[பதிவுகள் மே 2005 (இதழ் 65) இதழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ என்னும் சிறுகதை பற்றி ஆதவண் தீட்சண்யா எழுதிய ‘படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல’ என்னும் கட்டுரை தொடர்பாக சிறு விவாதமே நடைபெற்றது. அதில் எழுத்தாளர்களான ரவிகுமார், யமுனா ராஜேந்திரன், R.P.ராஜநாயஹம் மற்றும் புதியமாதவி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு பதிவுக்காக அவ்விவாதம் இங்கே யூனிகோட்டில் மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளது.]
பதிவுகள் மே 2005; இதழ் 65.! தமிழ்நாடு!
படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல… – ஆதவன் தீட்சண்யா –
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.
Continue Reading →