பருத்தித்துறை அறிவோர் கூடலின் ஏற்பாட்டில் மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதை நூலின் அறிமுகவிழா 14.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க…
இவ்வருடம் (2011) சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப்…
ஆளுமைகளும் அனுபவங்களும் – வ.கீதா (இந்தியா)
வணக்கம்! ஆனந்தவிகனும் , ‘டிஸ்கவரி புக் பேலஸு’ம் இணைந்து முதன் முறையாக ‘டிஸ்கவரி புக் பேலஸி’ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். கழிவு இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம். முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற discoverybookpalace@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பின்பு புத்தகங்களை உறுதி செய்து நாங்கள் பதில் அனுப்பியதும் கீழ் காணும் வங்கி எண்ணில் பணத்தை செலுத்திவிட்டு தகவல் அனுப்பினால் தங்களுக்கான புத்தகம் உடனே அனுப்பப் படும்.
கவிஞரும்,பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில் மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் – ‘பொறுமை’என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்தம்TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி ‘ஜனாதிபதிபதி விருது’, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் ‘தங்கப்பதக்கம்’, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.
பிரான்ஸ்: ‘சமூக பாதுகாப்பு அமைப்பி’ன் மே தின ஊர்வலம் ‘அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஒன்றிணைவோம்’. ‘மெற்றோ’: Voltaire. விரிவான விபரங்கள் (தகவல்: யோகன் கண்ணமுத்து – ashokyogan@hotmail.com…
கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
வணக்கம்.. தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற இருக்கிறது.
மே 8, 2011 அன்று, மறைந்தும் மறையாத முற்போக்கு எழுத்தாளர் அமரர் திரு. எஸ்.அகஸ்தியர் அவர்களின் ‘லெனின் பாதச் சுவடுகள்’ நூல் வெளியீடு! …விரிவான விபரங்கள் கீழே: