தமிழ் ஸ்டுடியோ : மாற்றம் தந்த இந்திய சினிமா – 1 – திரையிடல் நிகழ்ச்சி.

தமிழ் ஸ்டுடியோ : மாற்றம் தந்த இந்திய சினிமா - 1 - திரையிடல் நிகழ்ச்சி.இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)திரையிடப்படும் படம்: அக்ரஹாரத்தில் கழுதை (இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)
சிறப்பு அழைப்பாளர்: ஆர்.ஆர். சீனிவாசன்
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 21-07-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)

நண்பர்களே, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இனைந்து நடத்தும் “மாற்றம் தந்த இந்திய சினிமா” திரையிடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21-07-2012) தொடங்கவிருக்கிறது.  இதுவரை உலகப் படங்களை மட்டுமே பார்த்து அவற்றை சிலாகித்து நமது சுயம் மறந்து போன இந்த நேரத்தில் நமது இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் சில உலகத்தரத்தில் வெளிவந்துள்ளன என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான மேன்மை மிகு இந்திய சினிமாக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதுவரை இந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, இன்னும் பல மொழிகளில்) வெளிவந்த மிக சிறந்த படங்கள் இந்த திரையிடலில் திரையிடப்படவிருக்கிறது.

Continue Reading →

யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல் [ஜூலை 23, 2012]

யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல்: கலந்தரையாடல் – இணையத்தமிழ்நெறிப்படுத்துபவர்– நிலாந்தன்.இடம் – IDM கணனிக்கல்லூரி(IDM Nation Campus,Address: # 216 Navalar Road, Jaffna.)காலம்– 23.07.2012…

Continue Reading →

‘டொக்டர்’ எஸ்.சிவதாஸ் அவர்களின் ‘நலமுடன் ‘ நூல் வெளியீட்டு விழா

'டொக்டர்' எஸ்.சிவதாஸ் அவர்களின் 'நலமுடன் ' நூல் வெளியீட்டு விழா‘டொக்டர்’ எஸ்.சிவதாஸ் மருத்துவ உலகிலும், இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். ஆரவாரமின்றி அமைதியாக மனநலத் துறையில் தன்னலற்ற அளப்பரிய பணிசெய்பவர். ஆழமான இரசனையுணர்வு கொண்டவர், கவித்துவமிக்க படைப்பாற்றலும் கைவரப் பெற்றவர். சிறந்த புகைப்பட நிபுணருமாவார். ‘நலமுடன்’ என்ற இவரது நூலின் வெளியீட்டு விழா ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற இருப்பது மனநலம் சம்பந்தமான ஒரு சிறப்புரையாகும். ‘மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்’ என்ற தலைப்பில் உளநல மருத்துவத்துறைப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு உரையாற்ற இருக்கிறார். SRM பல்கலைக் கழகத்தில் உளநல மருத்துவத்துறைத் தலைவரான இவர் இந்திய உளமருத்துவ சங்கத்தின் அண்மைக் காலத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக உளமருத்துவ சங்கத்தின் தென்னாசிய வலயத்தில் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.  எமது சூழலில் நிறைந்திருக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய எமது அறிவை வளர்ப்பதற்கும் அத்தகையவர்களுடன் புரிந்துணர்வுடன் நடப்பதற்குமாக அவசியம் கேட்க வேண்டிய உரையாக இது இருக்கும் என நம்பலாம்.

Continue Reading →

‘ரொறான்றோ’வில் நடைபெற்ற ‘தமிழர் மத்தியில்’ நந்தா பற்றிய ‘நினைவுப் பதிவு’!

