‘இசை, பாடல், கதை, நடிப்பு, மேடை, ஓவியம், ஒப்பனை, மரபு போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தமிழர்களின் பாரம்பரிய கலையாக கூத்துத் திகழ்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பருத்தித்துறை மாதனை கிராம மைதானத்தில் விடிய விடிய இடம்பெற்ற நாட்டுக் கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாய் பதிந்துள்ளது. தச்சுத்தொழில் சார்ந்த சமூகத்தினர் இந்தக் கூத்து மரபை மிகுந்த செழுமையோடும்இ உற்சாகத்தோடும் பருத்தித்துறையில் நிகழ்த்தி வந்தனர். முழுக் கிராமமே ஒன்று திரண்டு இந்தக் கூத்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது கூத்து முழுச் சமூகம் சார்ந்த கலைமரபாகத் திகழ்ந்தது என்பதை காட்டுகிறது’ என்று ஓவியர் கே. கிருஷ்ணராஜா ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஒழுங்கு செய்திருந்த ‘கூத்து மீளுருவாக்கம்’ பற்றிய கருத்தரங்கில் தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்த மண்ணில் இன்று அதிக தமிழர்கள் வாழும் இடமாகக் கனடா திகழ்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் தாய் மொழியைக் காப்பதில் ஒன்ராறியோ அரசாங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியிருந்தது. அவர்கள் நடத்திய தமிழ் மொழித்திறன் காணல் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 17-06-2012 ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அன்புள்ள தமிழ் நண்பர்களே! “மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன்- அவர் மாண்டுவிட்டாலதைப் பாடிவைப்பேன்- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை- எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லை!” இது போன்ற மணியான கருத்து நிறைந்த…
Citizenship and Immigration Canada welcomes 26 new Canadians to a special citizenship ceremony at The Regional Municipality of York Administrative Centre in the Town of Newmarket. What: 26 new Canadians and their families will come together for a special citizenship ceremony hosted by Citizenship and Immigration Canada and The Regional Municipality of York. Presiding official: Judge Crist Geronikolos. When: Thursday, June 28, 2012 3:00 p.m. Where: The Regional Municipality of York, Administrative Centre, 17250 Yonge Street, Newmarket, ON Special guests: Lois Brown, MP, Newmarket-Aurora, Honourable Charles Sousa – MPP, Provincial Minister of Citizenship and Immigration (TBC) Bill Fisch, York Region Chairman and CEO Frank Scarpitti, Mayor, Town of Markham and Co-Chair of the Community Partnership Council . Media are invited to attend. Photography and audio-visual equipment are permitted. As part of the event, York Region is also celebrating work that has been done on the York Region Local Immigration Partnership initiative (LIP) including the launch of Leading Change for a Stronger Community: Community Partnership Council Collective Action Plan 2012-2015. This three-year plan identifies actions to support the integration of newcomers and enhance welcoming and inclusive communities.
பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 – 07 – 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy – 75018 Paris) ”இலக்கிய மாலை” நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ்பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா”, ‘தினக்குரல்” பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்”, நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்”ää இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் ‘தோட்டத்து மேசையில் பறவைகள்”, இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்” நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ””Le Réveil” ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)
காலம்-30-06-2012 (சனி)
மாலை 5 மணி
இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி )காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி -5 .00 மணி வரைதலைவர்…
அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது.
திருவாளர்கள்:
1. மு.இராமநாதன், சென்னை
2. சைலபதி, சென்னை
3. நா.அனுராதா, மதுரை
4..சுமதிராம், கோவை
5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி
6. பிரபாகர், தக்கலை, கன்னியாகுமரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் 16, 2012 அன்று ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது. முக்கியமாக மூன்று தலைப்புகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. (1) தாயகத்தில் போரினால் இடப் பெயர்வுக்கு உள்ளாகி மக்களது பொருண்மிய வாழ்வாதாரச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (2) தமிழர்களின் அரசியல் எதிர்காலம் (3) ஊடகங்கள் வகிக்கும் பாத்திரமும் பங்களிப்பும் ஆகியவையே அந்தத் தலைப்புகளாகும். அரசியல் கைதிகளின் விடுதலை, சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவத்தால் நில அபகரிப்பு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல், தாயகத்தில் இடம்பெறும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவை பற்றியும் ஆராயப்பட்டன. அஞ்சப்பர் உணவகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் 25 பேர் கலந்து கொண்டார்கள். ததேகூ (கனடா) தலைவர் வே. தங்கவேலு தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் வேறு அமைப்புக்களை சார்ந்த செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்தரமாக புலத்திலும் ஆர்ப்பட்டங்களை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ரொறன்ரோ மாநகரத்தில் உள்ள ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களது ஒத்துழைப்பைக் கேட்பது என முடிவாகியது.
அமர்வு-1 : நூல் அறிமுகம் – பிரக்ஞை
உரை- சபேஸ் சுகுணா சபேசன்
மீரா பாரதி (நூலாசிரியர்- கனடா)
வழிப்படுத்துகை- நா.சபேசன்