahamcollections@gmail.com

Continue Reading →

ஆய்வு: “காயி” (காற்று) – நீலகிரி படகர் இன மக்களின் வழக்காற்றியல் பார்வை

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.

பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.

Continue Reading →

தொல்காப்பியர் யார்?

தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.

Continue Reading →

மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

– நூல் அறிமுகம் பகுதியில் உங்கள் நூல்கள், மின்னூல்கள் மற்றும் ஏனைய நூல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com  – பதிவுகள் –


மின்னூல்: காணாமல் போன தேசங்கள்! – நிர்மல் –

மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

அன்பு வணக்கம், என் பெயர் நிர்மல், நான் உங்கள் இணைய தளத்தை இணையத்தில் தேடும் பொழுது கண்டடைந்தேன். மிக்க தரமான தகவல்களை சிரத்தையோடு தரும் தளமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.  நான்  கிண்டிலில் ஒரு புக் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  காணாமல் போன தேசங்கள் என்கிற தலைப்பிலான என் புத்தகத்தில் எப்படி தேசங்கள்  அழிந்தன என்பதையும் , நில வளங்களை சரியாக பங்கீட்டு பல மொழி இனம் கொண்ட நாடுகள் சிறப்பாக வாழ்கின்றன என்பதையும்  எட்டு நாடுகளின் வரலாற்றை   எளிமையாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு ஏற்றது போல எழுதியுள்ளேன். யுகோஸ்லாவியா சிதறியது, கொசோவாவில் நடந்த இன அழிப்பு பற்றி எழுதியுள்ளேன்.

Continue Reading →

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

லதா ராமகிருஷ்ணன்

1. ஆறாத்துயர்

ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.

பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.

இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.

’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.

Continue Reading →

ஆய்வு: குறுந்தொகைப் பாடல்களில் புழங்கு பொருள் பயன்பாடும், பண்பாடும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்கு பொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நில மக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளை காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழி பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

பயன்பாடு:
புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம்.பெரும்பாலான அறிஞர்கள் புழங்கு பொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டை காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

Continue Reading →

மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

செ.மகாலட்சுமிகாப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.

மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்”  (மணி 25 – 228-231)

என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →