Global Tamil Forum tribute to Sunila Abeyasekara

– 9th September 2013 –

Global Tamil Forum tribute to Sunila Abeyasekara

On the first day of the 24th Session of the United Nations Human Rights Council, we have lost one of the most ardent human rights activist, Sunila Abeyasekara, in Sri Lanka. Sunila represented a unique voice from within the majority Sinhalese community. She fought repression of all forms, be it against Sinhalese, Tamils, women, Muslims and youth. She built an international solidarity network around the globe, which worked on issues of poverty, environment, labour, women’s rights, and emancipation.

Continue Reading →

செப்தெம்பர் 21 தமிழ்மக்கள் சிங்கள – பவுத்த பேரினவாதி மகிந்த இராசபக்சே அவர்களோடு கணக்குத் தீர்க்கும் நாள்!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கின்றன. செப்தெம்பர் 21 இல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வடக்கில் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ள மக்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது பல விதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதே. மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கட்சியோடு மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவத்தோடும் போட்டியிட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு அரசியல் சக்தியாக களம் இறங்கியுள்ளது. பிந்திக் கிடைத்த செய்தியின் படி கிளிநொச்சியில் ததேகூ இன் ஆதரவாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் இராணுவத்தினர் தடைகளைப் போட்டு  வருகின்றனர் என ததேகூ இன் நாடாளுமன்ற   உறுப்பினர்  சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ததேகூ சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை போன்றோரின் வெற்றிவாய்ப்புக்கள் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களுக்காகப் பரப்புரை  செய்கின்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவம் தடுக்கின்றது.

Continue Reading →

Full Speech: UN High Commissioner For Human Rights Navi Pillay At The Press Conference On Her Mission To Sri Lanka

UN High Commissioner For Human Rights Navi PillayGood morning, and thank you for coming. As is customary at the end of official missions such as this, I would like to make some observations concerning the human rights situation in the country.  During my seven-day visit, I have held discussions with President Mahinda Rajapaksa, and senior members of the Government. These included the Ministers of External Affairs, Justice, Economic Development, National Languages and Social Integration, Youth Affairs and the Minister of Plantations Industries who is also Special Envoy to the President on Human Rights, as well as the Secretary of Defence.  I also met the Chief Justice, Attorney-General, Leader of the House of Parliament and the Permanent Secretary to the President, who is head of the taskforce appointed to monitor the implementation of the report of the Lessons Learned and Reconciliation Commission (LLRC). I had discussions with politicians who are not part of the current Government, namely the Leader of the Opposition and the leader of the Tamil National Alliance; in addition I met with the National Human Rights Commission, and a total of eight different gatherings of human rights defenders and civil society organizations in Colombo, Jaffna and Trincomalee. I also received briefings from the Governors and other senior officials in the Northern and Eastern Provinces.

Continue Reading →

மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உள்ளன!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கான  நாளை  தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது.  தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும்  13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.  வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.  அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.

Continue Reading →

‘தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்’

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.

நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.

Continue Reading →

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை (மீள்பிரசுரம்)

[ காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை, ஜூலை 83 இனப்படுகொலையினை நினைவு கூரும் முகமாக நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை (மீள்பிரசுரம்)இலங்கையில் வாழும் ‘தமிழர்கள்’ எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை. தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள். ஒருவர் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் பிறந்து வளர்ந்தவர். காலியில் நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தோம். இப்பொழுது அவருக்கு 53 வயது. நாங்கள் அவரை டேமியன் என்று அழைக்கலாம். டேமியன் உயர்ந்த தொழிலில் இருந்தவர். அவருடைய நண்பர்கள் பலரைப் போல அன்றி, இலங்கையை விட்டு எப்போதுமே வெளியேறாதவர். இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் அவருக்கு இருக்கவும் இல்லை. அவருடைய மனைவி தமிழரல்லர். டேமியனும் மனைவியும் கத்தோலிக்கர்கள். கொழும்பில், காலி வீதியில் இருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தது டேமியனின் வீடு. டேமியனின் தந்தை வழிப் பெயர் தமிழ்ப் பெயராகவே இருந்தது.

Continue Reading →

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்

வே.ம.அருச்சுணன் – மலேசியாநாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன்  ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘லாக்கா’ப்பில் இந்திய இளைஞர்களின்  தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ  என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா? தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின்  மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு  நேசக்கரம் நீட்டக் கூடாதா?

Continue Reading →

நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள்

நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை.  அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.  கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது? ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.

Continue Reading →

Canada Day

Canada Day (French: Fête du Canada) is the national day of Canada, a federal statutory holiday celebrating the anniversary of the July 1, 1867, enactment of the British North America Act, 1867 (today called the Constitution Act, 1867), which united three colonies into a single country called Canada within the British Empire. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day observances take place throughout Canada as well as among Canadians internationally.Canada Day (French: Fête du Canada) is the national day of Canada, a federal statutory holiday celebrating the anniversary of the July 1, 1867, enactment of the British North America Act, 1867 (today called the Constitution Act, 1867), which united three colonies into a single country called Canada within the British Empire. Originally called Dominion Day (French: Le Jour de la Confédération), the holiday was renamed in 1982, the year the Canada Act was passed. Canada Day observances take place throughout Canada as well as among Canadians internationally.

Commemoration
Frequently referred to as “Canada’s birthday”, particularly in the popular press, the occasion marks the joining of the British North American colonies of Nova Scotia, New Brunswick, and the Province of Canada into a federation of four provinces (the Province of Canada being divided, in the process, into Ontario and Quebec) on July 1, 1867. Canada became a kingdom in its own right on that date, but the British parliament and Cabinet kept limited rights of political control over the new country that were shed by stages over the years until the last vestiges were surrendered in 1982, when the Constitution Act patriated the Canadian constitution.

Continue Reading →