மேற்படி அந்திரட்டி நிகழ்வையொட்டி 'இராஜேந்திரம் நந்தகுமாரன்' என்னும் நினைவுப் பதிவு மலரும் வெளியிடப்பட்டது.யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்படமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, ‘ரொறான்ரோ’ கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கட்டடக்கலைஞர், கட்டடப்பொறியியலாளர், பதிப்பாளர் எனப் பல்துறைகளில் தன் பங்களிப்பை நிலைநாட்டியவருமான  அண்மையில் மறைந்த ‘தமிழர் மத்தியில்’ நந்தா (நந்தகுமாரன் இராஜேந்திரம்) அவர்களின் அந்திரட்டி நிகழ்வு ஸ்கார்பரோவில் அமைந்துள்ள “The Queen Palace” விருந்து மணடபத்தில் 14.7.2012 சனிக்கிழமை, பிற்பகல் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்வில் நீண்ட நாட்களின் பின் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலை, பொறியியற்துறைப் பட்டதாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  சிவகுமார், கலாஈஸ்வரன், கனகவரதா, யசோதரன், ஜோதிகுமார் மற்றும் கடற்றொழிற் பொறியியலாளரான வரதீஸ்வரன் எனப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு.  நந்தகுமார் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. ‘தமிழர் மத்தியில்’ வர்த்தகக் கைநூல் மூலம் கனடாத் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவொருவர் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பாக TVI தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளரான சிவதாசன், ‘தமிழன் வழிகாட்டி’ செந்தி, ‘மோட்கேஜ்’துறையில் பணியாற்றும் சுரேந்திரன், ‘ரியல் எஸ்டேட்’ துறையில் பணிபுரியும் லோறன்ஸ் பிரின்ஸ், ‘Monsoon’ ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளர் லோகன் வேலாயுதம் எனப் பலரை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.

Continue Reading →

அமீர்கானின் ‘சத்ய மேவ ஜெயதே’: தீண்டாமை – அனைவருக்கும் மதிப்பு!’

அண்மையில் நடிகர் அமீர்கானின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி ‘விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்து கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே!’ 
என்று பாரதி பாடி ஆண்டுகள் பல கடந்தோடி விட்டன. ஆனால் இன்னும் பாரதம் மானுட நாகரிகமே தலை குனியும் வண்ணம் தீண்டாமைப் பேயின் நச்சுக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. அண்மையில் நடிகர் அமீர்கானின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான  ‘சத்ய மேவ ஜெயதே’ என்னும் ‘உண்மைக் காட்சி’ (Reality Show) தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘தீண்டாமை  – அனைவருக்கும் மதிப்பு!'(Untouchability – Dignity for All)’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி அது.  பார்த்தோர் அனைவரையும் நெஞ்சு குலுங்க வைக்கும் நிகழ்வாக அந்நிகழ்சி இருந்தது. ‘இந்தியர்’ என்று பெருமையுறும் அனைவரையும் நாணிக்குனிய வைப்பதாகவிருந்தது அந்த நிகழ்வு.

Continue Reading →

இலண்டனில் செல்வி. கிஷ்ணவி விஜயபாலனின் நடன அரங்கேற்றம்

ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவியான பத்து வயது செல்வி. கிஷ்ணவி விஜயபாலனின் அரங்கேற்றம் லண்டன்  Fairfield மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவியான பத்து வயது செல்வி. கிஷ்ணவி விஜயபாலனின் அரங்கேற்றம் லண்டன்  Fairfield மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

Continue Reading →

சொப்காவின் கனடா பிறந்ததினக் கொண்டாட்டம்

யாழினி விஜயகுமாரின் நடனத்தைத் தொடர்ந்து விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் மாகாணசபைப் பிரதிநிதி டீபிகா டமிர்லா உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து மிஸசாகா கிழக்கு குக்ஸ்வெல் பாராளுமன்றப் பிரதிநிதி திரு. லிஸோன் அவர்களின் உரை இடம் பெற்றது. தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றிய சிலருக்கும், கனடா தினப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சென்ற முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை 01-07-2012 மாலை 6:00 மணியளவில் சொப்கா  (SOPCA) என்றழைக்கப்படும் பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் கனடா பிறந்த தினக் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு மிசசாகாவில் உள்ள ஸ்குயர்வண் முதியோர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பாடப்பட்டு கனடிய தேசியக் கொடி மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. கே. நவரட்ணம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடலும், சொப்கா மன்றத்தின் கீதமும் இடம் பெற்றன.  தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் கனடா பிறந்த தினக்கொண்டாட்டத்தை சொப்பா அங்கத்தவர்களோடு ஒன்று சேர்ந்து பிறந்ததினக் கேக் வெட்டித் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து சொப்கா மாணவி ஜெனிற்ரா ரூபரஞ்சனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.

