Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka By Dr Lionel Bopage President Australian Advocacy for Good Governance in Sri Lanka

Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka


– Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc. Committee: Wimal Jayakody, Viraj Dissanayake, Sithy Marikkar, Siraj Perera, Shyamon Jayasinghe, Sarath Jayasuriya, Sarath Bandara, Saliya Galappaththi, Ranjith Weerasinghe, Prasad Mohotti, Nalliah Suriyakumaran, Lionel Bopage, Larry Marshal, Lal Perera, Jude Perera, Cyril Gunarathne, Chitra Bopage, Athula Pathinayake, Asoka Athuraliya, Ari Pitipana, Anura Manchanayake, Antony Gratian, Ajith Rajapakse –


Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka Inciting violence, hatred and threats against other citizens because of their diverse backgrounds is harmful for sustained peace and reconciliation in Sri Lanka. Ridiculing their religious beliefs and destroying their properties is terrifying for the targeted groups and distressing for the law abiding community members. A free nation shows its maturity by allowing minorities to enjoy the same rights and privileges the rest of the community is entitled to.

In June 1980, Sri Lanka acceded to the International Covenant on Civil and Political Rights (ICCPR), and it came into force in September 1980. Article 17 of the ICCPR provides that “No person shall be subjected to arbitrary or unlawful interference with his privacy, family, home or correspondence, nor to unlawful attacks on his honour and reputation”, and “Everyone has the right to the protection of the law against such interference or attacks”. Article 20(2) states that “any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law”. However, in practice, legislative measures have done little to address or deter the reasons for such unacceptable forms of behaviour. The international experience indicates that racial hatred legislation is not the answer to curb these situations. The use of community education in schools and local communities and mass public education campaigns better serve such purpose.

Continue Reading →

அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்….

அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....இலங்கையின் சுதந்திர தினநாளன்று இலண்டனிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் நடைபெற்ற விவகாரமானது தமிழ் ,சிங்கள அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவலாகியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை வெட்டும் சைகை தற்போதுள்ள சூழலில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் தேவையற்றதொன்று. அவரது செய்கையினை நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகப் பதவிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவின் அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா வரவேற்றுப் பாராட்டிப் பேசினார். இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நிறுத்தி விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் தென்னிலங்கையில் அரசியல்வாதிகளால் இச்சம்பவம் இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டதை அடுத்து , அதற்கு அடிபணிந்த ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அதனை இடை நிறுத்தி அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம் அவர் நாட்டின் ஒரினத்துக்குச் சார்பாகச் செயற்படும் ஜனாதிபதியாகவே தென்படுவார். இணக்க அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இப்பிரச்சினை விட்டு வைக்கவில்லை. அவரும் சூழலுக்கு அடிபணிந்து உடனடியாகப் பிரிகேடியரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறு கோரியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெளிப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியிலுள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளைப்போல் இதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினர்.

இலங்கைத் தூதுவராலயத்தின் முன் அமைதியாக புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது அதனை நடாத்துவதற்கு அனுமதியளித்த ஜனநாயக நாடொன்றில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதனை இவ்விதமானதொரு சைகையின் மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ வெளிப்படுத்திக் கையாண்டிருக்கத்தேவையில்லை. நாட்டில் விடுதலைப்புலிகளுடான யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்னும் இவ்வளவுதூரம் பிரிகேடியர் உணர்ச்சி வசப்பட்டிருக்கத் தேவையில்லை. உண்மையில் இச்செய்கையானது சிறுபிள்ளைத்தனமானது. இருவர் வாக்குவாதப்படுகையில் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பயமுறுத்துவதைப்போன்றது. நாட்டில் 2009இல் யுத்தமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தின் பாதிப்புகள், யுத்தக் குற்றங்கள், தொடரும் இலங்கையிலுள்ள சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரிய முறையில் கிட்டாத நிலையில் இவ்விதமான பொறுப்பற்ற செயல்கள் , நாட்டில் நல்லெண்ணச் சூழல் ஏற்படுவதைத் தாமதமாக்கும். மேலும் தற்போதுள்ள சூழல் மேலுள்ள கவனத்தைச் சீர்குலைத்து , மக்களுக்கு மத்தியில் இனரீதியிலான முரண்பாடுகளை அதிகரிக்கவெவே வைக்கும். அரசியல் நலன்களுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் இவ்விடயத்தை இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கவே முயல்வார்கள்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியருக்கு மீள்பதவியை வழங்குவதற்குப்பதில் , நாட்டின அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும். பிரிகேடியரின் தற்போது பத்திரிகையாளர்களின் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இவ்விதமான விளக்கங்கள் அளிப்பதற்கு முன்னர் இதுபோன்ற செயலினை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே சீர்குலைந்திருக்கும் இனங்களுக்கான உறவுகள் சிறிது சிறிதாகச் சீர்பெற்று வருமொரு சூழலில் இந்தச்சிறு செயலின் மூலம் இலங்கையின் பதவி, இன வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மெல்லுவதற்கு அவலைக்கொடுத்துள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.

Continue Reading →

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)  – சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி.  –


யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.

‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’

எனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.

“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”

நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.

Continue Reading →

2017 ஒரு பார்வை!

2017-2018வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றலிலும் விழுகிறது.

முதலாவதாக சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக ரசியலில் முன்னனியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது ? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வகதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேச தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான சர்வதேச தாக்கத்தையே எற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பசடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்கு துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

Continue Reading →

சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வோம்! செயற்படுவோம்!

“கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்” என்ற…

Continue Reading →

போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம்! – சிவராசா கருணாகரன் –

 - சிவராசா கருணாகரன் - – எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற்  பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால்  `பதிவுகள் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் –


மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.

தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது?  அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் – ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.

Continue Reading →

நினைவு கூர்வோம்: எங்கள் தோழன் கார்த்தி!

கார்த்திகேசன் மாஸ்ட்டர்– கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் ‘மாஸ்ட்டர்’ அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. – பதிவுகள் –


‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.

எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.

கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

Continue Reading →

நினைவு கூர்வோம்: 1966 அக்டோபர் 21 எழுச்சி..! 51 வருட நிறைவு!

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ”சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!” என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் – வீ. ஏ. கந்தசாமி – கே. ஏ. சுப்பிரமணியம் – டாக்டர் சு. வே. சீனிவாசகம் – எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் – கு. சிவராசா – நா. யோகேந்திரநாதன் – கி. சிவஞானம் – கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் – இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 – 11 – 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் – எஸ். டி. பண்டாரநாயக்கா – கே. டானியல் – வி. ஏ. கந்தசாமி – சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

Continue Reading →

Statements by the Prime Minister of Canada on Sri Lanka

The Canadian PM Justin Trudeau -Accountability needed in Sri Lanka – Canadian PM Justin Trudeau

July 24, 2017  – The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the anniversary of Black July:
“Between July 24 and 29, 1983, anti-Tamil pogroms were carried out in Colombo and other parts of Sri Lanka resulting in thousands of deaths and the displacement of countless victims. Today, we join Canadians of Tamil descent and members of the Tamil community to commemorate the 34th anniversary of the events of Black July. As we pause to reflect on the dark days of the Sri Lankan Civil War, we must continue to work to heal the wounds of all those who suffered. Canada welcomes international efforts underway to achieve long-term reconciliation and peace for all Sri Lankans, but we reiterate the need to establish a process of accountability that will have the trust and the confidence of the victims of this war. Canada’s cultural diversity is one of our greatest strengths and sources of pride. As we mark the 150th anniversary of Confederation, let us take the time to recognize the contributions of all who have made Canada their home regardless of their cultural, religious or linguistic background. On behalf of the Government of Canada, I extend my deepest sympathy and support to all those who have suffered immeasurable loss during the Sri Lankan Civil War.”

http://www.adaderana.lk/news/42123/accountability-needed-in-sri-lanka-canadian-pm-justin-trudeau

Continue Reading →

முல்லைமண் (வலைப்பதிவு): தமிழினி. ஒருமுனை உரையாடல்!

– எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் தனது வலைப்பதிவான ‘முல்லைமண்’ணில் தமிழினி பற்றி எழுதியிருந்த மனதைத்தொடும் இந்தப்பதிவு , அமரர் தமிழினியின் இறுதிக்காலத்தின் பலருக்குத் தெரியாத துயர் நிறைந்த  பக்கத்தை விபரிப்பதால்,  ஒரு விதத்தில் தமிழினியின் வரலாற்றை விபரிப்பதால்,  ஆவணச்சிறப்பு வாய்ந்த பதிவாகக் கருதலாம். இக்கட்டுரையின் இன்னுமொரு முக்கிய அம்சம் தமிழினி என்னும் பெண்ணின் உணர்வுகளை அவரது வாழ்வின் இறுதிக்காலத்தின் பின்னணியில் விபரிக்கின்றது. அதற்கு சாந்தி நேசக்கரம் தமிழினியின் நெருங்கிப்பழகிய தோழியாக இருந்ததும் இவ்விதமானதொரு பதிவினை எழுதிட உதவியிருக்கின்றது.  இவ்விதமான காரணங்களினால்  சாந்தி நேசக்கரத்தின் இப்பதிவினை நன்றியுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –


1.

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்'சாந்தி நேசக்கரம்முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை. தமிழினி ! ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு  தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய். தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ. உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம். உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன். ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம். செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய். உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது. செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை. வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய். செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது. புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது. அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.

Continue Reading →