கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020

நிகழ்வுகள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020

வணக்கம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவும், நூல் வெளியீடும் வருகின்ற ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11-04-2020) சனிக்கிழமை மாலை கனடா ஐயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் என்பதை அங்கத்தவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Continue Reading →

காலம் தோறும் மாறி வந்த பரத நடன மார்க்கமும் திவ்வியா சுஜேனின் பரத மார்க்கமும் – பாரதி மார்க்கமும்

காலம் தோறும் மாறி வந்த பரத நடன மார்க்கமும் திவ்வியா சுஜேனின் பரத மார்க்கமும் - பாரதி மார்க்கமும்  - பேராசிரியர் மௌனகுரு -
அண்மைக்காலமாக முக நூலிலும் பத்திரிகைகளிலும் பரத அரங்கேற்றங்கள் பற்றிய செய்திகள் மிக அலங்காரமான புகைப்படங்களுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் கொழும்பில் நடைபெறும் பரத நடன அரங்கேற்றங்கள் முக்கிய சில பத்திரிகைகளிள் பெரிய அழகிய புகைப் படங்களுடன் வெளியாகின்றன. சில பத்திரிகைகளில் அவை முழுப்பக்கத்தையே நிரப்பிகொண்டு உறுத்துகின்றன. தரமில்லாத நடனங்களும் அதை நிகழ்த்துவோரும் ஊடக விளம்பரத்தால் உயர்ந்த நடனங்களாகவும் மிகச் சிறந்த நடன தாரகைகளாகவும் கட்டமைக்கப்படுகின்றனர். ஊசியும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் யோக நிலையான பற்றற்ற நிலையை இப்பத்திரிகைகள் அடைந்து விட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.திறமையானவர்கள் இனம் காணப்படுவதில்லை. ஆடுவோர் எல்லாம் நடனக் கலைஞர் ஆக்கப்பட்டு விடுகிறார்கள். தடி எடுத்தோரெல்லாம் தண்டல் காரர் ஆகிவிடுவது போல. ஒரு பரத நடன விமர்சன மரபு எம்மிடமில்லை. இதனால் ஆடும் பரத நடனங்கள் யாவும் அற்புதம் என்றும் ஆடுவோர் அனைவரும் அற்புத நடன மணிகள் என்றும் கூறும் நிலைக்கு அனைவரும் வந்து விடுகின்றனர்

Continue Reading →

கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா

கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா

கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு அரங்கேறியது.

Continue Reading →

லண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா

லண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா‘இறைவனின் புண்ணிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து இறைவனை வழிபட்டு வருவது நீண்ட நெடுங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் யாத்திரையாகும். அதிலும் கைலாச யாத்திரை என்பது கைலயங்கிரியில் வாழும் சிவனைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாகும். கடினமும். ஊக்கமும்.இறைவனின் பெயரருளும் சித்தித்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான யாத்திரையாகும். சில புண்ணிய ஸ்தலங்கள் தரிசிப்பதால் மட்டுமல்ல நினைத்துப்பார்த்தாலுமேகூட அருள் தருகின்ற புண்ணிய ஸ்தலங்களாகும். அந்த வகையில் லண்டன் டாக்டர் அம்பி அவர்கள் ஆகம முறைகளை அனுசரிக்கும் இந்துப் பெருமகனாய் கைலாசத்தை இரண்டு  முறைகள் தரிசித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பயண அனுபவத்தை ஒழுங்காகக் குறித்து அழகிய தமிழில். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நோக்கிலே ‘கண்டேன் கைலாசம்;’ என்ற நூலினை எழுதி வெளியிட்டிருப்பது நாம் பெருமையுடன் பாராட்டவேண்டிய அம்சமாகும்’ என்று பிரம்மஸ்ரீ கைலை நாகநாத சிவாச்சாரியார் ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது தனது ஆசியுரையில் தெரிவித்தார்.

Continue Reading →