0
1. மரணத்தின் தேதி!
இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!
0
1. மரணத்தின் தேதி!
இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!
1. புதிய சட்டங்கள்!
வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்…
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம். 15.03.2011 அன்று அண்ணா இணையதளத்தில் சேர்க்கப்பட்ட பக்கங்கள்பார்க்க http://www.arignaranna.info நன்றி.இரா.செம்பியன்அண்ணா பேரவை(R.Sembian,Anna Peravai)Mob:- 09380552208
Canadian writer Rohinton Mistry has been shortlisted for the lucrative Man Booker International Prize.
The celebrated author of A Fine Balance is one of 13 finalists in line for the award, worth roughly $93,000.
பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND – WFB) என்ற அமைப்பு தனது முக்கியப் பொறுப்புகளில் பார்வையற்றவர்களைக் கொண்டிருப்பது. உரிய ஆதரவும், வாய்ப்புகளும் சமூகத்திலிருந்து கிடைத்தால் பார்வையற்றவர்களால் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும்; சமூக நலனுக்குச் சீரிய முறையில் பங்காற்ற முடியும் என்ற உண்மை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் முனைப்போடு இயங்கிவரும் இவ்வமைப்பு இந்தக் குறிக்கோளோடு விழிப்புணர்வுக் கண்காட்சிகள் நடத்தியும், பார்வையற்றோர் உரிமைகள், திறமைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தியும், வருடாவருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, +2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணாக்கர் களுக்கும், பார்வையற்ற ஆசிரியர் பயிற்சியில் முதல் மதிப்பெண் எடுப்பவர், தேசியப் பார்வையற்றோர் நிறுவனம் – பிராந்தியக் கிளை(NATIONAL INSTITUTE FOR THE VISUALLY HANDICAPPED REGIONAL CENTER)சார்பாய் நடத்தப்படும் பயிற்சிவகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் ஊக்கமளிப்பதாய் பரிசுத்தொகை அளித்தும், பல்துறைகளில் சிறந்து விளங்கும் பார்வையற்றத் திறமைசாலிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் சாதனையாளர் விருது வழங்கியும் பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி வருகிறது. தவிர, பார்வையற்றவர்களுக்கான நன்னலப் பணியில் ஈடுபடுபவர்களையும், பார்வையற்றவர்களின் பிரச்னைகளிலும், பணிகளிலும் பங்கெடுத்து சகமனித நேயத்துடன் இயங்கிவரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பார்வையற்றவர்களின் நண்பன்(FRIENDS-OF-THE-BLIND) விருது வழங்கியும், பார்வையற்றோர் குறித்த, மற்றும் பார்வையற்றோரால் படைக்கப்பட்ட எழுத்தாக்கங்களை நூலாக வெளியிட்டும் வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:
பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 37 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் மார்ச் 27, 2011 ஞாயிறு…
‘மகாகவி’ மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11 கவிஞர். வதிலைபிரபாதலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்ஆசிரியர், மகாகவி மாத இதழ்ஒற்றைதெரு, வத்தலகுண்டு…
ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]
1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்
– சு. குணேஸ்வரன் -=
1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும், ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும, புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)