அன்புடையீர், வணக்கம், புத்தகம் பேசுது ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது. புத்தகம் பெறுவதற்கு சந்தா செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு ரூ.75 அனுப்பவும் இச்சலுகை ஏப்ரல் 23, உலக புத்தகதினம்…
உலகம்
இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள்
ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்
அத்தியாயம் ஒன்று: ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து ‘அமெரிக்கா’ என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன ‘தாயகம்’ சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து ‘அமெரிக்கா’ என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]
அத்தியாயம் ஒன்று: ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து ‘அமெரிக்கா’ என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன ‘தாயகம்’ சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து ‘அமெரிக்கா’ என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]
பதிவுகள் விவாதம்: ஸைபர் வெளியும் மனித உடல்களும்!
– யமுனா ராஜேந்திரன் –
முதலில் ஸைபர் வெளி ஜனநாயக வெளி என்பதை திட்டவட்டமாக தெளிவபடுத்தி விட வேண்டியிருக்கிறது. தணிக்கை என்பதைத் தகர்த்திருக்கிற வெளி இது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவும் இந்தியாவும் கூட ஸைபர் வெளியைத் தம் நிலப்பிரப்பில் கட்டப்படுத்த பற்பல சட்டதிட்டங்களை வகுத்துவருவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய அறிவுஜீவி என்பவன் யார் எனும் பிரம்மாண்டமான கேள்வியையும் ஸைபர் வெளி எழுப்பியிருக்கிறது. கல்வித்துறைசார் பல்கலைக் கழக அறிவுஜீவிகள், வாய்ப்புப் பெற்ற மரபுசார் அறிவாளிகள் மேட்டுக்குடியினர் ஆர்வமுள்ள தேடித் திரியம் சாதாரண மனிதன் போன்றவர்களுக்கிடையிலான அறிவதிகார எல்லைகளை இவ்வெளி உடைத்திருக்கிறது. முக்கியமான ஆதார நூல்கள், சிந்தனையாளர்களின் தொகுப்பு நூல்கள், சிறப்புத்தறைசார் கட்டுரைகள் அனைத்தையும தேடலுள்ள வாசகன் இன்று எந்த அதிகார எல்லைகளையும் தாண்டாமல் ஸைபர் வெளியில் நேரடியாகப் பெற்றுவிட முடியும்.
எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து
தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.
வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்
கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை.
தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று.
புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க
ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார்.
நினைவுகளின் சுவட்டில் – (60)
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா? நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா? பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா? இங்கே ஊரில் அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர்களும் பேசக்கேட்டு. அவருடைய எழுத்தில் காணப் படும் ஃப்ரெஞ்சு பாதிப்பு பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டதாக நினைப்பு. ஆனால் காக்கநாடனைப் படிக்கக் கிடைத்தது இப்போது தான். சாகித்ய அகாடமிக்காக நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ள சிறு கதைகள் சிலவற்றின் தொகுப்பு “யாழ்ப்பாணப் புகையிலை” மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிர்மால்யா நிறையவே மொழி பெயர்த்து வந்துள்ளார். காக்க நாடன் கேரள சாகித்ய அகாடமி விஸ்வரூப பரிசு போன்றவை மட்டுமல்ல, தில்லி சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள சிறு கதைத் தொகுப்பு என்று இப்புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது. அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்யோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.
வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.
அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.