புலம் பெயர் தமிழ் இலக்கியம்: ‘பனியும் பனையும்’ நூல் நுழைவாயிலில் ….

பனியும் பனையும்எஸ்.பொ.[ஈழத்து எழுத்தாளர்களில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கி, தனக்கென்றொரு முகாமை உருவாக்கி வெற்றி நடை போடுபவர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள். இவருக்கு அண்மையில் அவரது வாழ்நாள் இலக்கிய சேவையினைக் கெளரவிக்கும் முகமாக கனடாவிலிருந்து இயங்கும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ என்னும் அமைப்பு 2010ற்கான இயல் விருதினை வழங்கிக் கெளரவித்தது. எஸ்.பொ. அவர்கள் தனது மித்ர பதிப்பகம் மூலம் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். இவரது பதிப்பகத்தின் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று ‘பனியும் பனையும்’ என்னும் தலைப்பில் வெளியாகிப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றதைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அறிவர். மேற்படி நூலினை ‘நூலகம்’ இணையத்தளத்தில் வாசிக்க முடியும்.  மேற்படி நூலின் நுழைவாயிலில் எஸ்.பொ. எழுதிய குறிப்புகளையும், நூலிற்கான ‘நூலக’ இணையத் தொடர்பினையும் ‘பதிவுகளி’ன் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம். மேற்படி நூலில் எஸ்.பொ. அவர்கள் சிறுகதைகளை புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதமே அணுக வேண்டுமென்பதே எமது கருத்தும். – பதிவுகள் ]

Continue Reading →

புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

மீள்பிரசுரம்: ‘கூர் 2011’ மலரிலிருந்து.
புலம் பெயரும் மானுட சமுதாயம் ...[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் ‘கூர்’ கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். – ஆசிரியர் ]

Continue Reading →

எண்ணப் பறவை சிறகடித்து …..

உலகம்

இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள்
ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்

Continue Reading →