‘மாஸ்’ திரைப்படக் கல்லூரியின் குறுந்திரைப்பட விழா

“மாஸ்’ திரைப்படக் கல்லூரியின் குறுந்திரைப்பட விழா எதிர்வரும் சனிக்கிழமை 23-04-2011 அன்று மாலை 4.01 மணிக்கு , தேசிய சினிமாக் கூட்டுத்தாபன அரங்கில் நடைபெறவுள்ளது.  கொழும்பு –…

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் 63 & 64

நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன்உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத்தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் பிறகு நான் பார்க்க நேரவே இல்லை. இப்;போது (2010 வருடக் கடைசியில்) ஷண்முகம் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, தெரியவில்லை. இவ்வளவு அன்னியோன்யமாக வும், பல விஷயங்களில், ஒத்த அக்கறையும் பார்வையும் கொண்டவர்களாக் இருந்த ஒரு நண்பனை பார்க்கவோ நட்பைத் தொடரவோ இல்லாது போகும் என்று அன்று  நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. 

Continue Reading →

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர்சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.

Continue Reading →

கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்”

கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்"இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada.; காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி  தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.

“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம்  ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.

Continue Reading →

UN leak points to ‘crimes against humanity’ in Sri Lanka war

http://www.channel4.com; Saturday 16 April 2011
A leaked United Nations report indicates “credible allegations” of Sri Lanka war crimes. Video first broadcast by Channel 4 News, showing alleged Tamil executions, formed a key part of the evidence. UN leak points to ‘crimes against humanity’ in Sri Lanka warSaturday 16 April 2011 .A leaked United Nations report indicates “credible allegations” of Sri Lanka war crimes. Video first broadcast by Channel 4 News, showing alleged Tamil executions, formed a key part of the evidence.

Continue Reading →

2011 Spring JOBFAIR – 3 JOBFAIRS – HAMILTON, TORONTO, MISSISSAUGA – Google Napp Canada

JOB FAIR By GOOGLE Napp Canada

JOBFAIR 2011 – (1)   THURSDAY APRIL 28 – HAMILTON Convention Centre, 1 Summers Lane, Hamilton ON – Please send this info to friends
                         (2)   Thursday May 5 – TORONTO Centennial College Conf. Centre,
                         (3)   Thursday May 19 – Mississauga International Centre 

TIME:     10:00AM – 3:00PM

Jobseeker FREE REGISTRATIONhttp://www.nappcanada.com/attendeeregistration.php

ADMISSION:    FREE
PARKING:       FREE (Toronto and Mississauga)

Continue Reading →

‘கண்ணீர் வரைந்த கோடுகள்’ கவிதைத் தொகுப்பு மீதான ஒரு விமர்சனப் பார்வை

வெலிகம ரிம்ஸாகஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் ‘கண்ணீர் வரைந்த கோடுகள்’ என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து,  வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 

Continue Reading →

மீள்பிரசுரம் – பி.பி.சி (தமிழ்) : ‘இறுதிப் போரில் காணாமல் போனோர்’

ரமேஸ் இராணுவத்தால் விசாரிக்கப்படுவதாக காட்டும் படம் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார்.  கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Continue Reading →

நடிகை சுஜாதா யாழ்ப்பாணத்தில் பிறந்தாரா?

நடிகை சுஜாதாஎழுத்தாளர்  குரு அரவிந்தன்நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள்.  திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Continue Reading →