வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி
வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !
ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !
இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !
சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !
எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !
முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !
கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !
போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !
ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !
மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !
Continue Reading →