அகேனம் (ஃ) விருது குறமகளுக்கு

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்  – குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் ‘அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.

Continue Reading →

காற்றுவெளி ஜூன் 2012 இதழ்!

எழுத்தாளர் முல்லை அமுதனால் வெளியிடப்படும் மாத இதழான ‘காற்றுவெளி’யின் ஜூன் மாத இதழ் வெளியாகியுள்ளது. அதனை வாசிப்பதற்கு இங்கே அழுத்துக.    தகவல்: mullaiamuthan_03@hotmail.co.uk

Continue Reading →

அறிவித்தல்: திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்

அறிவித்தல்: திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்01. நீங்கள் ஜின் ஷைத்தான்களால் பாதிக்கப்பட்டவரா? அப்படியானால் இன்றே இதை வாசியுங்கள். ”37ம் நம்பர் வீடு” (விலை 250 ரூபாய்) (பயந்த சுபாவம் உடையோர்கள் இதை வாசப்பதைத் தவிர்க்கவும்)

02. படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினைகளைத் தரக்கூடிய முக்கிய நூல். “ரோஜாக் கூட்டம்” (விலை 150 ரூபாய்) – சிறுவர் சிறுகதைத் தொகுதி

03. ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம். சர்வதேச போட்டியில் பரிசு பெற்ற விருவிருப்பான நாவல். அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான பல படிப்பினைகளை இந்த நாவலிநூடாகப் பெற்றுக்கொள்ளலாம். “இது ஒரு ராட்சஷியின் கதை” (விலை 250 ரூபாய்)

 04. விருவிருப்பு நிறைந்த திகிலூட்டும் நாவல் “ஓர் அபலையின் டயரி” (விலை 200 ரூபாய்)

Continue Reading →

அரிமா விருதுகள் 2012

                    
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளதுதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு!

 பாலு மகேந்திராநிகழ்வு: அரிய திரைப்படம் திரையிடல்
படம்: சந்தியா ராகம் (இயக்கம்: பாலு மகேந்திரா)
சிறப்பு பங்கேற்பாளர்:பாலு மகேந்திரா
நாள்: 09-06-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை 6:30 மணிக்கு

இடம்: எம்.எம். திரையரங்கம் (M.M. Theater) (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் பெண்கள் விடுதி என்கிற பெயர்பலகையே பெரிய அளவில் இருக்கும்)

வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இதுவரை இரண்டாவது சனிக்கிழமை தோறும் குறும்பட வட்டம் என்கிற நிகழ்வை தொடர்ந்து ஐம்பது மாதங்களாக நடத்தி வந்தது. ஐம்பது மாதமும், இரண்டாவது சனிக்கிழமை சென்னை எழும்பூரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும். குறும்பட பயிற்சி, குறும்படங்கள் திரையிடல், வெள்ளித்திரை இயக்குனர்களுடன், குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடல் என மூன்று பிரிவுகள் நடைபெற்று வந்தன.

Continue Reading →

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா!

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்  “சுடுமணல்” நாவலின்  மலையாள மொழி பெயர்ப்பு நூல்  வெளியிட்டு விழா ஞாயிறு மாலை  காந்திநகர்   மத்திய அரிமா  சங்கத்தில் நடைபெற்றதுதிருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்  “சுடுமணல்” நாவலின்  மலையாள மொழி பெயர்ப்பு நூல்  வெளியிட்டு விழா ஞாயிறு மாலை  காந்திநகர்   மத்திய அரிமா  சங்கத்தில் நடைபெற்றது. சு. மூர்த்தி   ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்), தலைமை தாங்கினார். மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கனடா நாட்டில் வாழும்   தமிழ் எழுத்தாளர் அகில் நூலை வெளியிட மணி (  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்) பெற்றுக்கொண்டார்.. தேசியம் என்பது கற்பிதம் என்பதினை வெளிப்படுத்தும் வகையில் நதிநீர் பிரச்சினையில் தமிழர்கள் அவதியுறுவதை இந்த நாவல் வெளிப்படுகிறது. இது தமிழில் 3 பதிப்புகள் வந்துள்ளது. மலையாளத்தில் சபி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை திருவனந்தபுரத்தைச் சார்ந்த சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.( இதற்கு முன்பே சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. )மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பை  வழக்கறிஞர் ரவி  அறிமுகம் செய்தார்.* மாற்றுக் கல்வி குறித்த நூல்கள் பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” மற்றும் கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்” ஆகியவற்றை  பற்றி மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்), வழக்கறிஞர்கள் நீலவேந்தன், கனகசபை, சிவகாமி,ஈஸ்வரன், இளஞாயிறு, வெற்றிச் செல்வன், நந்த கோபால் ஆகியோர் பேசினர்.

