ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. ‘ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை’ என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட. இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.
19-03-2011
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு. சனிக்கிழமை, 19-03-2011 இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)
http://thamizhstudio.com/thodarbukku.php இந்த மாதம் திரையிடப்படும் படங்கள். இந்த மாதம் சேகர் தத்தாத்ரே இயக்கிய “புலிகளின் ரகசியங்கள்” ஆவணப்படமும், ஆண்டோ இயக்கிய “புலி யாருக்கு” ஆவணப்படமும், அஜய் இயக்கிய பினாயக் சென் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
[மே15, 2011 – மே 22, 2011 வரை] நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22…
“தம்மையா சிதம்பரப்பிள்ளை ‘சமதர்மக் கூட்டுறவுச் சிற்பி’” என்ற தொகுப்பு நூல் நேற்று எனது கைக்குக் கிட்டியது. பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் நூலாக இருந்தது. அவருடைய தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் பக்கங்கள் ஊடே பற்றிக் கொண்டே மெல்லென நகர முடிந்தது. அத்துடன் அவரது தன்னலமற்ற சமூகப் பணிகளையும் நினைவு கூர வைத்தது. எமது வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் யாழ் மண்ணில் வாழ்ந்தவன் நான். அக்காலத்தில் அவரது நட்பும் ஆதரவுக் கரமும் கிட்டியது எனக்கு கிடைத்த பாக்கியமாகும். எனக்கு மட்டுமல்ல வடமராட்சி மண்ணில் வாழ்ந்த பலரும் அவரால் மகிழ முடிந்திருக்கிறது. எமது வாழ்வும் பணியும் எங்களுக்காக என்றிருக்கக் கூடாது. மக்களுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக, அவர்கள் துயர் துடைப்பதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்வின் கூடாகச் செய்து காட்டியவர் அவர். அவரது வாழ்வின் பல அத்தியாயங்களை நூலின் பக்கங்களுடே தரிசிக்க முடிந்தது.
[‘நிகழ்வுகள்’ பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் – பதிவுகள்] நாள்: சனிக்கிழமை (12-03-2011). இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
[‘நிகழ்வுகள்’ பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் – பதிவுகள்] ‘சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம். இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள். பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது. ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.
‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறையின் 3வது நிகழ்வு. ஏப்ரல் மாதம் 9ந்திகதி மாலை 6:00 மணிக்கும், 10ந்திகதி மாலை 4:00 மணிக்கும் 1785 ‘பிஞ்ச் அவென்யு’ மேற்கில் அமைந்துள்ள…
[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான ‘நானா’வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் ‘நானா’வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம்]. உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. ‘பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!’ என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.
‘பதிவுகள்’ பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ ஆய்வுக்காக ‘பதிவுகள்’ பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.