தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்

தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.

தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை ‘பதிவுகள்’ தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து ‘பதிவுகளு’க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது.  தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள்

தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்

- இ. மயூரநாதன் -தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -விக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, “உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது” ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. “கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது” என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.

பல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.

Continue Reading →

பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்

முன்னுரை

  - முனைவர் துரை.மணிகண்டன் ( தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்   கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி.) -”யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள். இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது. இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள் செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த  வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

Continue Reading →

ஈழநாதனின் வலைப்பதிவுகளும், கணித்தமிழ் இலக்கியச் செயற்பாடுகளும்!

அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு  ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார்.  கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. ‘நூலகம்’ தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு  ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார்.  கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Continue Reading →

இணைய இதழ்கள்

இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள்.  அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.  சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன.  சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன.  இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து,  செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம்.  இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது.  இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின.  தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள்.  அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.  சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன.  சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன.  இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து,  செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம்.  இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது.  இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின.  தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.

Continue Reading →

இணையத்தில் தமிழ், இணைய இதழ்கள் பற்றிய கட்டுரைகள் சில.

இணையத்தில் தமிழ்!

– முனைவர் மு. பழனியப்பன் –

இணையத்தின் இதழ்கள்தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

Continue Reading →

இணையமெனும் இனிய வலை

அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை.அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை:  வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும்  இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப்  பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் ‘நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு ‘வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள ‘நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம்.  கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.

Continue Reading →

கூகுல் பல்கலையில் பயில வாருங்கள்!

கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம்.கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.

Continue Reading →

என்னிலிருந்து எனக்கே ….

என்னிலிருந்து எனக்கே ...பதிவுகள் வாசகர்களே! நண்பர்களே! உறவினர்களே! உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.

Continue Reading →

தமிழ் இணைய இதழ்களும், கணித்தமிழும்

[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]

1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்

சு. குணேஸ்வரன் -=

1.0 அறிமுகம்
இணைய இதழ்களும், கணித்தமிழும்புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.

2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்,  ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும,  புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)

Continue Reading →

இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது.

Continue Reading →