சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.
நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.
நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட ‘சார்பியற் தத்துவம்’ (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “…
புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.
தகவல்: மேமன்கவி memonkavi@gmail.com
1. சிக்கலில் சிக்கிய வினாக்கள் மனசெனும் படகில் வினாக்களின் பயணம் துடுப்படிப்பாரின்றி தளும்பி… ததும்பி.. நகர்கிறது தொலைவில் புலப்படும் சஞ்சல சுழலில் சிக்கி தவித்தல் உறுதி செய்யப்பட்ட…
39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல்…
ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) ‘ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையில் தோழர் ‘பாரதிநேசன்” வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்” என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.