ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு

-புலோலியூர் ஆ இரத்தினவேலோன்-கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.

புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.

Continue Reading →

வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும்

எழில்வேந்தன்அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான்  பதிலுக்குக்  கேட்டேன். அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான  பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும்  பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர்,  ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.  இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.

Continue Reading →

முகநூல்: புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி….

87, 88இல் இருந்து புகலிடச் சூழலையும், வாழ்வனுபவங்களையும் பாடுகளமாகவும், பாடுபொருளாகவும் வைத்து அன்றைய புகலிடச் சஞ்சிகைகளில் ஏராளமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. முயன்றால் ஆயிரம் இத்தகைய கதைகளைத் தொகுக்க…

Continue Reading →

சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் – கமலாதேவி அரவிந்தன்

கமலாதேவி அரவிந்தான்இலக்கியமும் வாசிப்பும்
பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.

ஒரு நகைச்சுவைத் துணுக்கு:
டாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும்.
நோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.

இதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும்  நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’  என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.

ஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்டு உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.

Continue Reading →

கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ் புதினங்கள்

குரு அரவிந்தன் இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே!

Continue Reading →

சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை

[ஜூலை 2009 இதழ் 115  மார்ச் 2010  இதழ் 123  வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை’ என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு,  படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள்-]

1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்

- ஜெயந்தி சங்கர் - சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், ‘இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!’, என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ‘வாழ்க்கையில் இலக்கியம்’ என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

Continue Reading →

சிங்கப்பூர் சிறு கதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்

சிங்கப்பூர் சிறு கதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்சீனர், மலாயர், இந்திய வம்சாவழியினர் , யுரேஷியர் மற்றும் இதரர் என்னும் பல்வேறு இனம் மற்றும் மொழிபேசுகின்ற குடிமக்களையும் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வோரையும் கொண்ட சிங்கப்பூரின் இன்றைய மக்கள் தொகை 53 லட்சம். இவர்களுள் இந்திய வம்சாவழியினர் மட்டும் சுமார் 9 விழுக்காடு. இவர்களுள் தமிழ் பேசுவோர் 3.2 விழுக்காட்டினர். இவ்வாறு குறுகிய எண்ணிக்கையில் தமிழரும் தமிழ் பேசுவோரும் வாழ்கின்ற நாடாக வளமிக்க சிங்கப்பூர் இருந்தாலும் மலாயாவிலிருந்து பிரிந்து சுதந்திரக் குடியரசாக 1965 ல் பிரகடனப்படுத்தப்ட்டதிலிருந்து  கீழ்த்திசை நாடுகளின் வளர்ச்சிச் சுடரொளியாய் பரிணமிக்கும் இந்நாடு தமிழ் மொழிக்குத் தந்திருக்கும் தகுதி உயர்வானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். கல்வித்துறையில் இங்குள்ள பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் பாடமாகப் பயில முடியும். பொது ஊடகங்களில் சிங்கை வானொலியின் ஒலி  96.8 அல்லும் பகலும் தமிழை ஏந்தி வருகிறது. தொலைகாட்சியின் வசந்தம் சென்ட்ரல் தமிழ் நிகழ்சிகளை நள்ளிரவு வரை நல்கிடக் காண்கிறோம். அச்சு ஊடகங்களில் தமிழவேள் கோ. சாரங்கபாணியவர்களால் 1935-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் முரசு நாளேடு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழாக இங்குள்ள தமிழ் சமூகத்தின் அடையாளமாகத் திகழக் காண்கிறோம். 

Continue Reading →

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

நவஜோதி ஜோகரட்னம்“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.

Continue Reading →

எதுவரை.நெட்: புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

கே.எஸ்.சுதாகர்[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

Continue Reading →

உலகத் தமிழ் இலக்கியம்: பிரெஞ்சுத் தமிழிலக்கியம்

- நாகரத்தினம் கிருஷ்ணா -[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை ‘பதிவுகள்’ எதிர்பார்க்கின்றது – பதிவுகள் – ]

மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது. – மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக்கூடியதும் இலக்கியம்; – தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்; பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம். – இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம்,  ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக அக்களத்தை தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக்கொண்டிருக்கின்றன.  “அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் – என்கிறார்  முனைவர் கா. சிவத்தம்பி. பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.

Continue Reading →