ஆய்வு: கேடு

முகப்பு

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

“ஆய்வு: திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“

முன்னுரை

திருவள்ளுவர்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின.  அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன.  கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன.  அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர்.  பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர்.  வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

 “ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு
 உயிர் போனாற் பிணமாச்சு உயிர்போ முன்னே
 பூணப்பா வாத பித்த சேத்து மத்தாற்
 பூண்டெடுத்த தேகவளம் புகலுவேனே“

Continue Reading →

ஆய்வு: சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்

முன்னுரை

அவ்வையார்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →

ஆய்வு: பாரதியின் மரபும் மரபு மாற்றமும்

முன்னுரை

மகாகவி பாரதிபேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூற்றாண்டுகள் வாழும் வரங்கேட்ட மகாகவி பாரதி, இம்மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே! புதுக்கவிதையின் பிதாமகனாக, 24 வயதில் அரசியல் பார்வைகொண்ட பத்திரிகையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சமூக சீர்த்திருத்தப் போராளியாக மகாகவி பாரதி திகழ்ந்தார்.  பிராமண சமுதாய மரபுக்கு உட்பட்டு ஏழுவயதில் (1889) உபநயனம் மேற்கொண்டு, 14½ வயதில் அச்சமுதாய மரபுக்கு உட்பட்டு 7 வயதுச் செல்லம்மாவைப் பால்ய திருமணம் செய்து கொண்ட பாரதியின் வாழ்வில் 1898ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது.  அவ்வாண்டின் ஜீன் மாதத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குக் கிளம்புகிறான்.  அத்தை குப்பம்மாளுடன் காசியில் வசித்த பாரதி, அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத்தேர்வில் தேர்வாகி, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் பயின்றார்.  1898 – 1902 வரை நான்கு ஆண்டுகள் காசியில் வசித்த பாரதி, மரபு மாற்றவாதியாக உருமாறினான்.  கம்பீரமான தலைப்பாகை அணிந்தான்.  திறந்த மார்பும் பூணூலோடும் இருப்பதற்குப்பதில் பஞ்சகச்சமும், கோட்டும் அணிந்தான், மழித்த மீசையோடிருக்க வேண்டிய முகத்தில் கம்பீரமான மீசை வைத்தான்.  1882 – 1901  வரை முதல் 20 ஆண்டுகள் பாரதி மரபு சார்ந்து வாழ்ந்ததாகவும், 1902 – 1921 வரை 19 ஆண்டுகள் அனைத்து மரபுகளையும் மாற்றி புதிய மரபு அமைத்ததாகவும் பாரதியைப் பகுத்துப் பார்க்கலாம்.  இக்கட்டுரை பாரதி கட்டிக்காத்த மரபையும் மரபு மாற்றத்தையும் விளக்க முயல்கிறது.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: பேராசிரியர் நா.தர்மராஜன்!

பேராசிரியர் நா.தர்மராஜன்!முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான். இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு  அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.

Continue Reading →

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. –

உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள்.  நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,  பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,

Continue Reading →

புனைவுக் கட்டுரை: வரகு மான்மியம்

1

- ஆசி கந்தராஜா -கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!

‘வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்…, கோயில் விஷயமப்பா…, சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ…’

மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்…? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!

கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவாறு ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று… என ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கலசங்கள் உண்டு. கலசங்களுள் வரகு, நெல்லு, சாமை, குரக்கன் போன்ற தானியங்கள் கும்பாபிஷேகத்தின்போது நிரப்பப்படும். சில கோயில்களில், வரகை மாத்திரம் எல்லாக் கலசங்களிலும் நிரப்புவார்கள். இடியையும் மின்னலையும் தாங்கும் சக்தி வரகுக்கு உண்டென்றும், அது ஒரு இடிதாங்கியாக செயல்படுமென்றும் இதற்குக் காரணம் சொல்லப்படுவதும் உண்டு. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோபுர கலசங்களிலுள்ள தானியங்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு, புதிய தானியங்கள் நிரப்பப்படும் மரபினைக் கோயில் குருக்களும் உறுதி செய்தார்.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய்!

அருந்ததிராய்யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.

Continue Reading →