Continue Reading →

வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்!

வசந்தி தயாபரனின் 'காலமாம் வனம்' என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வெள்ளவத்தை 57ம் ஒழுங்கையில் (உருத்தரா மாவத்தை) கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 5.30 மணிக்கு விழா ஆரம்பமாகும். பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தின் பணிப்பாளரான கலாநிதி.செல்வி திருச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். ‘காலமாம் வனம்’ நூல் வெளியீட்டு விழாவில் நூல் வெளியீட்டு உரையை டொக்டர்.எம்.கே.முருகானந்தன்  நிகழ்த்துகிறார். முதற் பிரதியை பெறுபவர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களாகும். சிறப்புப் பிரதியை மூத்த பத்திரிகையாளரான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பெறுகிறார். நூல் பற்றிய கருத்துரையை வழங்க இருப்பவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா ஆவார். இவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழிகள் பண்பாட்டுத் துறைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க இருப்பவர்கள் திரு. திருமதி தெளிவத்தை ஜோசப் அவர்களாவார். இருதய சத்திரசிகி்ச்சைக்கு் பின்னான அவரது முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்படத்தக்கது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாட இருப்பவர் திருமதி சொர்ணலதா பிரதாபன்( ஆசிரியை சென் கிளயர்ஸ் கல்லூரி) ஆவார். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை திரு.மு.தயாபரன் ஆற்ற, இறுதி நிகழ்வாக ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் திருமதி வசந்தி தயாபரன் வழங்குவார்.

Continue Reading →

பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்கு ஒரு இளைய தலைமுறைப் பார்வை

பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்கு ஒரு இளைய தலைமுறைப் பார்வைஅன்புள்ள நவம் அங்கிள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கில் நான் வந்து படப்பிடிப்புச் செய்தமைக்காக நீங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்குச் சும்மா “you are welcome ” என்று மட்டும் பதில் அனுப்ப மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டும் போல இருந்தது. அதனால்தான் சற்று பிந்திவரும் பதில் இது. முதலில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எம்முள் வாழ்ந்த ஒரு பெரியவரின் ஞாபகார்த்த நிகழ்சியைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு. அத்தோடு நீங்கள் எனக்குப் பிடித்தமான காரியத்தைத்தானே உதவியாகக் கேட்டீர்கள். செய்யாமல் விட்டிருப்பேனா? விழாவின் தொடக்கம் ஒரு புது மாதிரியான தொடக்கம். தேசியகீதம் மற்றும் தமிழ் வணக்கம் (நாட்டியத்துடன்) என்பன தன்பாட்டிலேயே நடந்தன. இவை நடைபெறும் போது எல்லோரும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இவை பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என நம்பியதற்கு நன்றி. இல்லாவிடின் வழமைபோல யாரோ ஒருவர் வந்து, “இப்போது இது நடைபெறும் எல்லோரும் எழுந்து…….” என்று மணிக் குரலில் அறிவிப்பு விட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பொன்னான நேரத்தையும் கொஞ்சம் சேமித்தீர்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதமாக தொடங்கியிருந்தும், சிலர் பிந்தியே வந்தனர்..பிந்தி வந்தவர்களில் சில பெரியவர்களும், இப்படியான நிகழ்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் என நாம் நினைக்கின்றவர்களும் அடங்கியிருந்த மாதிரி ஒரு உணர்வு!

Continue Reading →

‘ஸ்காபுரோ சிவிக்சென்ரரி’ல் “தமிழர் மத்தியில்” நந்தாவுக்கு அஞ்சலிக் கூட்டம்

நாளை ஜூன்(JUNE) மாதம், முதலாம் தேதி, வெள்ளிக்கிழமை காலம் சென்ற “தமிழர் மத்தியில்” நந்தா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டமொன்று மாலை 6.00 மணியிலிருந்து…

Continue Reading →

கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா

கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழாகனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா

3 – 06 – 2012, ஞாயிறு மாலை 7 மணி,
மத்திய அரிமா சங்க கட்டிடம்  , காந்தி நகர்,  திருப்பூர்.
முன்னிலை: திருவாளர்கள் பொன்னுசாமி, பிரதீப்குமார், ரங்கசாமி (மத்திய அரிமா சங்க நிர்வாகிகள்) 

Continue Reading →