Continue Reading →

கணையாழி இணைய இதழ் இன்று முதல் வாசகர்களுக்காக … !

நண்பர்களே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. இணைய இதழின் சந்தா விபரங்கள்

– ஜூலை 6, 2012 – நண்பர்களே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. இணைய இதழின் சந்தா விபரங்கள்:

Continue Reading →

நிகழ்வு: கருத்துரை கறுப்பு ஜீலை நினைவாக(ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணி) …

இனத்தைச் சுட்டெரிக்க முயன்ற அந்தக் கரிய நாளை நினைவு கூரும் முகமாக ஒரு கருத்துரை எதிர்வரும்  ஞாயிறு 15.07.2012ல் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. கொழும்பு வெள்ளவத்தையில், 58 தர்மராம வீதியிலுள்ள  பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில்  நடைபெறும்.ஒரு அழைப்பிதழ் கிடைத்தது.பார்த்ததும் நினைவுகள் அலைக்கழிந்தன. மறக்க நினைத்த சம்பவங்கள் தணலாகக் கிடந்து சுடர் வீச முனைந்தது. மூன்று தசாப்தங்களில் கழிந்துவிட்டனவா? நினைக்க ஆச்சரியமாக இல்லை.. வேதனையாகதான் உள்ளது. இனத்துவேசம் கொழுந்துவிட்டெரிய ஒரு தேசம் தனது மக்களில் ஒரு பகுதியினரை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாளில் ஆங்காரமாக இறங்கியது. அதன் வடுக்களைச் சுமந்து திரியும் மக்கள் அதன் வேதனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. யுத்தம் வந்தது. அதுவும் முடிந்தது. ஆயினும் வடுக்களின் வேதனையை ஆற்றும் வழி தெரியாது இந்தத் தேசம் இன்னமும் கையறு நிலையிலிருக்கிறது. இங்கு ஒவ்வாரு இனத்திற்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தத் தேசத்தை ஒவ்வொருவரும் தமது தேசம் என உணரவைக்கக் கூடிய ஒரு தேசியத் தலைவரைத் தேடி இந்தத் தேசம் வடிக்கும் கண்ணீர் வடிக்கிறது.

Continue Reading →

அமைதிக் குழு (Peace Gang) புகைப்படக் கண்காட்சி

சனி, ஜூலை 7, 2012 - யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.சனி, ஜூலை 7, 2012 – யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஆங்கில நிகழ்ச்சித் திட்டமே இந்த கண்காட்சியின் ஆரம்ப நோக்கமாக அமைந்திருந்தது. குறித்த பயிற்சியாளர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்காளிகளாக இருந்து வழிப்படுத்தியுள்ளனர். இதில் சிறுவர்களின் ஓவியங்களும் அவர்கள் எடுத்த ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒளிப்படங்கள் யாவும் தொண்டைமானாறு பிரதேசத்தினை மையமாகக் கொண்டதாகவே இருந்தன. வழிகாட்டிகளின் துணையுடன் ஒளிப்படக்கருவிகளை அவர்களிடமே கொடுத்து கிராமத்தின் பலம் பலவீனங்களை இனங்கண்டு அவைபற்றி சில வரிகளையும் எழுதி அவை காட்சிப்படுத்தப்பட்டன. படங்களுக்கான விளக்கம் தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தன.

Continue Reading →