தாமரைச்செல்வியின் படைப்புகள்: சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?

தாமரைச்செல்வி1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.

Continue Reading →

வாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்!

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை – பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் – ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.

Continue Reading →

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.

Continue Reading →

விலகிச் செல்லும் பாதை: கருணாகரனின் ‘எதுவுமல்ல எதுவும்;’

கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. கருணாகரன்கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் காலப் பகுதியில் போர் நடைபெற்ற ஈழப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட வேறு கவிதைத் தொகுதிகள் ஏதும் இதுவரையில் வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வேறு தொகுதிகள் வரவில்லையென்றால், இந்தக் கவிதைகளே அந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்தக் காலப்பகுதியில் கருணாகரனினால், இலங்கையில், வன்னியில் இருந்து எழுதப்பட்ட இன்னொரு தொகுதிக் கவிதைகள் ஓராண்டின் முன்னர் ‘பலியாடு’ (இந்தத் தொகுதி ‘பலியாட்டின் கண்கள்’ என்றே வந்திருக்க வேண்டும் என்று கருணாகரன் சொல்கிறார்) என்ற தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலை தமிழகத்திலுள்ள வடலி என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்து எஞ்சிய கவிதைகள் ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

மோகமுள் – நாவல் பிறந்த கதை

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

Continue Reading →

தினமணி: சூடாமணி வாழ்கிறார்!

சூடாமணி வாழ்கிறார்ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “த அல்டிமேட் கிஃப்ட்’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்தபின், அவர்கள் எப்படி அதை அழித்துவிட்டு, அவர்களும் உருப்படாமல் போனார்கள் என்று முடித்திருக்கிறார். இளைஞனான மருமான் ஜேசன், மறைந்த தன் மாமா வீடியோவில் தன்னுடன் பேசுவதைப் பார்க்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்வார். நமக்கு இந்த உலகில் கிடைத்திருப்பதெல்லாம், கடவுளின் அன்பினால் மட்டுமே கிடைத்தது என்பதைப் புந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின என்று அவனுக்குக் கூறுவார். எனக்கு உன் மீது சிறிது நம்பிக்கை இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்க முடியும் என்று நம்புகிறேன் என்பார். ஜேசன் கடினமாக உழைத்து, பெரியவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவான். ரெட் ஸ்டீவன்ஸ் சிறுவர் இல்லம், ரெட் ஸ்டீவன்ஸ் நூலகம், மருத்துவமனை, ஏராளமான கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எல்லாம் நடத்த ஒரு பில்லியன் டாலர் அறக்கட்டளை அவன் வசம் ஒப்படைக்கப்படுகிறது முழுப் புத்தகத்தையும்கூடப் படிக்க வேண்டாம். பின் அட்டையை முழுதும் படித்தாலே போதும். நூலின் மையக்கருத்து புலப்பட்டுவிடும்.

Continue Reading →

இலங்கைத் தமிழ் வெளியீட்டுத் துறையின் எதிர்காலம்

ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள். வாசிப்பு என்பது கல்வித் தேவைகளுக்காகவும், அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் இங்கு நிகழ்கின்றது.

Continue Reading →

திண்ணை.காம்: அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்[அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. – பதிவுகள்] எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. உணவை முடித்ததுமே நண்பர்கள் மீண்டுமொரு நடைக்குத் தயாராவார்கள். நான் எனது கூடாரத்துக்குள் சென்றுவிடுவேன். லாந்தர் விளக்கெரியும் ஒரு சிறிய எழுத்துமேசையின் முன்பு அமர்ந்து படிக்கவோ அல்லது எழுதவோ, அக்கணத்தின் மனநிலைக்குத் தகுந்தபடி செய்வேன். அந்த ஊரில் இருக்கும்போதுதான் பெங்களூரிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த காவ்யா பதிப்பகத்தின் தொடர்பு கிடைத்தது. இங்கே இன்று என்னும் இதழையும் வேறு சில சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் காவ்யாவிடமிருந்து வரவழைத்துப் படித்தேன். அவற்றுள் ஒன்று சம்ஸ்காரா என்னும் கன்னட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு.

Continue Reading →

உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் ஆறா வடு

சயந்தனின் 'ஆறாவடு'புதிய மாதவி சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக…? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

Writing vs. Translating

John Bunch: an American, and a professional translator for German to English. He currently lives in Munich, Germany.In reading Chris Durban’s great book, “The Prosperous Translator” (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one’s own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don’t have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see.  No matter how good your translation skill is, if you can’t write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills.  Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don’t know about. I need to keep up.   If your text is 100% “perfect” from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good. 

Continue Reading →